பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்தால், புதிய வாகனங்களுக்கு சலுகைகள் கிடைக்கிறதா?

By Ravichandran

பழைய மற்றும் மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் கொண்டுள்ள உரிமையாளர்கள், தங்களின் வாகனங்களை ஸ்கிராப் செய்து கொள்ள வேண்டும் என இந்திய அரசு விரும்புகிறது. இப்படி பழைய வாகனங்களை மக்கள் ஸ்கிராப் செய்ய துவங்கினால், அதன் மூலம் கிடைக்கும் பழைய ஸ்டீல் மற்றும் பிற மெட்டல்களினால் இறக்குமதி மீது நாம் சார்ந்து இருக்கும் நிலையின் தாக்கம் குறையும்.

இதற்காக இந்திய அரசு, வி-விஎம்பி அல்லது வால்யுன்டரி வெஹிகிள் ஃப்லீட் மாடர்நைசேஷன் புரோக்ராம் (Voluntary Vehicle Fleet Modernisation Programme (V-VMP)) என்ற திட்டம் அமல்படுத்தியுள்ளது. நவீனமயமாக்கல் நோக்கத்திற்காக வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய வாகனங்களை தாமாக முன் வந்து ஸ்கிராப் செய்து கொண்டால் இன்சென்டிவ் எனப்படும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

scrapping-old-indian-vehicles-offer-8-12-percent-incentive-new-cars

ஒரு உரிமையாளர், தமது பழைய 4 சக்கர வாகனத்தை ஸ்கிராப் செய்து, புதிய வாகனம் வாங்கும் போது, அவருக்கு 8% முதல் 12% வரையிலான ஊக்கத்தொகை பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

தற்போதைய நிலையில், இந்தியாவில் சுமார் 28 மில்லியன் பழைய வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்படலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. பழைய வாகனங்களின் உலோகங்கள் (மெட்டல்களை) ஸ்கிராப் செய்வதன் மூலம், ஒவ்வொரு வருடமும் 11,500 கோடி ரூபாய் மதிப்பிலான ரா மெட்டீரியல் எனப்படும் மூலப்பொருள்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக, 10 வருடங்களுக்கும் கூடுதலாக பழமையான வாகனங்கள் பிஎஸ்-1 மாசு வெளிப்பாடு விதிமுறைகள் (எமிஷன் நார்ம்ஸ்) மட்டுமே பின்பற்றுபவையாக இருக்கும். இது போன்ற வாகனங்கள் அதிக மாசு ஏற்படுத்துபவையாக இருக்கும். மாசு வெளிப்பாடு அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க வாகனங்கள் நவீனமயமாக்கல் தொடர்பான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நவீன வாகனங்களை காட்டிலும், பழைய வாகனங்கள் 10% முதல் 12% வரை அதிக மாசு வெளிபடுத்துபவையாக உள்ளன.

வி-விஎம்பி திட்டமானது, மார்ச் 31, 2005 அல்லது அதற்கு முன்னதாக தயாரிக்கபட்டவையாக இருக்க வேண்டும். ஒரு வாடிக்கையாளர் தமது பழைய 4 சக்கர வாகனத்தை ஸ்கிராப் செய்து, புதிய வாகனம் வாங்கும் போது, அவருக்கு 8% முதல் 12% வரையிலான ஊக்கத்தொகை கட்டாயம் வழங்கப்படும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

Most Read Articles
English summary
Indian Government wants individuals to scrap their old and polluting vehicles. Now an incentive could make owners to scrap their old automobiles. Voluntary Vehicle Fleet Modernisation Programme (V-VMP) by Indian Government will offer an incentive. When an owner scraps his old vehicle and purchases new four-wheeler, they can avail incentives worth 8-12 percent. To know more, check here...
Story first published: Monday, June 6, 2016, 19:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X