வெறும் 1.5 கிலோ எரிபொருளில் 482 கிமீ தூரம் பயணிக்கும் புதிய ஹைட்ரஜன் கார்!

Written By:

வெறும் 1.5 கிலோ ஹைட்ரஜன் எரிபொருளில் 482 கிமீ தூரம் பயணிக்கும் புதிய ஹைட்ரஜன் கார் ஒன்றை இங்கிலாந்தை சேர்ந்த ரிவர்சிம்பிள் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ரசா என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய காரின் மைலேஜ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு தராத அம்சங்களை கொண்டிருப்பதோடு, மிக அதிக மைலேஜ் வழங்கும் இந்த புதிய கார் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இலகு எடை

இலகு எடை

இந்த கார் கார்பன் ஃபைபர் சேஸீயில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், இதன் சேஸீ வெறும் 40 கிலோ மட்டுமே எடை கொண்டது. அத்துடன், இலகு எடையுடைய உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், காரின் மொத்த எடையே 580 கிலோ மட்டுமே.

இருக்கை வசதி

இருக்கை வசதி

நகர்ப்புறத்திற்கான இந்த கார் மிக அடக்கமான வடிவமைப்பை பெற்றிருக்கிறது. இந்த காரில் இருவர் பயணிக்கலாம்.

மின் மோட்டார்கள்

மின் மோட்டார்கள்

நான்கு சக்கரங்களுக்கும் தலா ஒரு மின் மோட்டார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இயங்கும் விதம்

இயங்கும் விதம்

ஹைட்ரஜன் எரிபொருளை ஃப்யூவல் செல்லில் பாய்ச்சும்போது, சவ்வூடு பரவல் முறையில் ஆக்சிஜனுடன் சேர்ந்து மின்சாரத்தையும், நீராவியையும் உற்பத்தி செய்கிறது. அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. நீராவி மட்டும் கழிவாக வெளியேறும்.

பேட்டரி மின் ஆற்றல்

பேட்டரி மின் ஆற்றல்

பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரத்தை வைத்து சக்கரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார்கள் மூலமாக கார் இயங்கும்.

பிரேக் ஆற்றல்

பிரேக் ஆற்றல்

பிரேக் பிடிக்கும்போது உண்டாகும் ஆற்றலில் 50 சதவீதத்தை மீள் சுழற்சி முறையில் சூப்பர் கெப்பாசிட்டர்களில் சேமிக்கப்பட்டு, மின் மோட்டார்களுக்கு கூடுதலாக வழங்கப்படுகிறது. இதன்மூலமாகவே, அதிக மைலேஜ் வழங்குவதை உறுதி செய்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

இந்த கார் 1.5 கிலோ ஹைட்ரஜன் எரிபொருளில் 482 கிமீ தூரம் பயணிக்கும். கணக்கீடுகளின்படி, ஒரு லிட்டருக்கு 106 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 96 கிமீ வேகத்தில் செல்லும் என்று ரிவர்சிம்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆய்வுப் பணிகள்

ஆய்வுப் பணிகள்

தற்போது ரசா காரின் முதல் புரொட்டோடைப் மாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஓர் ஆண்டுக்கு இந்த கார் முழுமையாக சாலை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும்.

விற்பனை?

விற்பனை?

வரும் 2018ம் ஆண்டில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மேலும், லீஸ் அடிப்படையில் காரை விற்பனை செய்வதற்கும் ரிவர்சிம்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நிதி உதவி

நிதி உதவி

இந்த காரை தயாரிக்கும் ரிவர்சிம்பிள் என்ற நிறுவனத்துக்கு வெல்ஷ் அரசு சார்பில் 2 மில்லியன் பவுண்ட் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

 
English summary
Riversimple Rasa Hydrogen Car Unveiled.
Story first published: Tuesday, February 23, 2016, 14:35 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark