உலக அளவில் டாப் 50 ஆட்டோமொபைல் இணையதளங்கள் பட்டியலில் இடம்பிடித்த டிரைவ்ஸ்பார்க்!

Written By:

உலக அளவில் டாப் 50 இணையதளங்கள் பட்டியலில் டிரைவ்ஸ்பார்க் தளம் இடம்பிடித்துள்ளது. SimilarWeb என்ற இணையதளம், உலக அளவில் முன்னிலை வகிக்கும் இணையதளங்கள் குறித்து பல்வேறு பிரிவுகளில் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

இதில், ஆட்டோமொபைல் பிரிவில் இந்தியாவிலிருந்து டிரைவ்ஸ்பார்க், டீம் பிஎச்பி, ஓவர்டிரைவ் மற்றும் ஆட்டோகார்இந்தியா ஆகிய நான்கு தளங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும், இந்த டாப் 50 ஆட்டோமொபைல் இணையதளங்கள் பட்டியலில் டிரைவ்ஸ்பார்க் தளம் 30வது இடத்தை பிடித்துள்ளது.

துவங்கப்பட்டு 5 ஆண்டுகளில் உலக அளவிலான ஆட்டோமொபைல் இணையதளங்களில் டிரைவ்ஸ்பார்க் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. வாசகர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒன்இந்தியா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் டிரைவ்ஸ்பார்க் தளம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 6 மொழிகளில் ஆட்டோமொபைல் தொடர்பான செய்திகளையும், தகவல்களையும் வழங்கி வாசகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறது.

பரபரப்புமிகுந்த சென்னை போன்ற பெருநகரங்களை சேர்ந்த வாசகர்களாகட்டும், கடைகோடி கிராமங்களில் வசிக்கும் வாசகர்களாகட்டும், டிரைவ்ஸ்பார்க் தளம் பன்மொழிகளில் ஆட்டோமொபைல் தகவல்களை கொண்டு சேர்த்து வருகிறது.

ஆட்டோமொபைல் பிரியர்களின் எதிர்பார்ப்புக்கும், ரசனைக்கும் ஏற்ப செய்திகளையும், வழிகாட்டுத் தகவல்களையும் வழங்குவதோடு, மன அழுத்தத்தில் உழலும் பல்லாயிரணக்கான வாசகர்களுக்கு ஆட்டோமொபைல் துறையில் பொதிந்து கிடக்கும் சுவாரஸ்யங்களை தினமும் அள்ளி தந்து மன அழுத்தத்திலிருந்து விடுதலை தரும் வடிகாலாகவும் விளங்குகிறது.

வாசகர்களின் எதிர்பார்ப்புகள் அத்துனையையும் பூர்த்தி செய்யும் விதத்தில், மாறுதல்களுடன் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. துவங்கப்பட்டு 5 ஆண்டுகளில் இந்த முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு நல் ஆதரவை நல்கி வரும் வாசர்களுக்கு நன்றி!

சிமிலர் வெப் வெளியிட்டிருக்கும் டாப் 50 ஆட்டோமொபைல் இணையதளங்கள் பட்டியல்!

English summary
Drivespark Gets Place In Top 50 Automobile Websites In The World. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos