ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது

By Ravichandran

ஸ்கோடா நிறுவனம் உருவாக்கி வரும், உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ள ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ள ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி எந்த விதமான உருமறைப்பு இல்லாமல் சோதனை ஓட்டம் மேற்கொள்ளும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

டிசைன்;

டிசைன்;

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவிக்கு, 2016 ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கோடா விஷன் எஸ் கான்செப்ட் மாடலின் டிசைன் அம்சங்கள் ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது.

தோற்றம்;

தோற்றம்;

ஸ்கோடா விஷன் எஸ் கான்செப்ட் மாடலில் உள்ளது போன்றே, ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியும் கூர்மையான ஹெட்லேம்ப்கள் மற்றும் முன் தோற்றம் கொண்டுள்ளது.

பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

பிளாட்ஃபார்ம்;

பிளாட்ஃபார்ம்;

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி, ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் மாடுலர் எம்க்யூபி பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி, 1.8 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இஞ்ஜின்கள் என 2 தேர்வுகளில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட மாடல், 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீட் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதன் டீசல் இஞ்ஜின் கொண்ட மாடல், 6-ஸ்பீட் 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடேன் வெளியாகலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் உலகலாவிய அறிமுகம், அக்டோபர் 2016, 1-ஆம் தேதி துவங்கும் 2016 பேரிஸ் மோட்டார் ஷோவில் நிகழ்த்தப்படும்.

Most Read Articles
English summary
Skoda's upcoming Production Ready Kodiaq SUV was spied testing in production ready guise. Spy Pics of Skoda Kodiaq SUV, caught during Testing was released. Skoda Kodiaq borrowed design aspects from Skoda Vision S concept, unveiled at 2016 Geneva Motor Show. Kodiaq is based on Volkswagen Group's modular MQB platform. To know more about Skoda Kodiaq SUV, check here...
Story first published: Wednesday, June 1, 2016, 22:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X