க்விட் காரின் பிளாட்ஃபார்மில், மேலும் பல கார்கள் தயாரிக்கபட வாய்ப்பு
க்விட் கார் செய்யபட்ட பிளாட்ஃபார்மில், இன்னும் ஏராளமான கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக ரெனோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரெனோ நிறுவனத்தின் க்விட் கார், சிஎம்எஃப்-ஏ பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்டுள்ளது. இதை அடிப்படையாக கொண்டு, செடான் உட்பட ஏராளமான பாடி ஸ்டைல் உருவாக்கபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரெனோ - நிஸான் அல்லையன்ஸ் கூட்டணியின் சேர்மேன் கார்லோஸ் கோஸ்ன் இது தொடர்பான செய்திகளை நியூயார்க் ஆட்டோ ஷோவில் உறுதி செய்தார். அப்போது, "க்விட் உருவாக்கபட்ட சிஎம்எஃப்-ஏ பிளாட்ஃபார்ம் கொண்டு, இன்னும் பல வாகனங்கள் உருவாக்கபட உள்ளது. தற்போதைய நிலையில், இந்த சிஎம்எஃப்-ஏ பிளாட்ஃபார்ம் அடிப்படையில் க்விட் மட்டும் தான் உள்ளது. கொஞ்ச காலத்தில், இந்த பிளாட்ஃபார்மை கொண்டு, 2-வது, 3-வது-, 4-வது என ஏராளமான கார்கள் தயாரிக்கபட உள்ளது. இந்த சிஎம்எஃப்-ஏ பிளாட்ஃபார்ம் கொண்டு பல்வேறு கிராஸ்ஓவர் மற்றும் செடான் மாடல்கள் கூட தயாரிக்கபட உள்ளது" என கார்லோஸ் கோஸ்ன் அறிவித்தார்.

இந்த கிராஸ்ஓவர் மற்றும் செடான், இந்திய சந்தைகளுக்காக மட்டும் தயாரிக்கபடுவதாக இருக்காது. ரெனோ - நிஸான் அல்லையன்ஸ் கூட்டணி, இவற்றை பல்வேறு வளரும் சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்ய உள்ளது.
ரெனோ - நிஸான் அல்லையன்ஸ் கூட்டணியின் பிற பிராண்ட்களான நிஸான் மற்றும் டட்சன் ஆகிய நிறுவனங்களும், இதே சிஎம்எஃப்-ஏ பிளாட்ஃபார்ம் கொண்டு, வேறு பல கார்களை தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்டுகிறது.
மேலும், இதே பிளாட்ஃபார்ம் கொண்டு, விலை குறைந்த எலக்ட்ரிக் காரும் தயாரிக்கபடலாம் என தெரிவிக்கபடுகிறது.


Click it and Unblock the Notifications








