க்விட் செய்த மாயம் - 173% வளர்ச்சி பதிவு செய்த ரெனோ

By Ravichandran

க்விட் கார் மாடலானது, ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ நிறுவனம் தயாரித்து வழங்கும் மாடல் ஆகும். வெகு ஜனங்களுக்கு ஏற்ற விலை குறைந்த மாடலாகவும், ஈர்க்கும் டிசைன் உள்ளதாலும், இது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

2016 ஜூன் மாதத்தில், இந்திய வாகன சந்தைகளில் ரெனோ நிறுவனம் 173% வளர்ச்சி பதிவு செய்தது. ஜூன் மாதத்தில் மட்டும் ரெனோ நிறுவனம் 4,340 க்விட் மாடல் கார்களை விற்பனை செய்ததது. ஒட்டு மொத்தமாக, ரெனோ நிறுவனம், ஜூன் மாதத்தின் போது, 11,837 கார்களை விற்பனை செய்தது. இதில், அதிகாப்படியான விற்பனை ரெனோ க்விட் மாடல் கார்களாலேயே சாத்தியமானது.

renault-173-percent-growth-june-2016-dashing-sales-kwid

தற்போதைய நிலையில், ரெனோ நிறுவனத்திற்கு, இந்தியாவில் மொத்தம் 210 ஷோரூம்கள் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரெனோ நிறுவனம், இந்தியாவில் உள்ள தங்களின் மொத்த ஷோரூம்களின் எண்ணிக்கையை 270 ஷோரூம்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். ரெனோ நிறுவனம், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பிந்தைய சேவைகள் விஷயத்தில் நல்ல அனுபவங்கள் வழங்க எண்ணம் கொண்டுள்ளனர்.

2015-ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், ரெனோ நிறுவனம் 23,346 கார்களை விற்பனை செய்தது. ஆனால், அதே போல், 2016-ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், ரெனோ நிறுவனம் 61,895 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த அபாரமான விற்பனை சாதனைகள் அனைத்தும், க்விட் மாடலின் அறிமுகம் செய்த மாயம் தான் என்றால் அது மிகையாகாது.

Most Read Articles
English summary
Renault India has witnessed very explosive growth in Indian Automobile market, due to immense sales of Renault Kwid. Kwid is being sold as new and affordable vehicle for the masses. During June 2016, France-based car manufacturer experienced growth of 173 percent in domestic sales. In June 2015, Renault sold 4,340 models in India. To know more, check here...
Story first published: Monday, July 4, 2016, 10:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X