பாதுகாபற்ற அனைத்து விதி மீறல்களுக்கும் கடுமையான தண்டனைகள் விரைவில்

Written By:

மத்திய அரசு வடிவமைத்து வரும் சட்டங்கள் படி, அனைத்து விதி மீறல்களுக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசு மூலம் விரைவில் அமலுக்கு வர உள்ள சட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

இந்தியாவில் நாள் தோறும் ஏராளமான விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதற்கு, வலுவற்ற சட்டங்களும், இருக்கும் சட்டங்களும் சரியாக நடைமுறை படுத்தப்படாததும் மிக முக்கியமான காரணங்களாக உள்ளன.

இதற்காக, மத்திய அரசு கடுமையான சட்டங்கள் கொண்டு வரும் வகையில் புதிய ரோட் சேஃப்டி பில் (Road Safety Bill) எனப்படும் புதிய சட்டங்களை வகுத்து வருகிறது.

இதன் மூலம், இனிமேல் இந்திய சாலைகளில் செல்லும் வாகனங்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பு, முன்பை விட இனி அதிக அளவில் உறுதிபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாகன உற்பத்தியாளர்கள்;

வாகன உற்பத்தியாளர்கள்;

சாலை பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் அதிக்கப்படியான பொறுப்பு வாகன உற்பத்தியாளர்களுக்கு தான் உள்ளது. இதனால், வாகன உற்பத்தியாளர்களுக்கு, அபராதமும், தண்டனைகளும் அதிமாக உள்ளது.

குறைகள் மிகுந்த வாகன டிசைன் மற்றும் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் வாகனம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், இத்தகைய வாகனங்கள் கட்டாயாமான முறையில் ரீகால் செய்து கொள்ளப்படும்.

தனிநபர் குற்றம்;

தனிநபர் குற்றம்;

வாகன உற்பத்தியாளர்கள் போல், தனிநபர் குற்றங்களும், விபத்துகளுக்கும் முக்கியமான காரணமாக உள்ளது. இதனால், தண்டனை டிராஃப்ட் எனப்படும் வரைவு நிலையில் உள்ளது.

இந்த வரைவுப்படி, ஃபாக் லைட்கள், பிரஷர் ஹாரன்கள், கூடுதல் (எக்ஸ்ட்ரா) லைட்கள், ரூஃப்-டைப் கேரியர்கள் மற்றும் மெட்டாலிக் புரோடெக்டர்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்படாத உதிரிபாகங்கள் உபயோகிக்கும் தனிநபர்கள் மீது 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

சட்ட விரோதமான மேம்பாடுகள்;

சட்ட விரோதமான மேம்பாடுகள்;

சட்ட விரோதமான மேம்பாடுகள் செய்யும் டீலர்கள் மற்றும் பில்டர்கள் உள்ளிட்டோருக்கு, அவர்கள் செய்யும் மேம்பாடுகளுக்கு, ஒவ்வொரு வாகனத்திற்கும் 1 லட்சம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கபடும்.

உதிரி பாகங்கள்;

உதிரி பாகங்கள்;

மற்றவர்களை போல், உதிரி பாகங்கள் டீலர்களுக்கும் தண்டனைகள் உள்ளது.

வாகனங்களுக்கான அரசு அங்கிகாரம் இல்லாத முக்கியமான பாதுகாப்பு தொடர்பான உதிரிபாகங்கள் விற்றால் ("selling non-approved critical safety components for vehicles") உதிரி பாகங்கள் டீலர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

தனிநபர் குற்றம் - லைசன்ஸ்;

தனிநபர் குற்றம் - லைசன்ஸ்;

போலி டிரைவிங் லைசன்ஸ் வைத்து கொண்டு வாகனம் இயக்குவது போன்ற தனிநபர் குற்றம் செய்பவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் மற்றும் 1 வருடம் சிறை தண்டனை வழங்கப்படும்.

மைனர் வாகனம் இயக்கினால்...

மைனர் வாகனம் இயக்கினால்...

மைனர் வாகனம் இயக்க அனுமதித்தால், குறிப்பிட்ட வாகனத்தின் உரிமையாளர் அல்லது மைனர் நிலையில் இருக்கும் போது வாகனம் இயக்க அனுமதிக்கும் மைனரின் கார்டியன்களுக்கு (பெற்றோர் அல்லது பொறுப்பாளர்) 20,000 ரூபாய் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

மேலும், இத்தகைய வாகனங்களின் ரெஜிஸ்டிரேஷன் சர்டிபிகேட் எனப்படும் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும்.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

இந்த மேற்குறிப்பிட்ட சட்டங்கள், வரைவுகள், மசோதாகள் அனைத்தும், சாலை பாதுகாப்புக்காக கடுமையான சட்டங்கள் விதிக்க மத்திய அரசு மூலம் அமைக்கப்பட்ட மாநில போக்குவரத்து மந்திரிகள் குழு மூலம் பரிந்துரைக்கபட்டவை ஆகும்.

இந்த சட்டங்கள் கேட்பதற்கு மிக கடுமையாக இருந்தாலும், இவை அனைத்தும் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், இந்திய சாலைகளில் செல்பவர்களின் பாதுகாப்பு மிக சிறப்பான அளவில் உறுதி செய்யப்படும் எனும் நம்பிக்கை பிறக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

விபத்தில் கல்லு மாதிரி நின்ற ஜாகுவார் கார்.. கடையாணி கழன்ற டாடா டிப்பர்!!

விபத்து தொடர்புடைய செய்திகள்

தீ விபத்து தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Central Government's new Road Safety Bill seems to insure that cars and bikes plying on Indian roads in future will be as safe as humanly possible for occupants and others. Government is proposing strict fine of Rs. 100 crore on automakers. Other hefty Fines and Punishments are in store for Dealers, Individuals and all types of Road Rules violators. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark