ரெனோ வழங்கும் ரெனோ க்விட் ஸ்போர்ட்ஸ் காரின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

ரெனோ நிறுவனம் வழங்கும் ரெனோ க்விட் ஸ்போர்ட்ஸ் காரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

ரெனோ க்விட் ஸ்போர்ட்ஸ் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ நிறுவனம் வழங்கும் ரெனோ க்விட் ஸ்போர்ட்ஸ் கார், மகாராஷ்டிராவில் உள்ள டீலர்ஷிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தோற்றம்;

தோற்றம்;

ரெனோ க்விட் ஸ்போர்ட்ஸ் கார், எஸ்யூவி போன்ற தோற்றம், அதுவும் மினி எஸ்யூவி போன்ற தோற்றம் கொண்டுள்ளது.

எஸ்யூவியின் பல்வேறு அம்சங்கள் ஏற்கப்பட்டு, மிக கச்சிதமாக இதில் இணைக்கப்பட்டுள்ளது.

கஸ்டமைசேஷன் தேர்வுகள்;

கஸ்டமைசேஷன் தேர்வுகள்;

ரெனோ நிறுவனம் வழங்கும் ரெனோ க்விட் காரானது, ரெனோ க்விட் ஏர், ரெனோ க்விட் ரைடர், ரெனோ க்விட் சேப் (Zap) மற்றும் ரெனோ க்விட் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட கஸ்டமைசேஷன் தேர்வுகளில் கிடைக்கிறது.

இதில், மகாராஷ்டிராவில் உள்ள டீலர்ஷிப்பில் காணப்பட்ட ரெனோ ஸ்போர்ட்ஸ், கஸ்டமைசேஷன் கிட்டில் காணப்படும் அனைத்து ஆக்சஸரீஸ்களின் கலப்படமாக காணப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

ரெனோ க்விட் காரின் ஸ்போர்ட்ஸ் வெர்ஷன், மிகுந்த ரசனையுடன், நன்றாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த படங்களில் காணப்படும் ரெனோ க்விட் காரின் ஸ்போர்ட்ஸ் வெர்ஷன், பக்கவாட்டில் டீகேல்களும், அல்லாய் வீல்கள், ஃபிரண்ட் கிரில்லிற்கு பாடி நிறத்திலான ஸ்லாட்கள், ஃபோ ஏர் இன்டேக்குகள், பேஷ் பிளேட் மற்றும் ஸ்பாய்லர் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் கொண்டுள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

ரெனோ க்விட் ஸ்போர்ட்ஸ் காரின் உட்புற பகுதியிலும், நிறைய கஸ்டமைசேஷன் தேர்வுகள் ஏற்கபட்டுள்ளது. இதன் இன்டீரியரில், ஸ்பேஷல் மேட்கள், டோர்களுக்கு பாடி நிறத்திலான இன்செர்ட்கள், ஏசி வென்ட்கள் மற்றும் கியர் லிவர் மீது சில்வர் ஆக்சென்ட்கள், மற்றும் லெதர் சீட் கவர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இஞ்ஜினை பொருத்த வரை, எந்த மாற்றங்களும் செய்யப்படாது. இந்த ரெனோ க்விட் ஸ்போர்ட்ஸ் காரம் அதே 800சிசி இஞ்ஜினையே கொண்டிருக்கும்.

இந்த இஞ்ஜின், 52 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 72 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

1.0 லிட்டர் இஞ்ஜின்;

1.0 லிட்டர் இஞ்ஜின்;

1.0 லிட்டர் இஞ்ஜின் மற்றும் ஏஎம்டி தேர்வு கொண்ட ரெனோ க்விட், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

இந்த 1.0 லிட்டர் இஞ்ஜின் மற்றும் ஏஎம்டி தேர்விலான இஞ்ஜின் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2017-ஆம் ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விசேஷ அம்சங்கள்;

விசேஷ அம்சங்கள்;

ரெனோ நிறுவனம், இந்த க்விட் காரில் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மேம்பட்ட மைலேஜ், கூடுதல் பவர், உயர்ந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளிட்ட எக்கசக்கமான அம்சங்கள் கொண்டுள்ளது.

முன்னேறும் மாடல்;

முன்னேறும் மாடல்;

இந்தியாவின் அதிகமாக விற்பனையாகும் டாப் 10 கார் மாடல்களின் பட்டியலில் ரெனோ க்விட், வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாருதி ஆல்ட்டோ மாடளுக்கும், ரெனோ க்விட் கடும் போட்டியாக விளங்குகிறது.

சிறந்த போட்டியாளர்;

சிறந்த போட்டியாளர்;

முன்பு குறிப்பிட்ட அனைத்து சிறப்பு அம்சங்கள் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், குறைந்த விலையில் கிடைப்பதால், நுழைவு-நிலை ஹேட்ச்பேக் செக்மென்ட்டில், ரெனோ க்விட் சிறந்த போட்டியாளராக உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

க்விட் தொடர்புடைய செய்திகள்

ரெனோ தொடர்புடைய செய்திகள்

ஸ்பை படங்கள் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Pictures Credit ; www.rushlane.com

English summary
Spy Pics of Renault Kwid Sports presented by France based car maker Renault taken at Maharashtra Dealership was released. Renault Kwid has looks of an SUV, mini SUV. Various customization is offered by Renault for the Kwid like Renault Kwid Air, Renault Kwid Rider and Renault Kwid Zap, Kwid Sports etc. To know more about Renault Kwid Sports and its Spy Pics, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark