புதிய லோகன் மற்றும் சான்டேரோ மாடல்களை அறிமுகம் செய்தது ரெனோ

By Ravichandran

ரெனோ நிறுவனம், புதிய புதிய லோகன் மற்றும் சான்டேரோ மாடல்களை அறிமுகம் செய்தது. பிரபல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பிரபலமான மாடல்களில் புதிய வேரியன்ட்கள் அல்லது மேம்பாடுகள் வழங்குவது வழக்கம். இவ்வாறு ரெனோ நிறுவனமும், சில புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளனர்.

ரெனோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மாடல்கள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

புதிய மாடல்கள்;

புதிய மாடல்கள்;

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ நிறுவனம், தங்களின் 4 புதிய மாடல்களுக்கு பொலிவு கூட்ட முடிவு செய்து, லோகன் / சிம்பல், லோகன் எம்சிவி, சான்டேரோ, சான்டேரோ ஸ்டெப்அவே ஆகிய மாடல்களுக்கு புதிய வடிவம் அளித்துள்ளனர். இந்த 4 புதிய மாடல்களும் ரெனோ நிறுவனத்தின் கோட்கள் மற்றும் அடையாளத்தை தொடர்ந்து தக்கவைத்து கொண்டுள்ளது.

தோற்றம்;

தோற்றம்;

ரெனோ நிறுவனத்தின் லோகன் / சிம்பல், லோகன் எம்சிவி, சான்டேரோ, சான்டேரோ ஸ்டெப்அவே உள்ளிட்ட நான்கு மாடல்களிலும் லைட்டிங் சிக்னேச்சர் மற்றும் இதன் முன் பிரன்ட் மற்றும் ரியர் பகுதிகளில் 'சி' வடிவம் கொண்டுள்ளது.

முன் தோற்றம்;

முன் தோற்றம்;

ரெனோ நிறுவனத்தின் லோகன் / சிம்பல், லோகன் எம்சிவி, சான்டேரோ, சான்டேரோ ஸ்டெப்அவே மாடல்களின் முன் பகுதிகளில் புதிய எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் பொருத்தப்பட உள்ளது. இவற்றின் ரேடியேட்டர் கிரில், ரெனோவின் புதிய டிசைன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் ரேடியேட்டர் கிரில், புதிய பம்பர் மற்றும் ஃபாக் லைட் ரிம்களுடன் ஒன்றாக பொருத்தப்படும்.

பின் தோற்றம்;

பின் தோற்றம்;

ரெனோ நிறுவனத்தின் லோகன் / சிம்பல், லோகன் எம்சிவி, சான்டேரோ, சான்டேரோ ஸ்டெப்அவே மாடல்களின் பின் பகுதிகளில், முன் பக்கத்தில் உள்ள டிசைன் தொடர்கிறது. இவற்றின் டிசைன் நவீனமாகவும், கச்சிதமாகவும் உள்ளன. இவற்றின் தோற்றங்களின் அம்சங்கள், இந்த மாடல்களுக்கு இடையே ஒரு குடும்ப பிணைப்பு ("family tie") உருவாக்குவது போல் அமைந்துள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

ரெனோ நிறுவனத்தின் லோகன் / சிம்பல், லோகன் எம்சிவி, சான்டேரோ, சான்டேரோ ஸ்டெப்அவே மாடல்களின் கேபின்களுக்கு, சாட்டின்-எப்ஃபெக்ட் உடைய குரோம் பூச்சு கொண்ட பட்டன்கள், முன் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட ரிங்குகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மேம்பட்ட பினிஷ் கொடுப்பதற்காக நவீன வென்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய லோகன் மற்றும் சான்டேரோ மாடல்களை அறிமுகம் செய்தது ரெனோ

ரெனோவின் இந்த 4 புதிய மாடல்களுக்கு மென்மையான உணர்வு வழங்கும் வகையிலான ஸ்டீயரிங் வீல் மற்றும் புதிய அப்ஹோல்ஸ்ட்ரி தேர்வுகள் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, பீஜ் அல்பாக்கா மற்றும் 3டி மெஷ் குறிப்பாக சான்டேரோ ஸ்டெப்அவே மாடலுக்கே உரிய வகையில் அளிக்கப்படுகிறது.

புதிய லோகன் மற்றும் சான்டேரோ மாடல்களை அறிமுகம் செய்தது ரெனோ

புதிய ஸ்டீயரிங் வீல் மத்தியில் ஹார்ன் உள்ளது. ஸ்பீட் லிமிட்டர் / கண்ட்ரோல்லர்கள் சுலபமாக உபயோகிக்கும் வகையில் மாற்றியமைக்க பட்டுள்ளது. மேலும், இந்த அனைத்து மாடல்களுக்கும், எலக்ட்ரிக் பவர் விண்டோ ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

அம்சங்கள் பொருத்த வரை, புதிய ரெனோ லோகன் மற்றும் சான்டேரோ ஸ்டெப்அவே மாடல்களில் ரேடார் உடைய ரிவர்சிங் கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஒன்-டச் இன்டிக்கேட்டர்கள், மீடியாநேவ் எவல்யூஷன் உடைய மல்டிமீடியா சிஸ்டம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

இந்திய பாலங்களின் ராணி... பாம்பன் ரயில் பாலம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

ஆளில்லா சரக்கு கப்பல்களை கரையிலிருந்தே கட்டுப்படுத்தும் நுட்பம்: ரோல்ஸ்ராய்ஸ் மும்முரம்!

தமிழக அரசுக்கு சொந்தமான விமானமும், அதன் சுவாரஸ்ய விஷயங்களும்... !!

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault is giving fresh look to its Logan/Symbol, Logan MCV, Sandero, and Sandero Stepway. These four new models combine codes of Renault identity. These four models adopt lighting signature, that is visible on all recent Renault models, with characteristic 'C' shape on both, the front and back. Renault is offering wide range of engine and gearbox options. To know more, check here...
Story first published: Wednesday, October 12, 2016, 16:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X