ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ச்ளைட்ரில் தெரிந்து கொள்ளலாம்.

ரோல்ஸ்ராய்ஸ் டான்...

ரோல்ஸ்ராய்ஸ் டான்...

இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம், ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் என்ற தங்களின் சமீபத்திய சொகுசு காரை, உற்பத்தி செய்து வழங்குகிறது.

முன்னதாக, ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள், 2015 ஃபிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபட்டது.

இது ஊக்கத்திற்காக, 1952 சில்வர் டான் டிராப்ஹெட் மாடலை ஏற்றுக்கொண்டது. கடைசியாக, ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம், 1952-ல் சில்வர் டான் டிராப்ஹெட் என்ற கோச் கட்டுமான நிறுவனத்தை தங்களின் கார்களை வடிவமைக்க அனுமதித்தனர்.

அமைதியான கன்வெர்டிபிள்;

அமைதியான கன்வெர்டிபிள்;

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு கார் தான், உலகிலேயே மிகவும் அமைதியான கன்வெர்டிபிள் கார் என கூறப்படுகிறது.

இது ரோல்ஸ்ராய்ஸ் ரைத் கூபேவை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் மேற்கூரை விலக்கப்ட்ட நிலையில், ரோல்ஸ்ராய்ஸ் ரைத் கூபேவுக்கு நிகராக அமைதியாக இருக்கும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு கார், 6.6 லிட்டர், ட்வின்-டர்போ, வி12 இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 563 பிஹெச்பியையும், 780 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு காரின் இஞ்ஜின், 8-ஸ்பீட் இசட்எஃப் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக தான், ரியர் வீல்களுக்கு பவர் மற்றும் டார்க் கடத்தப்படுகிறது.

செயல்திறன்;

செயல்திறன்;

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 4.9 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு காரின் உச்சபட்ச வேகம், மணிக்கு 250 கிலோமீட்டர் என்ற அளவில் எலக்ட்ரானிக் முறையில் கட்டுபடுத்தபட்டுள்ளது.

சாஃப்ட் டைப் கன்வெர்டிபிள்;

சாஃப்ட் டைப் கன்வெர்டிபிள்;

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு கார், சாஃப்ட் டைப் கன்வெர்டிபிள் மாடல் ஆகும். இது ஃபேப்ரிக் மேற்கூரை (ரூஃப்) கொண்டுள்ளது.

இந்த ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி, மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில், 22 நொடிகளில் திறந்தும், மூடியும் கொள்கிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம், ஒரு ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு காரை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்துள்ளனர்.

இது, இந்த மாடல் விரைவில் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யபடுவதற்கான மிக முக்கியமான அறிகுறியாக உள்ளது.

விலை;

விலை;

ரோல்ஸ்ராய்ஸ் டான் கன்வெர்டிபிள் சொகுசு கார், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது, சுமார் 6 கோடி ரூபாய் என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

திப்பு சுல்தானை போற்றும் புதிய கோஸ்ட் மைசூர் எடிசன்: ரோல்ஸ்ராய்ஸ் அறிமுகம்

நாய்களுக்காக ரோல்ஸ்ராய்ஸ் உருவாக்கிய பிரத்யேக கார் மாடல்!

ரோல்ஸ்ராய்ஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
British luxury carmaker Rolls-Royce is expected to launch its latest car, Rolls-Royce Dawn Convertible in India soon. Rolls-Royce imported Dawn into India, hinting at imminent launch. Rolls-Royce claim that, this Dawn is the quietest convertible in world. Rolls-Royce Dawn is expected to be priced around Rs. 6 Crores when it is launched in India. To know more, check here...
Story first published: Tuesday, June 7, 2016, 19:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X