ரெனோ அலாஸ்கன் பிக்கப் டிரக்கின் படங்கள், பிற விவரங்கள் வெளியாகியது

By Ravichandran

ரெனோ நிறுவனம் வழங்கும் ரெனோ அலாஸ்கன் பிக்கப் டிரக்கின் படங்கள், இதர விவரங்கள் வெளியாகியுள்ளது.

ரெனோ அலாஸ்கன் பிக்கப் டிரக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ரெனோ அலாஸ்கன் பிக்கப் டிரக்...

ரெனோ அலாஸ்கன் பிக்கப் டிரக்...

ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ நிறுவனம் தான், இந்த ரெனோ அலாஸ்கன் பிக்கப் டிரக்கை தயாரித்து வழங்குகிறது.

ரெனோ அலாஸ்கன் பிக்கப் டிரக், நிஸான் நவாரா என்பி300 அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

ரெனோ அலாஸ்கன் பிக்கப் டிரக்கின் அலுவல் ரீதியான அறிமுகம் இந்த 2016 பாரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்படுவதாக இருந்தது.

ஆனால், எதிர்பாராத நேரத்தில், ரெனோ அலாஸ்கன் பிக்கப் டிரக்கின் படங்கள் மற்றும் இதர தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரெனோ அலாஸ்கன் பிக்கப் டிரக், இந்த ஆண்டின் வரும் மாதங்களில் கொலம்பியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, ரெனோ அலாஸ்கன் பிக்கப் டிரக்கின் முன் பக்க தோற்றம் வழக்கமான எஸ்யூவி போன்ற துணிச்சலான தோற்றத்தை, சற்று நவீனத்துவத்துடன் கொண்டுள்ளது.

இது தனித்து தெரியும் வகையிலான ஃபிரண்ட் கிரில் கொண்டுள்ளது. இதன் மத்தியில் தான் ரெனோ பேட்ஜ் பொறுத்தபட்டுள்ளது.

ரெனோ அலாஸ்கன் பிக்கப் டிரக்கிரகு பொருத்தபட்டுள்ள மெல்லிய ஹெட்லைட்கள் இதற்கு புதுமையான தோற்றத்தை வழங்குகிறது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

ஸ்டீயரிங் வீலை தவிர்த்து, ரெனோ அலாஸ்கன் பிக்கப் டிரக்கின் இன்டீரியர், நிஸான் நவாரா என்பி300 மாடலின் இன்டீரியரை போன்றே உள்ளது.

ரெனோ அலாஸ்கன் பிக்கப் டிரக்கின் டாப் என்ட் வேரியன்ட்களுக்கு, வண்ண டிஸ்பிளே மற்றும் டியூவல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் உடைய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2.3 லிட்டர் இஞ்ஜின்;

2.3 லிட்டர் இஞ்ஜின்;

இஞ்ஜின் தேர்வுகளை பொருத்த வரை, ரெனோ நிறுவனம் இந்த ரெனோ அலாஸ்கன் பிக்கப் டிரக்கினை, 2.3 லிட்டர் டீசல் இஞ்ஜினை, 2 பவர் வெளிப்பாடுகளுடன் வழங்க வாய்ப்புகள் உள்ளது.

இதன் 2.3 லிட்டர் டீசல் இஞ்ஜின், 158 பிஹெச்பி மற்றும் 187 பிஹெச்பி என 2 வகையிலான திறன் வெளிப்படுத்தும்.

2.5 லிட்டர் இஞ்ஜின்;

2.5 லிட்டர் இஞ்ஜின்;

ரெனோ அலாஸ்கன் பிக்கப் டிரக்கிற்கு, 2.5 லிட்டர் டீசல் இஞ்ஜினும் பொருத்தப்படலாம்.

இந்த 2.5 லிட்டர் டீசல் இஞ்ஜினும், 2.3 லிட்டர் டீசல் இஞ்ஜினை போலவே 158 பிஹெச்பி மற்றும் 187 பிஹெச்பி என 2 வகையிலான திறன் வெளிப்படுத்தலாம்.

2.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின்;

2.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின்;

ரெனோ அலாஸ்கன் பிக்கப் டிரக், 2.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் தேர்வுடனும் வெளியாகும்.

இந்த இஞ்ஜின் 158 பிஹெச்பியை திறனை வெளிப்படுத்தும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ரெனோ நிறுவனம் இந்த ரெனோ அலாஸ்கன் பிக்கப் டிரக்கை, 6-ஸ்பீட் மேனுவல் அல்லது 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் வழங்கும்.

மேலும், இந்த ரெனோ அலாஸ்கன் பிக்கப் டிரக் 2-வீல் திரை அல்லது ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வழங்க உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

தலைகீழாக ஓடும் விசித்திரமான பிக்கப் டிரக்...!!

இந்தியாவில் ரெனோ டஸ்ட்டர் பிக்கப் டிரக் மாடலை அறிமுகப்படுத்த திட்டம்

தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற இந்தியாவின் டாப் - 5 பிக்கப் டிரக்குகள்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
France based Carmaker Renault has revealed Pictures and other details of their Renault Alaskan Pickup Truck ahead of its official debut, during 2016 Paris Motor Show. Renault Alaskan is based on Nissan Navara NP300. Renault Alaskan is to go on sale in Columbia later this year. In terms of design, Alaskan features typical SUV-ish bold front fascia with modern touch. To know more, check here...
Story first published: Saturday, July 2, 2016, 13:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X