ரெனோ க்விட் கார்களுக்கு ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

By Ravichandran

ரெனோ நிறுவனம் தங்களின் க்விட் கார்களுக்கு ரீகால் அழைப்பு விடுத்துள்ளது. அவ்வப்போது, ஆட்டோமொபைல் நிறுவன தயாரிப்புகள் ரீகால் செய்யப்படுவது வழக்கம். இதில் சில ரீகால் நடவடிக்கைகள் கட்டாயத்தின் மேற்க்கொள்ளப்படுபவையாகவும், சில ரீகால் நடவடிக்கைகள் தாமாக முன் வந்து மேற்க்கொள்ளப்படும் நடவடிக்கைகளாக உள்ளன.

ரெனோ க்விட் கார்கலின் ரீகால் நடவடிக்கை தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

க்விட்டின் ரீகால்;

க்விட்டின் ரீகால்;

பிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ நிறுவனம், தாமாக முன் வந்து மேற்க்கொள்ள உள்ள தங்களின் க்விட் கார்களை ரீகால் செய்கிறது. ரெனோ க்விட்டின் அனைத்து வேரியன்ட்களின் ஃப்யூவல் ஹோஸ் கிளிப்பில் பிரச்னைகள் இருக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால், ஃப்யூவல் சப்ளையில் பிரச்னை ஏற்பட்டு, அது ஃப்யூவல் சிஸ்டத்தையே பாதிக்க வாய்ப்புகள் உள்ளது.

பாதிக்கப்பட்ட கார்கள்;

பாதிக்கப்பட்ட கார்கள்;

ரெனோ க்விட் தயாரிக்கப்பட துவங்கிய நாள் முதல் மே 18, 2016 வரையில் தயாரிக்கப்பட்ட கார்களில் மட்டுமே இந்த பிரச்னை இருக்க வாய்ப்புகள் உள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், இன்-லைன் 3 சிலிண்டர்கள் உடைய 800 சிசி இஞ்ஜின் கொண்ட மாடல்கள் மட்டுமே இந்த ரீகால் நடவடிக்கையில் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

ரீகாலுக்கான நோக்கம்;

ரீகாலுக்கான நோக்கம்;

ரெனோ நிறுவனம், தங்களின் கார்களை ரீகால் செய்வதற்கான முக்கிய நோக்கமே, தாங்கள் வழங்கும் தயாரிப்புகளின் தரத்தை நிலை நிறுத்தி கொள்வதற்காக தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோதனைகள்;

சோதனைகள்;

தற்போதைய நிலையில், ரெனோ நிறுவனம், க்விட் ரீகால் குறித்து தங்களின் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக, ரெனோ நிறுவனத்தின் டெக்னீஷியன்கள் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தீர்வு;

தீர்வு;

வாடிக்கையாளர்களின் க்விட் கார்களில், ஃப்யூவல் ஹோஸ் கிளிப்பில் பிரச்னைகள் இருந்தால், ரெனோ நிறுவனம் இதற்கான தீர்வை வழங்க தயாராக உள்ளது.

நோக்கம்;

நோக்கம்;

ரெனோ நிறுவனம், வாடிக்கையாளர்கள் நலன் கருதியே, தாமாக முன் வந்து இந்த ரீகால் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. சிறு குறைகள் இருந்தாலும், வாடிக்கையாளர்கள் அதனால் பாதிக்கப்பட கூடாது என ரெனோ நிறுவனம் நினைக்கிறது.

தெளிவற்ற நிலை;

தெளிவற்ற நிலை;

ரெனோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ரெனோ கார்கள், இந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பது குறித்து இன்னும் தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

உலகின் அதிபயங்கர கண்டம் விட்டு கண்டம் பாயும் டாப் 10 ஏவுகணைகள்!

டிரக்குகளுக்கான உலகின் முதல் மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலை...!!

அடுத்த கட்டத்திற்கு செல்லும் நாசா... மின்சார விமானத்தை தயாரிக்கிறது!

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault India has announced that, it would be recalling its Kwid for voluntary inspection. All variants of Renault Kwid seems to have an issue with fuel hose clip. This may cause an issue with fuel supply and could damage fuel system. Models in question are the ones made in India by Renault from the beginning to May 18, 2016. To know more about this Recall, check here...
Story first published: Thursday, October 13, 2016, 13:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X