சென்னையில் எடுக்கபட்ட ரெனோ க்விட் ஏஎம்டியின் ஸ்பை படங்கள் வெளியாகியது

By Ravichandran

சென்னையில் ரெனோ க்விட் ஏஎம்டியின் சோதனைகள் மேற்கொள்ளபட்டது. அப்போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் மேற்கொள்ளபட்ட ரெனோ க்விட் ஏஎம்டியின் சோதனைகள் மற்றும் இந்த மாடல் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ரெனோ க்விட் ஏஎம்டி

ரெனோ க்விட் ஏஎம்டி

ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ நிறுவனம், தங்களின் ரெனோ க்விட் மாடலை ஏஎம்டி தேர்வுடனும் வழங்குகின்றனர்.

1.0 லிட்டர் கொள்ளளவு கொண்ட இஞ்ஜின் மற்றும் ஏஎம்டி தேர்வுடைய ரெனொ க்விட், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

அப்போது முதல் ரெனோ ஆர்வலர்கள், இந்திய வாகன சந்தைகளில் இந்த ரெனோ க்விட் ஏஎம்டி வேரியண்ட்டின் அறிமுகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

க்விட் ஏஎம்டியின் சோதனை;

க்விட் ஏஎம்டியின் சோதனை;

ஈஸி-ஆர் ஏஎம்டி பேட்ஜ் கொண்ட ரெனோ க்விட் காரின் சோதனை ஓட்டம், சென்னையில் நடைபெற்றது. ஏஎம்டி அல்லது ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் இந்தியாவின் வாகன வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

ஏஎம்டி உள்ள வாகனங்கள், டிராஃபிக் அதிகமாக உள்ள சூழ்நிலைகளிலும், இயக்குவதற்கு எளிமையாக உள்ளன.

போட்டி;

போட்டி;

ஈஸி-ஆர் ஏஎம்டி பேட்ஜ் கொண்ட ரெனோ க்விட் கார், இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யபடும் போது, செக்மண்ட்டில் முன்னோடியாக விளங்கும் ஏஎம்டி தேர்வு கொண்ட மாருதி சுஸுகி ஆல்ட்டோ கே10 மாடலுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

ரெனோ க்விட் மற்றும் மாருதி ஆல்ட்டோ கே10 ஆகிய 2 மாடல்களும், இந்திய வாகன சந்தைகளில் அதிகம் விற்பனையாகும் மாடல்களாகவும், சிறந்த போட்டி மாடல்களாகவும் உள்ளன.

எதிர்பார்ப்பு;

எதிர்பார்ப்பு;

ரெனோ க்விட் ஈஸி-ஆர் ஏஎம்டி வேரியண்ட், ரெனோ நிறுவன தயாரிப்புகளின் விற்பனை அளவில் அதிக அளவில் கூட்டும் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும், இதன் அறிமுகம், ரெனோ நிறுவனத்தை இந்திய வாகன சந்தைகளில் முன்னோடியாக விளங்குவதற்கும் உதவலாம் என கூறப்படுகிறது.

காத்திருப்பு காலம்;

காத்திருப்பு காலம்;

தற்போதைய நிலையில், ரெனோ க்விட் கார், நீண்ட காத்திருப்பு காலத்துடன் தான் கிடைக்கிறது.

உற்பத்தி;

உற்பத்தி;

ரெனோ க்விட் கார், சென்னையில் உள்ள உற்பத்தி ஆலையில் தயாரிக்கபட்டு வருகிறது.

ரெனோ க்விட் காரின் காத்திருப்பு காலத்தை குறைப்பதற்காகவும், வாடிக்கையாளர்கள் விரும்பும் வேரியண்ட்டை வழங்கும் நோக்கில், இந்த ரெனோ உற்பத்தி ஆலையில், ஷிஃப்ட்கள் கூட்டபட்டு கார் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

புதிய தொழில்நுட்பம்;

புதிய தொழில்நுட்பம்;

ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ நிறுவனம், கியர் லிவர் சிஸ்டத்தை முழுவதுமாக நீக்க திட்டமிட்டு வருகிறது.

இவற்றிற்கு பதிலாக, தங்களின் தயாரிப்புகளில் எஸ்சிஈ அல்லது ஸ்மார்ட் கண்ட்ரோல் எஃப்ஃபீஷியன்ஸி (SCe-Smart Control Efficiency) என்னும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளனர்.

மோட்கள்;

மோட்கள்;

ரெனோ க்விட் கார், அதன் டேஷ்போர்ட்டில், மொத்தம் டிரைவிங் மோட்கள் கொண்டுள்ளது.

ரெனோ க்விட் கார், டிரைவ், நியூட்ரல் மற்றும் ரிவர்ஸ் ஆகிய மோட்களின் தேர்வுகள் கொண்டுள்ளது. ஆனால், இந்த தேர்வுகள் அனைத்தும், ரெனோ க்விட் ஈஸி-ஆர் ஏஎம்டி வேரியண்ட்டில் மட்டுமே வழங்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின், ஏஎம்டி தேர்வுகள் தீபாவளிக்கு முன்னதாக அறிமுகம்

ரெனோ க்விட் ஏஎம்டி மாடலில் கியர் லிவருக்கு பதில் டயல்... வெரி ஸ்மார்ட் ஐடியா!

ரெனோ க்விட் 1.0லி ஏஎம்டி Vs மாருதி ஆல்ட்டோ கே10 ஏஎம்டி: ஒப்பீடு

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
France based Carmaker Renault is presenting Renault Kwid East-R variant. Recntly, the Spy Pics of this car, which was tested in Chennai was released. Renault Kwid has 3 driving modes on dashboard. Options like Drive, Neutral, and Reverse will be options available in Kwid Easy-R trim level. To know more about Renault Kwid East-R variant, check here...
Story first published: Friday, May 6, 2016, 21:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X