ரோட் கிங் ஈ-ரிக்ஷா இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்
ரோட் கிங் ஈ-ரிக்ஷா இந்தியா ஆட்டோமொபைல் சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.
இந்த ரோட் கிங் ஈ-ரிக்ஷா (மின்சார ரிக்ஷா) எக்ஸ்ட்ராமைல் கேஸ் டெக் என்ற நிறுவனம் மூலம் தயாரித்து வழங்கபடுகிறது.
உள்நாட்டிலேயே தயாரிக்கபட்ட ரோட் கிங் ஈ-ரிக்ஷாவில் டிரைவர் மற்றும் 4 பயணியர் உட்பட மொத்தம் 5 பேர் பயணிக்க முடியும். இது 450 கிலோகிராம் எடை கொண்டதாக உள்ளது.
ரோட் கிங் ஈ-ரிக்ஷா சுமார் 100 கிலோமீட்டர் இயங்குவதற்கு, 8 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். இது வெரும் 8 யூனிட் மின்சாரம் மட்டுமே உபயோகித்து கொள்கிறது. ரோட் கிங் ஈ-ரிக்ஷா, ஒரு கிலோமீட்டர் செல்வதற்கு ஆகும் செலவு வெரும் 65 பைசா மட்டுமே என கூறப்படுகிறது.

ரோட் கிங் ஈ-ரிக்ஷா போன்ற ஈ-ரிக்ஷா வாகனங்கள், பெட்ரோல், எல்பிஜி மற்றும் சிஎன்ஜி மூலம் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாகளுக்கு சிறந்த மாற்றாக அமைந்து வருகிறது.
ஈ-ரிக்ஷா வாகனங்கள் சுற்றுசூஷலுக்கு கேடு விளைவிக்காத வகையிலும், மாசு உமிழ்வு அற்ற வாகனங்களாக திகழ்கின்றன. இவை அனைத்தையும் தாண்டி, இவற்றை இயக்க மிக குறைந்த செலவே ஆகிறது என்பது இவற்றின் கூடுதல் சிறப்பு ஆகும்.
ரோட் கிங் ஈ-ரிக்ஷா, வெரும் 1.25 லட்சம் ரூபாய் என்ற விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








