ஃபுளூயன்ஸ் மாடலுக்கு மாற்றாக ரெனோ மேகன் செடான் அறிமுகம் - இந்தியாவிற்கு வருமா?

By Meena

வாடிக்கையாளர்களின் விருப்பத்தை அறிந்து கொண்டு புதிய கார்களை அறிமுகப்படுத்தி ஹிட்டடிக்க வைக்கும் சூட்சுமத்தை அறிந்த நிறுவனம் ரெனோ. அப்படி மார்க்கெட்டுக்கு வந்து விற்பனையில் கலக்கி வரும் மாடல்கள்தான் டஸ்டர், க்விட் உள்ளிட்டவை.

அந்த வரிசையில் புதிதாக செடான் மாடல் ஒன்றையும் களமிறக்கி ரவுண்டு கட்டி அடிக்கத் திட்டமிட்ட ரெனோ நிறுவனம், மேகன் என்ற பெயரில் புதிய செடான் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரெனோ மேகன் செடான் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஃபுளூயன்ஸ் மாடலுக்கு மாற்று;

ஃபுளூயன்ஸ் மாடலுக்கு மாற்று;

ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ நிறுவனம், தங்களின் மேகன் ஹேட்ச்பேக் அடிப்படையிலான மேகன் செடானை அறிமுகம் செய்துள்ளனர்.

ஏற்கெனவே சந்தையில் உள்ள ரெனோ நிறுவனத்தின் ஃபுளூயன்ஸ் மாடலுக்கு மாற்றாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன் தோற்றம்;

முன் தோற்றம்;

முகப்பு டிசைனைப் பொருத்தவரை கிட்டத்தட்ட வளைவு நெளிவுகள் எல்லாம் இரண்டிலும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன. மேகன் மாடலில் சி வடிவில் பொருத்தப்பட்டுள்ள முகப்பு விளக்குகள், கிரில் போன்றவை மாறுபாட்டு காட்சியளிக்கின்றன.

பின் தோற்றம்;

பின் தோற்றம்;

பின்புற பகுதியில் உள்ள விளக்குகள் (டெயில் லேம்ப்கள்) நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பார்க்க செம ஸ்மார்ட்டான லுக்கை அவை தருகின்றன. கண்ணாடி பொருத்தபபட்ட கூரை (டாப்) பின்புறமுள்ள விண்ட்ஷீல்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

இன்டீரியரை எடுத்துக் கொண்டால், அதுவும் பக்கா மாடர்னாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 7 இன்ச் தொடுதிரை டிஎஃப்டி சிஸ்டம், 2 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்படடுள்ளன. உடைமைகளை எடுத்துச் செல்வதற்கான பூட்ஸ்பேஸ் வசதி 508 லிட்டர் கொள்ளளவாக உள்ளது சிறப்பம்சங்களில் ஒன்று.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

மொத்தம் 6 ஏர்பேக்-கள் உள்ளன. எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் (இபிடி) வசதியுடன் கூடிய ஏபிஎஸ் டெக்னாலஜி இந்த காரில் உள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

ரெனோ மேகன் மொத்தம் 5 எஞ்சின் மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2 பெட்ரோல் எஞ்சின்களும், 3 டீசல் எஞ்சின்களும் அதில் அடக்கம்.

இஞ்ஜின்களின் திறன்;

இஞ்ஜின்களின் திறன்;

பெட்ரோல் எஞ்சின்களைப் பொருத்தவரை முறையே 115 பிஎச்பி, 130 பிஎச்பி திறன் கொண்டது.

டீசல் எஞ்சின்கள் முறையே, 90 பிஎச்பி, 115 பிஎச்பி, 130 பிஎச்பி ஆற்றல் கொண்டவையாக உள்ளன.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

115 பிஎச்பி பெட்ரோல் எஞ்சின் மாடலில் 5 மேனுவல் கியர் அல்லது 6 ஆட்டோ கியர் ஆப்ஷன்கள் உள்ளன. இன்னொரு பெட்ரோல் மாடலில் 6 மேனுவல் கியர் அல்லது 7 ஆட்டோ கியர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

டீசல் எஞ்சின் மாடல்களில் 6 மேனுவல் கியர் அல்லது ஆட்டோமேடிக் கியர் கொடுக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி;

உற்பத்தி;

துருக்கியின், புர்சா பகுதியில் உள்ள ரெனோ தொழிற்சாலையில் மேகன் கார்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.

இந்தியாவில் அறிமுகம்;

இந்தியாவில் அறிமுகம்;

ரெனோ மேகன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்திய வாகன சந்தைகளில், வாடிக்கையாளர்கள் எஸ்யூவிகளை நோக்கி படை எடுத்து வருகின்றனர்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அடுத்த தலைமுறை ரெனோ ஃப்ளூயன்ஸ் செடானின் ஸ்கெட்ச் படங்கள் வெளியிடப்பட்டது

ரெனோ மெகான் லிமிடேட் எடிசன் ஹேட்ச்பேக் கார் விபரங்கள்

ஃப்ளூயன்ஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

ரெனோ மேகன் செடான் - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
French carmaker Renault has unveiled their sedan version of its popular Megane hatchback called as The Megane sedan. This Megane will replace the Fluence in Renault's lineup. This is new car is the third body style available wearing their Megane badge - the other being the hatchback and estate. New sedan version of the Megane is available with five engine options. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X