இந்தியர்கள் தானியங்கி கார்களை இயக்க அஞ்சுகிறார்களா?

Written By:

கார்கள் வாங்குவது மற்றும் அவற்றை ஒட்டி மகிழ்வது அனைவருக்கும் பிடித்த விஷயங்களில் ஒன்றாகும். காலத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு புதிய புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதிலும், தானியங்கி கார்கள் சமீப காலமாக புகழ்பெற்றதாக மாறி வருகிறது. இது, பொதுமக்களின் உபயோகத்திற்கு வர உள்ள நிலையில், இந்தியர்கள் இவற்றை இயக்க அஞ்சுகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தானியங்கி கார்கள்...

தானியங்கி கார்கள்...

தானியங்கி கார்கள் அல்லது செல்ஃப் டிரைவிங் கார்கள் என அழைக்கப்படும் இவை, சில ஆண்டுகளுக்கு முன் வெறும் கனவாகவே இருந்தது. இப்போது, இவை நினைவாகவே மாறி வருகிறது. இது இந்தியாவிலும் விரைவில் உபயோகத்திற்கு வர உள்ளது. இந்த நிலையில், இது தொடர்பான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில், சுமார் 40% இந்தியர்கள் தானியங்கி கார்களை இயக்க அஞ்சுவார்கள் அல்லது இத்தகைய முயற்சிகளையே மேற்கொள்ள மாட்டார்கள் என்ற செய்தி வெளியாகிறது.

ஆய்வு;

ஆய்வு;

யூனிவெர்சிட்டி ஆஃப் மிச்சிகன் டிரான்ஸ்போர்டேஷன் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் என்ற பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சிவக் என்ற பேராசிரியர் இந்த தானியங்கி கார்கள் தொடர்புடைய பல்வேறு தகவல்களை வெளியிட்டார். "ஒரு பயணி இலகு ரக வாகனத்தில், ஒரு நாளில் சராசரியாக ஒரு மணி நேரம் செலவிடுகிறார். தானியங்கி கார்களை பயன்படுத்தினால், இந்த நேரத்தை, வேறு ஏதேனும் விஷயத்திற்கு பிரயோகிக்கலாம். கூட்டப்படும் உற்பத்தி திறன் தான், இந்த தானியங்கி கார்களின் மிக முக்கியமான எதிர்பார்ப்பாக உள்ளது" என சிவக் தெரிவித்தார்.

அச்சம்;

அச்சம்;

"தானியங்கி கார்கள் மீதான அச்சம் மற்றும் நம்பிக்கையின்மையின் காரணமாகவே, இந்த கார்களை உபயோகித்தாலும் இதை பிரயோகிப்பவர்களில் சுமார் 40% மக்கள், தங்களுக்கு மிச்சம் ஆகும் நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடியாது" என்ற செய்தியும் இந்த ஆராய்ச்சியில் வெளியாகியுள்ளது.

மாற்று கருத்து;

மாற்று கருத்து;

சுமார் 60% இந்த தானியங்கி கார்களின் வளர்ச்சியை முழுமையான முறையில் பயன்படுத்தி கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தானியங்கி கார்களால் மிச்சமாகும் நேரத்தை, 10% பேர் படிக்க பயன்படுத்தி கொள்வார்கள் என்றும், 15% மக்கள் தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சேட்டிங் செய்து மகிழ்வார்கள் என்றும், 5% மக்கள் உறங்குவார்கள் என்றும், 12% மக்கள் படங்கள் பார்ப்பார்கள் என்றும், 16% மக்கள் தங்கள் வேலைகளை செய்வார்கள் என்றும், 2% மக்கள் கேம்ஸ் விளையாடுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஆராய்ச்சி தரவு;

அமெரிக்காவின் ஆராய்ச்சி தரவு;

தானியங்கி கார்கள் பற்றிய ஆராய்ச்சி, அமெரிக்காவிலும் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 23% மக்கள் தானியங்கி கார்களை உபயோகிக்கவே மாட்டார்கள் என்றும், 36% மக்கள் தானியங்கி கார்களை உபயோகித்தாலும்பயத்தின் காரணமாக சாலைகளையே பார்த்து கொண்டிருப்பார்கள் என்றும், 8% மோஷன் சிக்னஸ் எனப்படும் பிரச்னைக்கு ஆளாக வாய்ப்புகள் உள்ளதாக அஞ்சுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வருங்காலம்;

வருங்காலம்;

தானியங்கி கார்களை பயன்படுத்தினாலும், தானியங்கி கார்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்க அதிகரிக்க தான், அதனால் மிச்சமாகும் நேரத்தை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு மக்கள் பயன்படுத்துவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

கூகுள் தானியங்கி கார் பற்றி 10 சுவாரஸ்ய விஷயங்கள்!

தானியங்கி கார்களை தொடர்ந்து தானியங்கி பைக்: பம்பார்டியர் தயாரிக்கிறது!

அடுத்தக்கட்டத்துக்கு போன கூகுள்... புதிய தானியங்கி கார் மாடலை அறிமுகப்படுத்தியது!

English summary
Recently, survey was carried on Self driving cars and nearly 40 percent of Indians said they will be fearful or not attempt any activities in them. Sivak, research professor at University of Michigan Transportation Research Institute said, "Average occupant spends about an hour day travelling in car. Productive activities in self driving cars may increase only, after confidence level rises...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark