எரிபொருளை மிச்சப்படுத்தும் கார்களே இந்தியர்களின் சாய்ஸ்... !!

Written By: Krishna

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகள் எல்லாம் மிகப் பெரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்த நேரம்... அமெரிக்காவின் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டன... அவற்றில் பல திவாலானதாக அறிவிக்கப்பட்டன. இறக்குமதி செலவு உச்சத்தை எட்டியது. கச்சா எண்ணெய், தங்கம் என அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்தன.

ஆனால், இந்தியாவில் மட்டும் அதன் பாதிப்புகள் எதுவும் பெரிதாக உணரப்படவில்லை. அதற்குக் காரணம், நம் தேசத்தில் காலங்காலமாக மக்கள் கடைப்பிடித்து வரும் ஒரு பழக்கம்தான். புரியவில்லையா? சேமிப்புப் பழக்கம்தான் நம் நாட்டின் பொருளாதாரத்தையே உயர்த்தியது. பிற நாட்டு வங்கிகள் எல்லாம் பணம் இன்றி திவாலான போது, இந்தியாவில் மட்டும் மக்களின் பணம் வங்கிககளில் தேவையான அளவு இருப்பு இருந்தது.

ஃபோர்டு கார்

இதை வைத்து என்ன உணர முடிகிறது என்றால், எதிர்காலத் தேவைகளுக்கும், சிக்கனத்துக்கும் நாம் எப்போதும் முக்கியத்துவம் அளிப்போம் என்பது தெளிவாகிறது. தற்போது ஃபோர்டு நி்றுவனம் மேற்கொண்ட ஓர் ஆய்விலும், அந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது, எந்த வகையான கார்களை வாங்க விரும்புவீர்கள் என்று உலக நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில், அதிக மைலேஜ் மற்றும் குறைந்த எரிபொருள் செலவு கொண்ட வாகனங்களையே வாங்குவோம் என்று பெரும்பாலான இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சர்வேயை ஃபோர்டு நிறுவனத்துக்காக குளோபல் வெப் இன்டெக்ஸ் என்ற நிறுவனம் ஆன் - லைன் வாயிலாக நடத்தியது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 9,500 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பங்கேற்ற இந்தியர்களில் 67 சதவீதம் பேர் எரிபொருளை மிச்சம் செய்யும் கார்களை டிக் செய்துள்ளனர்.

உலக அளவில் நவீன தொழில்நுட்ப கார்களையும், உயர் ஆற்றல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களையும் பலர் தேர்வு செய்யும்போது, இந்தியர்களின் இந்த முடிவு சர்வே எடுத்தவர்களுக்கு சற்று வியப்பை ஏற்படுத்தியதாம். எதிர்காலத் திட்டம் மற்றும் செலவுகளை மிச்சம் செய்யும் வியூகம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியர்களின் செயல்பாடு இருப்பதாக அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆடம்பரங்களுக்கும், அலட்டல்களுக்கும் பிடி கொடுக்காமல் புத்திசாலித்தனமாக யோசித்து முடிவெடுப்பதில் நமக்கு நிகர் நாம்தான் என்பதற்கான சான்றுகளில் ஒன்றுதான் இந்த ஆய்வு முடிவுகள்.

English summary
Report: Fuel Efficiency Is The Major Concern For Indian Drivers!

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark