ரெனோ நிறுவனத்தின் 2 ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள், 2017-ஆம் ஆண்டிற்குள் அறிமுகம்

By Ravichandran

ரெனோ இந்தியா நிறுவனம், 2017-ஆம் ஆண்டிற்குள், 2 ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ரெனோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2 ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள்;

2 ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள்;

ரெனோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படும் 2 ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள், ரெனோ க்விட் கிளைம்பர் மற்றும் ரெனோ க்விட் ரேசர் என பெயரிடப்பட்டுள்ளது.

ரெனோ இந்திய நிறுவனம் இந்த 2 மாடல்களையும், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தினர்.

ரெனோ க்விட் கிளைம்பர் மற்றும் ரெனோ க்விட் ரேசர், ரெனோ நிறுவனத்தின் மிகவும் மிதமான விலை கொண்ட ரெனோ க்விட் மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

ரெனோ க்விட் கிளைம்பர் மற்றும் ரெனோ க்விட் ரேசர் ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள், 2017 அல்லது அதற்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

எனினும், ரெனோ இந்தியா அதிகாரிகள், இதன் அறிமுக தேதி குறித்து உறுதிபடுத்தபட்ட தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

லிமிடெட் எடிஷன்;

லிமிடெட் எடிஷன்;

ரெனோ க்விட் கிளைம்பர் மற்றும் ரெனோ க்விட் ரேசர் ஆகிய இரு மாடல்களுமே குறிப்பிட்ட எண்ணிக்கையில் (லிமிடெட் எடிஷன்) மட்டுமே வெளியாக உள்ள ஸ்பெஷல் எடிஷன் மாடல்களாக இருக்கும்.

இதன் விலைகளும் சற்று கூடுதலாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

தோற்றம்;

தோற்றம்;

ரெனோ க்விட் கிளைம்பர், கரடு முரடான மற்றும் ஆஃப் ரோட் மிஷின் போன்ற தோற்றம் கொண்டுள்ளது.

ஆஃப் ரோட் டயர்கள் கொண்ட இது, உயர்ந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.

டிசைன் மொழி;

டிசைன் மொழி;

ரெனோ க்விட் கிளைம்பர், புகழ் பெற்ற அர்பன் கிராஸ் ஓவர் மாடல்கள் கொண்டுள்ளது போன்ற டிசைன் மொழி கொண்டுள்ளது.

க்விட் ரேசர்;

க்விட் ரேசர்;

ரெனோ க்விட் ரேசர், ரெனோ க்விட் கிளைம்பர் போல் இல்லை. ரெனோ க்விட் ரேசர், டிராக் பிரயோகங்களுக்கு ஏற்றது போன்ற அம்சங்கள் உடைய சாலைகளில் உபயோகிக்க கூடிய (ஸ்ட்ரீட் லீகல் மிஷின்) மாடல் ஆகும்.

தோற்றம்;

தோற்றம்;

ரெனோ க்விட் ரேசர், தாழ்ந்த நிலைப்பாடு கொண்டுள்ளது. மேலும், இது வைட் பம்பர்கள் மற்றும் ஸ்கர்ட் கிட் கொண்டுள்ளது.

ஒட்டுமொத்தத்தில், ரெனோ க்விட் ரேசர், டிராக் பிரயோகத்திற்கான வாகனம் ஆகும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ரெனோ க்விட் ரேசர், ரெனோ க்விட் கிளைம்பர் ஆகிய 2 ஸ்பெஷல் எடிஷன் மாடல்களுமே, ரெனோ இந்தியாவின் 3-சிலிண்டர்கள் உடைய 1.0 லிட்டர், பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

தேவையான திறன் வெளிபடுத்தும் வகையில், இதன் இஞ்ஜின் ட்யூன் செய்யப்படும்.

டிரான்ஸ்மிஷன்;

டிரான்ஸ்மிஷன்;

ரெனோ நிறுவனம், ரெனோ க்விட் ரேசர், ரெனோ க்விட் கிளைம்பர் ஆகிய 2 ஸ்பெஷல் எடிஷன் மாடல்களின் இஞ்ஜின்களையும் 5-ஸ்பீட் டிரான்ஸ்மிஷனுடன் இணைத்துள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரெனோ தொடர்புடைய செய்திகள்

க்விட் தொடர்புடைய செய்திகள்

கார்கள் தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Renault India is in plans to Launch 2 Special Edition Models by 2017. Renault has named these Special Edition Models as Renault Kwid Climber and Renault Kwid Racer. These two special edition models were showcased at 2016 Delhi Auto Expo in Delhi. Both these special edition models are based on Renault's most affordable hatchback, Kwid. To know more, check here...
Story first published: Friday, June 10, 2016, 18:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X