பொலிவுகூட்டபட்ட புதிய ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முன்பதிவு துவங்கியது

Written By:

பொலிவுகூட்டபட்ட புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய டஸ்ட்டர் மாடலின் புக்கிங்குகள் இன்று (மார்ச் 3) முதல் துவங்குகிறது.

புதுப்பொலிவுடன் வந்திருக்கும் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலிலும் வந்திருப்பதே முக்கிய சிறப்பம்சம். புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் மாடல் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் பற்றி...

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் பற்றி...

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, சமீபத்தில் நடந்து முடிந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

இது இந்திய வாகன சந்தைகளில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட வாகனங்களில் ஒன்றாக உள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 இஞ்ஜின் தேர்வுகளிலும் கிடைக்கிறது.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

கொள்ளளவு - 1.5 லிட்டர்

பவர் - 3750 ஆர்பிஎம்களில் 84 பிஹெச்பி / 3900 ஆர்பிஎம்களில் 109 பிஹெச்பி

டார்க் - 1900 ஆர்பிஎம்களில் 200 என்எம் / 2250 ஆர்பிஎம்களில் 248 என்எம்

மைலேஜ் - ஒரு லிட்டருக்கு 20.64 கிலோமீட்டர் / ஒரு லிட்டருக்கு 19.1 கிலோமீட்டர்

டீசல் இஞ்ஜின், 2 விதமான இஞ்ஜின் ட்யூனிங் வசதிகளுடன் கிடைக்கிறது.

பெட்ரோல் இஞ்ஜின்;

பெட்ரோல் இஞ்ஜின்;

கொள்ளளவு - 1.6 லிட்டர்

பவர் - 5850 ஆர்பிஎம்களில் 103 பிஹெச்பி

டார்க் - 2250 ஆர்பிஎம்களில் 248 என்எம்

மைலேஜ் - ஒரு லிட்டருக்கு 13.2 கிலோமீட்டர்

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

தற்போதைய நிலையில், ஈஸி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் டீசல் இஞ்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது.

ஸ்டைலிங்;

ஸ்டைலிங்;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, பல்வேறு விதமான மாறுதல்களுக்கு உட்படுத்தபட்டுள்ளது.

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் மாடலுக்கு, ஹாக் ஐ கிளஸ்டர் என அழைக்கபடும் கிளஸ்டர் டிசைன் கொண்ட புதிய ஹெட்லைட்கள் கொண்டுள்ளது.

ஃப்ரண்ட்;

ஃப்ரண்ட்;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் ஃப்ரண்ட் பம்பர் மறுவடிவமைக்கபட்டு, தற்போது புதிய ஃபையர்ஃப்ளை ஃபாக் லேம்ப்கள் வழங்கபட்டுள்ளது.

மேலும், கன் மெட்டல் மூலம் செய்யபட்ட கிரே அல்லாய் வீல்கள் பொருத்தபட்டுள்ளது. மேலும், இந்த மாடலுக்கு புதிய சயென் ஆரஞ்ச் பெயிண்ட் வேலைப்பாடுகள் வழங்கபட்டுள்ளது.

ரியர்;

ரியர்;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் ரியர் பகுதியில், ரியர் பம்பர் மாற்றம் செய்யபட்டுள்ளது. மேலும், இதற்கு புதிய டெய்ல் லேம்ப்கள் மற்றும் புதிய கிராஃபிக்ஸ் சேர்க்கபட்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் இண்டீரியர் பகுதியில், புதிய இன்ஃபோடெய்ன்மண்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி கண்ட்ரோல்கள் உடைய மறுவடிவமைக்கபட்ட செண்டர் கன்சோல் வழங்கபட்டுள்ளது.

புக்கிங்;

புக்கிங்;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவிக்கான புக்கிங்குகள், மார்ச் 3, 2016 முதல் ரெனோ டீலர்ஷிப்களில் துவங்குகிறது.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் - பெட்ரோல் வேரியண்ட் - 8.46 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம் (டெல்லி)) - அறிமுக விலை

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் - ஈஸி ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் - 11.47 (எக்ஸ் ஷோரூம் (டெல்லி))

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் - டாப் எண்ட் ஆல்-வீல்-டிரைவ் வேரியண்ட் - 13.57 (எக்ஸ் ஷோரூம் (டெல்லி))

என்ற விலைகளில் இந்த மாடல்கள் கிடைக்கின்றது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய ரெனோ டஸ்ட்டர் ஏஎம்டி எஸ்யூவி மார்ச்சில் விற்பனைக்கு வருகிறது

புதிய ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் உற்பத்தி, ஃபிப்ரவரி 2016 முதல் துவக்கம்

டஸ்ட்டர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Renault has launched their facelifted Duster SUV in India. Bookings for this 2016 New Renault Duster SUV begins from March 3, 2016 at all Renault dealerships across India. This facelifted Duster was unveiled at the recently concluded 2016 Delhi Auto Expo. 2016 New Renault Duster SUV has undergone lots of updates and changes.
Story first published: Thursday, March 3, 2016, 10:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark