அமோக மைலேஜ் வழங்கும் ஷெல் கான்செப்ட் கார் அறிமுகம் - முழு தகவல்கள்

By Ravichandran

ஷெல் நிறுவனம் மற்றும் கார்டான் முர்ரே இணைத்து மிக அதிகமாக மைலேஜ் வழங்கும் காரை உருவாக்கியுள்ளனர்.

ஷெல் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த புதிய கான்செப்ட் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய கார்;

புதிய கார்;

ஷெல் நிறுவனம் புதிய மற்றும் பிரத்யேகமான கான்செப்ட் கார் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இதற்கு ஷெல் அல்ட்ரா எனர்ஜி எஃப்ஃபீஷியண்ட் கார் (Shell's Ultra Energy Efficient car) என பெயர் சூட்டபட்டுள்ளது.

இது வரை இந்த கார், உற்பத்தி நிலை மாடலாக மாற்றபடுமா, இல்லையா என்பது குறித்து எந்த ஒரு உறுதியான தகவல்களும் வெளியிடபடவில்லை.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஷெல் அல்ட்ரா எனர்ஜி எஃப்ஃபீஷியண்ட் கார் என்ற ஷெல் கான்செப்ட் காரில் 660 சிசி, அலுமினியத்தால் ஆன 3-சிலிண்டர் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

இந்த இஞ்ஜின் 43 பிஹெச்பியையும், 64 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

செயல் திறன்;

செயல் திறன்;

ஷெல் கான்செப்ட் கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 15.8 நொடிகளில் எட்டி விடுகிறது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

ஷெல் கான்செப்ட் காரின் உச்சபட்ச வேகம், மணிக்கு 145 கிலோமீட்டர் என்ற அளவில் கட்டுபடுத்தபட்டுள்ளது.

எடை;

எடை;

இந்த கான்செப்ட் காரின் எடையை, 550 கிலோகிராம் என்ற மிக குறைந்த அளவில் இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளது.

குறைந்த எனர்ஜி பிரயோகம்;

குறைந்த எனர்ஜி பிரயோகம்;

ஷெல் கான்செப்ட் கார், மிக கடுமையான நிலைகளிலும் சார்பற்ற சோதனைகள் மேற்கொள்ளபடும் போது 34% குறைவான எனர்ஜி (சக்தி) பிரயோகம் செய்வதாக தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள எஸ்யூவிகளோடு ஒப்பிடுகையில், ஷெல் கான்செப்ட் கார் அதன் மொத்த வாழ் நாட்களிலேயே 69% குறைவான எனர்ஜி பிரயோகம் செய்கிறது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஷெல் கான்செப்ட் கார், நல்ல மைலேஜ் கொண்ட கார் ஆகும். இது 100 கிலோமீட்டர் தூரத்திற்கு 2.64 லிட்டர் எரிபொருள் மட்டுமே எடுத்து கொள்கிறது.

அதாவது, ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 37.87 என்ற கிலோமீட்டர் அபார மைலேஜ் வழங்குகிறது.

புதுமைகள்;

புதுமைகள்;

பல்வேறு பெஸ்போக் ஷெல் லூப்ரிகண்ட்கள், இந்த ஷெல் கான்செப்ட் காரின் எரிபொருள் திறனை மேலும் 5% சதவிகிதம் வரை கூட்டியுள்ளது.

மேலும், இந்த ஷெல் கான்செப்ட் காரின் உற்பத்திக்கு புதுமையான குறைந்த அளவிலான கார்பன் டை ஆக்ஸைட் உற்பத்தி செய்யும் நடைமுறை பின்பற்றபட்டது.

வடிவமைப்பு;

வடிவமைப்பு;

ஷெல் கான்செப்ட் காரின் இந்த சாகசம் நிறைந்த வடிவமைப்புக்கு கார்டன் முர்ரே என்ற புகழ்மிக்க ஆட்டோமோட்டிவ் இஞ்ஜினியர் நியமிக்கபட்டார்.

கார்டன் முர்ரே, அவரது மெக்லாரன் எஃப்1 மாடல் வடிவமைப்புக்கு புகழ் பெற்றவர். கார்டன் முர்ரே வடிவமைத்த இந்த மெக்லாரன் எஃப்1 மாடல், உச்சபட்சமாக மணிக்கு 386 கிலோமீட்டரை எட்டி சாதனை படைத்தது.

3-ஸீட்டர்;

3-ஸீட்டர்;

மெக்லாரன் எஃப்1 மாடல் வடிவமைத்த கார்டன் முர்ரே அவர்களுக்கு, ஷெல் நிறுவனம், இந்த 3-ஸீட்டர் காரை வடிவமைக்கு சவாலை வழங்கியது.

ஆம், இந்த ஷெல் கான்செப்ட் கார், 3 பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கபட்டுள்ள 3-ஸீட்டர் கார் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

காரில் அதிகபட்ச மைலேஜை பெறுவதற்கான வழிமுறைகள்!

லிட்டருக்கு 100 கிமீ மைலேஜ் தரும் ரெனோ கார்... டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம்!

1 லிட்டர் எரிபொருளில் 1099 கிலோமீட்டர் மைலேஜ் சாதனை படைப்பு

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Shell & Gordon Murray have developed an Ultra Energy Efficient Concept Car. On April 22, 2016, Shell unveiled their all-new and unique concept vehicle. This concept model is being called Shell's Ultra Energy Efficient car. It gives an approximate mileage of 37.87 kilometre for per litre of fuel. Its weight is at a minimum of 550 kgs. To know more, check here...
Story first published: Saturday, April 30, 2016, 20:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X