இந்தியாவை புறக்கணித்துவிட்டு, க்விட் விஷயத்தில் ரெனோ நிறுவனம் பிரேசிலுக்கு கட்டுபடுகிறதா?

By Ravichandran

ரெனோ நிறுவனம், பிரேசில் நாட்டுக்கு வழங்கும் ரெனோ க்விட் மாடலில் 4 ஏர்பேக்குகள் மற்றும் இஎஸ்பி உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகிறது.

பிரேசில் நாட்டுக்கு வழங்கபடும் ரெனோ க்விட் மாடலில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

ரெனோ க்விட்...

ரெனோ க்விட்...

பிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு ரெனோ நிறுவனம், இந்தியாவில் ஏராளமான மாடல்களை இந்தியாவில் வழங்கி வருகிறது.

இதில் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ க்விட், இந்திய வாகன சந்தைகளில் அபாரமாக விற்பனையாகி வருகிறது.

பிரேசிலுக்கு ஏற்றுமதி;

பிரேசிலுக்கு ஏற்றுமதி;

இந்தியாவில் தயாரிக்கபட்டு, இந்திய வாகன சந்தைகளில் விற்பனையில் சக்கைப் போடு போட்ட ரெனோ க்விட், தற்போது பிரேசிலுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

ஆனால், பிரேசில் நாட்டுக்கு வழங்கபடும் ரெனோ க்விட் மாடலில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

கிராஷ் டெஸ்ட்;

கிராஷ் டெஸ்ட்;

எந்த ஒரு தயாரிப்புகளும், விபத்து நிகழும் நேரத்தில் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பதை ஆராய, அவை கிராஷ் டெஸ்ட்களுக்கு உட்படுத்தபடுகிறது.

அதன் பிறகு, சோதிக்கபடும் வாகனங்களுக்கு 1 ஸ்டார், 2 ஸ்டார், 3 ஸ்டார் என மதிப்பீடுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், தரத்தை நிர்ணயிக்க, குளோபல் என்கேப் (GLOBAL NCAP), ஆசியான் என்கேப் (ASEAN NCAP), யூரோ என்கேப் (EURO NCAP), லேட்டின் என்கேப் (Latin NCAP) என பல்வேறு வகையிலான கிராஷ் டெஸ்ட்கள் உள்ளன.

குளோபல் என்கேப்;

குளோபல் என்கேப்;

உலகளாவிய சந்தைகளை கருத்தில் கொண்டு அவற்றிற்கு என நடத்தபடும் கிராஷ் டெஸ்டையே, குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட் என அழைக்கபடுகிறது.

ரெனோ க்விட் - கிராஷ் டெஸ்ட்;

ரெனோ க்விட் - கிராஷ் டெஸ்ட்;

இந்திய வாகன சந்தைகளில் விற்கப்படும் ரெனோ க்விட் உள்ளிட்ட பல்வேறு கார்கள், குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட்களுக்கு உட்படுத்தபட்டது.

இதில், ஃபிராண்டல் கிராஷ் டெஸ்ட்களில், ரெனோ க்விட் உள்ளிட்ட பல்வேறு கார்கள், ௦ மதிபீட்டையே பெற்றன.

பிரேசிலில் பாதுகாப்பு விதிமுறைகள்;

பிரேசிலில் பாதுகாப்பு விதிமுறைகள்;

பிரேசிலில் பாதுகாப்பு விதிமுறைகள் மிகவும் கடுமையாக உள்ளது. அங்கு விற்கப்படும் அனைத்து கார்களிலும், ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு அம்சங்களாக வழங்க பட வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது.

இதனால், இந்தியாவில் தயாரிக்கபட்டு, தற்போது பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள ரெனோ க்விட் காரில் 4 ஏர்பேக்குகள் மற்றும் இஎஸ்பி எனப்படும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு அம்சங்களாக வழங்கபடுகிறது.

ரெனோ விளக்கம்;

ரெனோ விளக்கம்;

இந்தியாவில் வழங்கபடும் ரெனோ க்விட், இந்திய ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள அனைத்து பாதுகாப்பு அம்சங்களுக்கு உட்பட்டே வழங்கபடுகிறது என ரெனோ நிறுவனம் விளக்கம் அளித்து வருகிறது.

உண்மை என்னவெனில், இந்தியாவில் தற்போது விற்கப்படும் கார்களுக்கான கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் 2019-ஆமா ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. மேலும், பாரத் என்கேப் விதிமுறைகள் படி, புதிய கார் மாடல்கள் 2017-ஆம் ஆண்டு முதல் தான் கட்டாய கிராஷ் டெஸ்ட்களுக்கு உட்படுத்தபட உள்ளது.

கூடுதல் அம்சங்கள்;

கூடுதல் அம்சங்கள்;

இந்தியாவிற்கான ரெனோ க்விட் மாடலை காட்டிலும், பிரேசில் நாட்டுக்கு வழங்கபடும் ரெனோ க்விட் மாடலில், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் உள்ள்ளிட்ட ஏராளமான பிரத்யேக அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

சற்று விலை கூடுதலாக இருந்தாலும், பிரேசிலுக்கு வழங்கபடும் ரெனோ க்விட் மாடலில், ஃபிரண்ட் மற்றும் சைட் ஏர்பேக்குகள் பொருத்தபட்டு வழங்கபடுகிறது.

பாரபட்சம்;

பாரபட்சம்;

ரெனோ போன்ற கார் நிறுவனம், தாங்கள் வழங்கும் ரெனோ க்விட் கார் மாடலை, பிரேசில் போன்ற நாடுகளுக்கு ஏர்பேக்குகள் மற்றும் இஎஸ்பி உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஒரு மாதிரியாகவும், இந்தியா போன்ற வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளுக்கு எந்த விதமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் வழங்குவது, பலருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரெனோ போன்ற பெரிய கார் நிறுவனங்கள், இந்திய வாடிக்கையாளர்கலின் மீது இப்படி பாரபட்சங்கள் காட்டுவது அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

ரெனோ நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களை புறக்கணித்துவிட்டு, பிரேசிலுக்கு மட்டும் கட்டுபடுகிறதா, என்றும் யோசிக்கவைக்கிறது என்றாலும் அது மிகையாகாது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்திய கார்கள் குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட்டில், 0 மதிப்பீடு

க்விட் தொடர்புடைய செய்திகள்

ரெனோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Is India neglected by Renault?... Renault Kwid, which is being sold in Indian market was recently crash tested by Global NCAP. Kwid received zero safety rating crash test. Kwid will be exported out of their facility in India to Brazil. Kwid sold in Brazil will be offered with 4 airbags and Electronic Stability Program (ESP) as standard feature. To know more, check here...
Story first published: Saturday, May 21, 2016, 21:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X