1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட், ஆகஸ்ட் 23-ல் அறிமுகம் - முழு விவரம்

Written By:

1.0 லிட்டர் இஞ்ஜின் மற்றும் ஏஎம்டி வசதிகள் கொண்ட ரெனோ க்விட், இந்த அகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ நிறுவனம், 800சிசி இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் மாடலை கடந்த ஆண்டு செப்டம்பர் 2015-ல் இந்தியாவில் அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்யபட்டது முதலே ரெனோ க்விட் அமோக வரவேற்ப்பை பெற்று வருகிறது. ரெனோ க்விட், இந்திய வாகன சந்தைகளில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும்.

இந்தா நிலையில், ரெனோ நிறுவனம், 1.0 லிட்டர் இஞ்ஜின், ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதிகள் கொண்ட ரெனோ க்விட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் தொடர்பான மேலான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

1.0 லிட்டர் இஞ்ஜின்;

1.0 லிட்டர் இஞ்ஜின்;

இந்திய வாடிக்கையாளர்கள், 800சிசி இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் மாடலுக்கு அமோக வரவேற்பு அளித்தனர்.

இதே போன்ற வரவேற்ப்பை மக்கள் வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ரெனோ நிறுவனம் 1,000 சிசி கொள்ளளவு உடைய ரெனோ க்விட்டை இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்கிறது.

மேலும், ரெனோ நிறுவனம், இந்தியாவில் குறைந்தது 5% சந்தை மதிப்பையாவது கைபற்ற நினைக்கிறது.

பவர்;

பவர்;

ரெனோ க்விட் ஹேட்ச்பேக்கிற்கு, 3 சிலிண்டர்கள் உடைய 999 சிசி (1 லிட்டர்) கொள்ளளவு உடைய இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது. இது சுமார் 67 பிஹெச்பியை வெளிபடுத்தும் வகையில் டியூன் செய்யபட்டிருக்கலாம்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

1 லிட்டர் இஞ்ஜின் பொருத்தபட்ட ரெனோ க்விட், மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

ரெனோ நிறுவனம், இந்த ஏஎம்டி கியர்பாக்ஸுக்கு ஈஸி-ஆர் கியர்ஷிஃப்ட் என பெயரிட்டுள்ளது. இந்த ஈஸி-ஆர் கியர்ஷிஃப்ட், எஃப் 1 எனப்படும் ஃபார்முலா 1 டீம் நிபுணத்துவத்துடன் உருவாக்கபடுகிறது.

க்விட் பெற்ற ஆதரவு;

க்விட் பெற்ற ஆதரவு;

இந்திய வாடிக்கையாளர்கள், ரெனோ க்விட் மாடலுக்கு அமோக ஆதரவு வழங்கியுள்ளனர். அறிமுகம் செய்யபட்ட நாளில் இருந்து இது வரை சுமார் 75,000+ க்விட் கார்கள் விற்பனையாகியுள்ளது.

1.0 லிட்டர் பேட்ஜ்;

1.0 லிட்டர் பேட்ஜ்;

ரெனோ நிறுவனம், 1.0 லிட்டர் மாடல்களை வெரும் ஏஎம்டி தேர்வுடன் மட்டும் வழங்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

1.0 லிட்டர் இஞ்ஜின் கொண்ட மாடல்களை, தனியாக அடையாளபடுத்துவதற்கு அவை பிரத்யேக பேட்ஜுடன் வழங்கப்படும். பிற மாடல்களில் இருந்து இவற்றை வேறுபடுத்துவதற்காக இவ்வாறான ஏற்பாடுகள் செய்யபடுகிறது.

சைட் பேனல்களில் மட்டும் கிராஃபிக் செக்கர்ட் ஃபிளாக் டிசைன் பொறிக்கபட்டுள்ளது.

முன்னதாக, 1.0 லிட்டர் இஞ்ஜின் கொண்ட ரெனோ க்விட், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர்;

ரெனோ க்விட் ஹேட்ச்பேக்கின் 1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய எக்ஸ்டீரியர் அமைப்புகளில், எந்த விதமான பெரிய மாற்றங்களும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

1.0 லிட்டர் இஞ்ஜின் கொண்ட ரெனோ க்விட் ஹேட்ச்பேக்கில், ட்யூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் இபிடி எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் தேர்வு முறையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

Gaadiwaadi இதழ் வெளியிட்ட செய்திகள் படி, 1.0 லிட்டர் இஞ்ஜின் கொண்ட ரெனோ க்விட், ஆகஸ்ட் 23-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புக்கிங்;

புக்கிங்;

1.0 லிட்டர் இஞ்ஜின் கொண்ட ரெனோ க்விட் அறிமுகம் செய்யப்படும் 23-ஆம் தேதி அன்றே, இதன் புக்கிங் இணைய வழி வர்த்தக நிறுவனமான www.paytm.com இணையத்திலும் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

1 லிட்டர் இஞ்ஜினுடைய ரெனோ க்விட், மாருதி ஆல்ட்டோ கே10 மாடலுக்கு போட்டியாக விளங்கும்.

விலை;

விலை;

1 லிட்டர் இஞ்ஜினுடைய ரெனோ க்விட் காருக்கு, மாருதி ஆல்ட்டோ கே10 மாடல் தான் மிக முக்கியமான போட்டியாக விளங்கும்.

மாருதி ஆல்ட்டோ கே10, 3.25 லட்சம் ரூபாய் முதல் 4.15 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கப்படும். இதனால், 1 லிட்டர் இஞ்ஜினுடைய ரெனோ க்விட் காரும் மாருதி ஆல்ட்டோ கே10-க்கு நிகரான, விலையில் தான் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆச்சர்யமூட்டும் விதமாக, ரெனோ நிறுவனம் 1 லிட்டர் இஞ்ஜினுடைய ரெனோ க்விட் மாடலின் விலையை, மாருதி ஆல்ட்டோ கே10 மாடளுக்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டால் அப்போது, பல்வேறு விதமான சுவாரஸ்யங்களை எதிர்பார்க்கலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின், ஏஎம்டி வசதிகளுடன் ஆகஸ்ட்டில் அறிமுகம்

ரெனோ க்விட் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

க்விட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் - கூடுதல் படங்கள்

1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் - கூடுதல் படங்கள்

1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் - கூடுதல் படங்கள்

1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் - கூடுதல் படங்கள்

1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் - கூடுதல் படங்கள்

1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் - கூடுதல் படங்கள்

1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் - கூடுதல் படங்கள்

1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் - கூடுதல் படங்கள்

1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் - கூடுதல் படங்கள்

1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் - கூடுதல் படங்கள்

1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் - கூடுதல் படங்கள்

1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் - கூடுதல் படங்கள்

English summary
Renault Kwid with 1.0-Litre Engine and AMT facilities are to be launched on 23rd August. 1.0-litre Kwid at 2016 Delhi Expo sported chequered flag design on sides along with stickers pointing out, the size of new engine and Easy-R AMT gearbox. Bookings would start on the same day on e-commerce site Paytm.com. To know more about 1.0-Litre Kwid, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark