ரெனோ லாட்ஜி எம்பிவியின் புதிய வேரியண்ட்கள் விரைவில் அறிமுகம் - டொயோட்டா இன்னோவாவிற்கு மாற்று?

By Ravichandran

ரெனோ லாட்ஜி எம்பிவி, ஏஎம்டி மற்றும் புதிய பேஸ் வேரியண்ட்டிலும் வழங்கப்பட உள்ளது.

விரைவில் வெளியாக உள்ள ஏஎம்டி மற்றும் புதிய பேஸ் வேரியண்ட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

லாட்ஜியில் புதியவை...

லாட்ஜியில் புதியவை...

ஃப்ரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் கார் உற்பத்தி நிறுவனமான ரெனோ, தங்களின் லாட்ஜி எம்பிவியில், ஈஸி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தபட்ட மாடலை வெளியிட உள்ளனர்.

மேலும், தங்களின் லாட்ஜி எம்பிவியில், புதிய பேஸ் வேரியண்ட்டையும் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

ஈஸி-ஆர் ஏஎம்டி மாடல்;

ஈஸி-ஆர் ஏஎம்டி மாடல்;

CarandBike.com வெளியிட்ட செய்தியில், ரெனோ லாட்ஜி எம்பிவி, 6-ஸ்பீட் ஈஸி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுடன் வெளியாக உள்ளது என அறிவிக்கபட்டுள்ளது. இதே 6-ஸ்பீட் ஈஸி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் தான் ரெனோ டஸ்டர் காம்பேக்ட் எஸ்யூவியிலும் பொருத்தபட்டுள்ளது.

இந்த 6-ஸ்பீட் ஈஸி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ், லாட்ஜி எம்பிவியின் இரு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த 2 வேரியண்ட்களுமே ரெனோவின் 1.5 லிட்டர் டிசிஐ ரெயில் டீசல் இஞ்ஜினின் 108 பிஹெச்பி வெர்ஷனை கொண்டிருக்கும்.

ஈஸி-ஆர் ஏஎம்டி - விலை;

ஈஸி-ஆர் ஏஎம்டி - விலை;

ஈஸி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுடன் வெளியாகும் ரெனோ லாட்ஜி எம்பிவி, வழக்கமான மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட லாட்ஜி எம்பிவியை விட சுமார் 50,000 ரூபாய் விலை உயர்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இன்னோவா உற்பத்தி நிறுத்தம்;

இன்னோவா உற்பத்தி நிறுத்தம்;

டொயோட்டா நிறுவனம், டேக்ஸி ஆபரேட்டர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான தங்களின் இன்னோவா கார்களின் உற்பத்தியை சமீபத்தில் தான் நிறுத்தினர்.

இன்னோவா எம்பிவிக்கு பதிலாக தான், க்ரிஸ்ட்டா என அழைக்கபடும் 2-ஆம் தலைமுறை டொயோட்டா இன்னோவாவை அறிமுகம் செய்கின்றனர். பிரிமியம் எஸ்யூவியாக அறிமுகம் செய்யபடும் க்ரிஸ்ட்டா சற்று கூடுதல் விலையில் அறிமுகம் செய்யபட உள்ளது.

லாட்ஜியின் புதிய வேரியண்ட்;

லாட்ஜியின் புதிய வேரியண்ட்;

இந்திய வாகன சந்தைகளில் மிகவும் புகழ்மிக்க எம்பிவியாக விளங்கிய டொயோட்டா இன்னோவாவின் உற்பத்தி நிறுத்த நடவடிக்கையை உற்று கவனித்து வந்த ரெனோ நிறுவனம், புதிய திட்டம் வகுத்துள்ளது.

ரெனோ நிறுவனம், லாட்ஜி எம்பிவியின் புதிய பேஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்ய உள்ளனர். இது, க்ரிஸ்ட்டா என அழைக்கபடும் 2-ஆம் தலைமுறை டொயோட்டா இன்னோவாவை காட்டிலும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யபடும்.

மேலும் புதிய மாடல்;

மேலும் புதிய மாடல்;

டேக்ஸி உபயோகங்களுக்காக, ரெனோ லாட்ஜி எம்பிவியின் புதிய பேஸ் வேரியண்ட்டை தவிர, மேலும் ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளனர்.

இந்த மாடல், ரெனோ லாட்ஜி எம்பிவியின் தற்போதைய வேரியண்ட் மற்றும் புதிய வேரியண்ட்டுக்கும் இடையில் வகைபடுத்தபட உள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

டேக்ஸி உபயோகங்களுக்காக அறிமுகம் செய்யபட லாட்ஜி எம்பிவியின் 2 வேரியண்ட்களுடைய இண்டீரியர்களுமே, பல வகை பிளாஸ்டிக் மற்றும் ஃபைபர் கொண்டு வடிவமைக்கபட்டிருக்கும்.

தேவை இல்லாத விலை உயர்வுகளை தவிர்க்கும் நோக்கத்துடன், இந்த 2 வேரியண்ட்கள் குறிப்பிட்ட வண்ண தேர்வுகளில் மட்டுமே வழங்கப்பட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே மாடல் விற்பனைக்கு அறிமுகம் - அதிகாரப்பூர்வ தகவல்கள்!

இன்னோவாவுக்க சிக்கலை தரும் விலையில் ரெனோ லாட்ஜி அறிமுகம் - விபரம்

லாட்ஜி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Renault Lodgy is to be offered with Easy-R AMT gearbox and New Base Variant. French carmaker is in plans to launch a new base variant of MPV. Renault wants to offer Lodgy models as a less pricey alternative to new Innova for taxi fleets. Taxis specific Lodgy are expected to feature different plastic and fabrics. It will be available in limited colour choices. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X