ரெனோ கார்கள் மீது தங்க காசு உள்ளிட்ட அட்டகாசமான சலுகைகள்

Written By:

ரெனோ நிறுவனம், பண்டிகை காலங்களை ஒட்டி, வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகள் மற்றும் ஆதாயங்களை வழங்குகின்றனர். இந்தியாவில் தசரா மற்றும் தீபாவளி பண்டிகை காலங்கள் துவங்கிவிட்டது. பல்வேறு நிறுவனங்கள், விதவிதமான சலுகைகளை தருகின்றனர். அந்த வகையில், ரெனோ நிறுவனமும் சில சிறப்பான சலுகைகளை அளிக்கின்றது.

ரெனோ நிறுவனம் வழங்கும் சலுகைகள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

நிச்சய பரிசு;

நிச்சய பரிசு;

இந்த பண்டிகை காலகட்டத்தில், ரெனோ வாகனங்களை புக் செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் 2 கிராம் மதிப்பு கொண்ட தங்க காசு நிச்சய பரிசாக கொடுக்கப்படுகிறது.

சிறப்பு வாய்ப்பு;

சிறப்பு வாய்ப்பு;

மேலும், ரெனோ நிறுவனத்தின் கார்களின் டெஸ்ட் டிரைவ் செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும், நிச்சய பரிசு தரப்படுகிறது. மேலும், ரெனோ கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பாலிவுட் நட்சத்திரம் ரன்பீர் கபூர், அவர்களை சந்திக்கும் சிறப்பு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

டஸ்ட்டர்;

டஸ்ட்டர்;

ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, 40,000 ரூபாய் மதிப்பிலான கிஃப்ட் செக் அல்லது 7.77% பைனான்ஸ் தேர்வுடன் கிடைக்கிறது. ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல், மேனுவல் டிரான்ஸ்மிஷன் விலையில் கிடைக்கும். மேலும், ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் ஏஎம்டி மாடல், 80,000 ரூபாய் மதிப்பிலான ஆதயங்களுடன் வழங்கப்படுகிறது.

பல்ஸ்;

பல்ஸ்;

ரெனோ பல்ஸ் ஹேட்ச்பேக், 40,000 ரூபாய் வரையிலான கேஷ் பெனிஃபிட் எனப்படும் ரொக்க ஆதாயம் அளிக்கப்படுகிறது. ரெனோ டீலர்ஷிப்கள், பல்ஸ் ஹேட்ச்பேக்கை 4.49% என்ற ஈர்க்கும் வகையிலான வட்டி விகிதத்தில் வழங்குகின்றனர்.

லாட்ஜி;

லாட்ஜி;

ரெனோ நிறுவனத்தின் லாட்ஜி ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல் மற்றும் வேர்ல்ட் எடிஷன் வேரியன்ட்கள் மீது, 20,000 மதிப்பிலான கிஃப்ட் செக் கிடைக்கும். லாட்ஜி ஆர்எக்ஸ்எல் 85பிஎஸ் வேரியன்ட் மீது மட்டும், ரெனோ இந்தியா நிறுவனம், 40,000 ரூபாய் மதிப்பிலான கிஃப்ட் செக்கை அளிக்கிறது.

ஸ்காலா;

ஸ்காலா;

ரெனோ ஸ்காலா செடான் மாடலுக்கு வெறும் ஒரு ரூபாய் செலுத்தினால், இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.

மேலும்... #ரெனோ #renault
English summary
Renault India is giving lots of Offers and Benefits for 2016 Festive Season. Customers making booking of Renault vehicle will receive an assured Gold Coin worth two grams. Assured gifts on every test drive are also offered. Individuals purchasing Renault vehicle, stand chance to meet Bollywood Actor, Ranbir Kapoor. Moreover, Rs. 80,000 worth benefits are also offered. To know more, check here...
Story first published: Wednesday, October 5, 2016, 11:04 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos