ரெனோ கார்களுக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகள் அறிவிப்பு- விபரம்!

ரெனோ கார்களுக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.

By Saravana Rajan

இருப்பு இருக்கும் கார்களை விற்று தீர்க்கும் விதத்திலும், கார் விற்பனையை ஊக்குவிக்கவும் பல அதிரடி சேமிப்பு சலுகைகளை ரெனோ கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

விலையில் நேரடி தள்ளுபடி, ஆன்ரோடு விலையில் 100 சதவீத கடன், குறைந்த வட்டி விகிதத்தில் கார் கடன் உள்ளிட்ட சலுகைகளையும், இலவச ஆக்சஸெரீகளையும் அறிவித்துள்ளது ரெனோ கார் நிறுவனம். அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரெனோ க்விட்

ரெனோ க்விட்

விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் ரெனோ க்விட் காருக்கு ஆன்ரோடு விலையில் 100 சதவீத கடன் வசதி செய்து தரப்படுகிறது. ரெனோ நிறுவனத்தின் சொந்த பைனான்ஸ் நிறுவனத்தின் மூலமாக இந்த கடன் வசதி அளிக்கப்படுகிறது.

ரெனோ பல்ஸ்

ரெனோ பல்ஸ்

ரெனோ பல்ஸ் காருக்கு ரூ.40,000 வரை விலையில் தள்ளுபடியாகவோ அல்லது 4.99 சதவீத கடன் திட்டத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொல்ளலாம். இதுதவிர்த்து, ரூ.5,000 மதிப்புடைய ஆக்சஸெரீகளையும் இலவசமாக பெறும் வாய்ப்புள்ளது.

 ரெனோ ஸ்காலா

ரெனோ ஸ்காலா

ரெனோ ஸ்காலா மிட்சைஸ் செடான் காருக்கு ரூ.90,000 மதிப்புடைய சேமிப்பை பெறும் வாய்ப்புள்ளது. இதுதவிர, ரூ.5,000 மதிப்புடைய ஆக்சஸெரீகளையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த காருக்கு விலையில் 100 சதவீத கடன் வசதி, குறைவான வட்டி விகித கடன் போன்றவையும் உள்ளது.

ரெனோ லாட்ஜி

ரெனோ லாட்ஜி

லாட்ஜி காருக்கு ரூ.1 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்புள்ளது. அத்துடன், ரூ.5,000 மதிப்புடைய ஆக்சஸெரீகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இந்த காருக்கும் ஆன்ரோடு விலையில் 100 சதவீத கடன் பெறும் வசதியும் உள்ளது.

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் ரூ.80,000 மதிப்புடைய சேமிப்பை பெறும் வாய்ப்புள்ளது. ஏஎம்டி மாடலுக்கு விசேஷ விலையில் வாங்கும் வாய்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.60,000 மதிப்புடைய பரிசு கூப்பனும் வழங்கப்படுகிறது. இந்த எஸ்யூவிக்கும் விலையில் 100 சதவீத கடன் பெறும் வசதி வழங்கப்படுகிறது.

Most Read Articles
English summary
2016 has almost come to an end and Renault India is offering special offers on its models. A maximum benefit worth Rs. 1 lakh can be availed, along with 100 percent financing options.
Story first published: Friday, December 2, 2016, 16:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X