ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்: வரும் 4ந் தேதி இந்தியாவில் அறிமுகம்

By Saravana

வரும் 4ந் தேதி ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் புதுப்பொலிவு பெற்ற மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஏற்பட்டிருக்கும் கடும் சந்தைப்போட்டியை சமாளிப்பதற்கு இந்த புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் புதுப்பொலிவு பெற்ற மாடல் அவசியமாகிறது. இந்த புதிய மாடலில் எதிர்பார்க்கப்படும் முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பதை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

முகப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, க்ரில் அமைப்பு மற்றும் பம்பர் டிசைனில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. டெயில் க்ளஸ்ட்டரும் மாற்றம் கண்டிருக்கும். புதிய அலாய் வீல்களும் தோற்றத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும். மொத்தத்தில் சிறிய டிசைன் மாற்றங்களுடன் அறிமுகம் செய்யபப்பட உள்ளது.

ஏஎம்டி மாடல்

ஏஎம்டி மாடல்

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் விஷயமே, ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் வருகிறது என்பதாகத்தான் உள்ளது. இது நகர்ப்புற வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும். டஸ்ட்டர் Easy- R என்ற பெயரில் இந்த புதிய மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஎம்டி மாடல்

ஏஎம்டி மாடல்

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் 110 பிஎஸ் பவர் கொண்ட 1.5லி டீசல் மாடலில் மட்டுமே, இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏஎம்டி டிரைவ் சிஸ்டம்

ஏஎம்டி டிரைவ் சிஸ்டம்

ஏஎம்டி மாடல் முதலில் 2 வீல் டிரைவ் சிஸ்டத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலை உயரும்

விலை உயரும்

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வேரியண்ட்டுக்கு தக்கவாறு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை உயர்த்தப்படும் வாய்ப்புள்ளது.

ஏஎம்டி விலை

ஏஎம்டி விலை

ஏஎம்டி மாடல் ரூ.13 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The face-lifted Renault Duster is expected to be unveiled at the Auto Expo in Delhi. The market launch is expected to be in March or April.
Story first published: Monday, February 1, 2016, 11:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X