இந்தியாவில் 90 சதவீத கார்களுக்கு இன்டர்நெட் வசதி: ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி திட்டம்!

By Saravana Rajan

பல்வேறு அதிரடி திட்டங்களால் தொலைதொடர்பு துறையில் பெரும் பிரளய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ. அடுத்ததாக வாகன துறையிலும் தனது ஜியோ 4ஜி சேவையின் மூலமாக அடுத்த பிரளயத்தை ஏற்படுத்த காய்களை நகர்த்தி வருகிறது.

காருக்கு இன்டர்நெட் இணைப்பு வசதியை அளிக்கும் வகையில் கார் கனெக்ட் என்ற சாதனத்தை ரிலையன்ஸ் உருவாக்கி வருகிறது. இந்த சாதனத்தின் மூலமாக பல்வேறு பயன்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அது என்னென்ன பயன்கள் என்பதை தொடர்ந்து படிக்கலாம்.

இந்தியாவில் 90 சதவீத கார்களுக்கு இன்டர்நெட் வசதி: ரிலையன்ஸ்

இந்த கருவியை காரின் OBD போர்ட்டில் பொருத்திவிட வேண்டும். இது இன்டர்நெட் வசதியை அளிக்கும் ஹாட் ஸ்பாட் சாதனம் போல செயல்படும். பின்னர், கார் உரிமையாளர் தனது மொபைல்போனில் இதற்கான பிரத்யேக அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் 90 சதவீத கார்களுக்கு இன்டர்நெட் வசதி: ரிலையன்ஸ்

இதன் மூலமாக, காரின் எஞ்சின் இயக்கம், எரிபொருள் அளவு, ஆயில் அளவு, பேட்டரி சார்ஜ் அளவு உள்ளிட்ட பல அத்தியாவசிய தகவல்களை மொபைல்போனில் உள்ள ஜியோ அப்ளிகேஷன் மூலமாக வாடிக்கையாளர்கள் பெற முடியும். கார் கதவுகள் சரியாக பூட்டவில்லை என்றாலும் இந்த மொபைல் அப்ளிகேஷன் எச்சரிக்கும்.

இந்தியாவில் 90 சதவீத கார்களுக்கு இன்டர்நெட் வசதி: ரிலையன்ஸ்

இதுதவிர, ரிலையன்ஸ் ஜியோ கார் கனெக்ட் அப்ளிகேஷன் மூலமாக சினிமா மற்றும் பாடல்களை தங்கு தடையின்றி பெறுவதற்கான வாய்ப்பையும் பெற முடியும். கார் கனெக்ட் சாதனத்தில் ஜியோ சிம் கார்டு ஒன்று பொருத்தப்பட வேண்டியிருக்கும்.

இந்தியாவில் 90 சதவீத கார்களுக்கு இன்டர்நெட் வசதி: ரிலையன்ஸ்

இந்த அப்ளிகேஷன் கார் உரிமையாளர்களுக்கு மிகச்சிறப்பான பயன்களை தரும் என்று ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் கனெக்ட் திட்டம் அறிமுகம் குறித்து இப்போதைக்கு தகவல் இல்லை. ஆனால், ரிலையன்ஸ் ஸ்டோர்களில் இது வாடிக்கையாளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் 90 சதவீத கார்களுக்கு இன்டர்நெட் வசதி: ரிலையன்ஸ்

நிச்சயம் இது ஒரு எளிமையான சாதனமாகவும், அதிக பயன்களை தரும் வசதியாகவும் இருக்கும் என்று நம்பலாம்.

இந்தியாவில் 90 சதவீத கார்களுக்கு இன்டர்நெட் வசதி: ரிலையன்ஸ்

ஆன்லைனிலையே கார் இன்ஸ்யூரன்ஸ்... க்ளிக் செய்க!

Most Read Articles
English summary
Read in Tamil: Reliance Jio Developing Car Connect; Plans To Connect Internet To 90 Percent Vehicles.
Story first published: Tuesday, September 13, 2016, 13:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X