சுதந்திர தினத்தை ஒட்டி 41,000 ரூபாய் வரையிலான சலுகைகள் வழங்கும் ரெனோ

Written By:

ரெனோ நிறுவனம், சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 41,000 ரூபாய் வரையிலான சலுகைகளை வழங்குகின்றனர்.

நமது இந்திய நாடு, ஆகஸ்ட் 15-ஆம் தேதி 69-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது. இதனை கொண்டாடும் விதமாக ரெனோ இந்தியா நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ஈர்க்கும் வகையிலான சலுகைகளை வழங்கி வருகிறது.

இத்துடன், ரெனோ நிறுவனம் இந்தியாவில் பிரவேசம் செய்ததன் 5-ஆம் ஆண்டு விழாவையும் கொண்டாடுகிறது. இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

எந்த மாடல்கள் மீது எந்த வகையிலான சலுகைகள் கிடைக்கிறது என வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

சலுகைகள் கிடைக்கும் மாடல்கள்;

சலுகைகள் கிடைக்கும் மாடல்கள்;

ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ நிறுவனம், மொத்தம் 4 மாடல்களின் மீது இந்த சுதந்திர தின சலுகைகளை வழங்குகிறது.

ரெனோவின் லாட்ஜி, டஸ்ட்டர், ஸ்காலா மற்றும் பல்ஸ் ஆகிய மாடல்கள் மீது சலுகைகளும், ஆதாயங்களும் அளிக்கப்படும். இந்த சலுகைகள் அனைத்தும் இந்திய முழுவதும் கிடைக்கும்.

பல்ஸ்;

பல்ஸ்;

ரெனோ பல்ஸ் மீது, அதிகப்படியாக 41,000 ரூபாய் சலுகை கிடைக்கிறது. இதில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் என்ற பெயரில் 15,000 ரூபாய் என்ற அளவிலும், கார்ப்பரேட்/ பிஎஸ்யூ போனஸ் என்ற பெயரில் 6,000 ரூபாயும் அடங்கும்.

ரெனோ டீலர்ஷிப்கள் இந்த பல்ஸ் ஹேட்ச்பேக்கிற்கு வெறும் 1 ரூபாய் கட்டணத்தில், முதல் வருடத்திற்கான இன்சூரன்ஸ் அளிக்கின்றனர்.

ஸ்காலா;

ஸ்காலா;

ரெனோவின் ஸ்காலா செடானுக்கு, வெறும் 1 ரூபாய் செலவில், முதல் வருடத்திற்கான இன்சூரன்ஸ் கொடுக்கபடுகிறது.

இந்த சலுகை, தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்கள் மீது மட்டும், ஸ்டாக் உள்ளவரை மட்டுமே வழங்கப்படும். இந்தியா முழுவதும், ரெனோ ஸ்காலா, இந்த ஒற்றை சலுகையுடன் மட்டுமே கிடைக்கும்.

லாட்ஜி;

லாட்ஜி;

ரெனோ லாட்ஜி எம்பிவி மீது, அதிகபட்சமாக 40,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் அளிக்கப்படுகிறது.

டஸ்ட்டர்;

டஸ்ட்டர்;

ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி மீது அதிகபட்சமாக, 40,000 ரூபாய் மதிப்பிலான பரிசு கூப்பன் வழங்கப்படும்.

சலுகைகள் இல்லாத மாடல்;

சலுகைகள் இல்லாத மாடல்;

விற்பனையில் பட்டையை கிளப்பி வரும் ரெனோ க்விட் மீது, ரெனோ நிறுவனம் எந்த விதமான சலுகைகளையும் அளிக்கவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஸ்காலா தொடர்புடைய செய்திகள்

பல்ஸ் தொடர்புடைய செய்திகள்

லாட்ஜி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
India celebrates its 69th year of Independence on August 15th. Moreover, France-based Renault also celebrates its fifth anniversary in India. As part of these Celebrations, Lodgy, Duster, Scala, and Pulse models are bundled with offers and benefits. All these offers and benefits can be availed across India. Maximum benefit of Rs. 41,000 is given across 4 Models. To know more, check here...
Story first published: Wednesday, August 10, 2016, 11:34 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark