ரெனோ சம்மர் கேம்ப் என்ற சர்வீஸ் முகாம் இந்தியா முழுவதும் துவக்கம்

Written By:

ரெனோ இந்தியா கோடை காலம் துவங்கிவிட்டதை அடுத்து, ரெனோ சம்மர் கேம்ப் என்ற பெயரில் சர்வீஸ் முகாம் நடத்துகிறது.

இந்த ரெனோ சம்மர் கேம்ப், ஒரு வார காலத்திற்கு நடைபெறும். ஏப்ரல் 18-ஆம் தேதி (இன்று) துவங்கும் இந்த ரெனோ சம்மர் கேம்ப், அனைத்து ரெனோ சர்வீஸ் மையங்களிலும் ஏபரல் 26-ஆம் தேதி வரை நடைபெறும்.

கடுமையான கோடைகாலத்திற்கு ரெனோ வாடிக்கையாளர்களையும், அவர்களின் கார்களையும் தயார் செய்வதற்காக இந்த முகாம்கள் நடத்தபடுகிறது.

பயிற்சி பெற்ற ரெனோ ட்க்னீஷியன்கள் மூலம் விரிவான வாகன பரிசோதனை நடத்தபடுகிறது. ரெனோ ஷோரூம்கள், லேபர் சார்ஜ்களின் மீது 10% தள்ளுபடி வழங்குகின்றனர். உதிரி பாகங்கள் மற்றும் ஆக்சஸரீஸ் மீது மேலும் 5% தள்ளுபடி வழங்கபடுகிறது.

ஏர்-கண்டிஷனர் மற்றும் பிரேக் சர்வீஸ் செய்து கொள்ளும் போது, ஸ்பெஷலான தள்ளுபடிகள் வழங்கபடுகிறது. வேல்யூ ஆட்டட் சர்விஸஸ் எனப்படும் மதிப்பு கூட்டபட்ட சேவைகள் மீது 20% தள்ளுபடி கிடைக்கிறது. வாரண்டி விரிவாக்கம் செய்து கொள்ள விரும்பினால், டீலர்ஷிப்கள் விரிவான சலுகைகளை வழங்குகின்றனர்.

renault-india-summer-camp-india-18-april-to-24-april-2016

ரெனோ சர்வீஸ் கேம்பின் போது, கார்களுக்கு இலவச டாப் வாஷ் செய்யபடுகிறது. இந்தியா முழுவதும் உள்ள ரெனோ ஷோரூம்களில் வாடிக்கையாளர்களை ஈடுபடுத்தும் வகையிலான நடவடிக்கைகள் நடத்தபடுவதோடு மட்டுமல்லாமல், ஏராளமான பரிசுகளும் வழங்கபடுகிறது. நீங்கள் ரெனோ நிறுவன தயாரிப்புகளை வைத்து கொண்டிருந்தால், கட்டாயம் இந்த ரெனோ சம்மர் கேம்ப்பில் பங்குகொள்ளுமாறு கேட்டு கொள்ளபடுகிறது.

இந்திய வாகன சந்தைகளில், ரெனோ நிறுவனம் ஏராளமான மாடல்களை வழங்கி வருகிறது. க்விட், பல்ஸ், ஸ்கேலா, லாட்ஜி, ஃப்ளூயன்ஸ், கோலியோஸ் மற்றும் டஸ்ட்டர் உள்ளிட்ட ஏராளமான மாடல்களை ரெனோ நிறுவனம் வழங்கி வருகிறது. ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ நிறுவனம் இன்னும் ஏராளமான மாடல்களை இந்தியாவில் வழங்கதிட்டமிட்டு வருகின்றனர்.

English summary
Renault India organises Summer Camps from April 18 to to 24, 2016. France-based car manufacturer presents lots of Gifts and conducts customer engagement activities. This Summer Camp is organised in all Renault Dealerships across India. Lots of offers and dsicounts are presented to customers during this Reanult Service Camp. To know more, check here...
Story first published: Monday, April 18, 2016, 10:46 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark