ஸ்கோடா கோடியாக் 7-சீட்டர் எஸ்யூவி அறிமுகம்: 2017ல் இந்தியா வருகிறது!

By Ravichandran

ஸ்கோடா கோடியாக் 7-சீட்டர் எஸ்யூவி பெர்லின் நகரில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு இந்த புதிய எஸ்யூவி இந்தியாவுக்கு வருவதையும் அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் முதல் 7-சீட்டர் எஸ்யூவியான கோடியாக் குறித்த கூடுதல் தகவல்களை இனி தொடர்ந்து காணலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

செக் குடியரசை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் தயாரிக்கும் தங்களின் முதல் 7-சீட்டர் எஸ்யூவியான கோடியாக் 7-சீட்டர் எஸ்யூவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெர்மனியின் பெர்லின் நகரில் அறிமுகம் செய்யப்பட்டது.

இது, இந்தியாவில் வரும் 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என ஸ்கோடா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

பெயர் காரணம்;

பெயர் காரணம்;

ஸ்கோடா நிறுவனம் தயாரிக்கும் கோடியாக் (Kodiaq) எஸ்யூவிக்கு, கோடியாக் என்ற பெயரானது, அலாஸ்காவின் கோடியாக் தீவில் உள்ள (Kodiak Island) 680 கிலோகிராம் எடை கொண்ட கோடியாக் (Kodiak) என்ற பெயரிலான கரடியின் பெயரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பிளாட்ஃபார்ம்;

பிளாட்ஃபார்ம்;

ஸ்கோடா கோடியாக் 7-சீட்டர் எஸ்யூவி, ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி எனப்படும் மாடுலார் ட்ரான்ஸ்வெர்ஸ் மேட்ரிக்ஸ் (modular transverse matrix (MQB)) பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி தான், மார்ச் மாதத்தில் 86-வது ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட விஷன்எஸ் டிசைன் ஸ்டடி கான்செப்ட்-டில் (VisionS design study concept) இருந்து ஏற்று கொள்ளப்பட்ட முதல் எஸ்யூவி ஆகும்.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் டிசைன், செக் க்யூபிஸம் மற்றும் பொஹிமியன் கிறிஸ்டல் ஆர்ட்-டின் பிரபாவம் கொண்டுள்ளது. ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கூர்மையான பாடிலைன்-கள் கொண்டுள்ளது.

மேலும், இது இதன் முகப்பு தோற்றம், நிக்ழ தலைமுறை ஸ்கோடா கார்களை போல் உள்ளது.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

ஸ்கோடா கோடியாக் 7-சீட்டர் எஸ்யூவியின் நீண்ட வீல்பெஸ் மற்றும் குறுகிய ஓவர்ஹேங்க்-கள் பெரிய இன்டீரியர் இருக்கும் என யோசிக்க வைக்கும். இதன் வீல் ஆர்ச்கள் சற்று ஆங்குளார் தோற்றம் கொண்டுள்ளது.

இதன் சிக்னேச்சர் சி-வடிவிலான டெயில் லேம்ப்கள், எல்இடி கவனிப்பு பெறுகின்றன.

ட்ரிம்கள்;

ட்ரிம்கள்;

ஸ்கோடா கோடியாக் 7-சீட்டர் எஸ்யூவி, ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என 3 ட்ரிம்களில் கிடைக்கிறது.

பெயின்ட் தேர்வுகள்;

பெயின்ட் தேர்வுகள்;

ஸ்கோடா கோடியாக் 7-சீட்டர் எஸ்யூவி, மொத்தம் 14 வகையிலான பெயின்ட் ஃபினிஷ் தேர்வுகளில் கிடைக்கலாம்.

பரிமாணங்கள்;

பரிமாணங்கள்;

ஸ்கோடா கோடியாக் 7-சீட்டர் எஸ்யூவி, 4,697 மில்லிமீட்டர் நீளமும், 1,882 மில்லிமீட்டர் அகலமும், 1,676 மில்லிமீட்டர் உயரமும் உடையதாகும்.

மேலும், இது 2,791 மில்லிமீட்டர் என்ற அளவிலான வீல்பேஸ் கொண்டுள்ளது.

எடை;

எடை;

நுழைவு நிலை டீஸ்ஐ இஞ்ஜின் மற்றும் ஃபிரன்ட்-வீல் டிரைவ் உடைய ஸ்கோடா கோடியாக் 7-சீட்டர் எஸ்யூவியின் எடை 1,452 கிலோகிராம் முதல் துவங்குகிறது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

ஸ்கோடா கோடியாக் 7-சீட்டர் எஸ்யூவி, ஆக்டாவியா மாடலை காட்டிலும் வெறும் 40 மில்லிமீட்டர் கூடுதலான அளவு உடையதாகும். ஆனால், இது சராசரி எஸ்யூவியை கூடுதல் சிறப்புகள் மிக்க எஸ்யூவியாக இருக்கும் என ஸ்கோடா கூறுகிறது.

ஸ்கோடா கோடியாக் 7-சீட்டர் எஸ்யூவியின் இன்டீரியரில் உள்ள செங்குத்தாக வடிவமைக்கபட்ட டேஷ்போர்ட், எளிமையாகவும், உபயோகிக்க எளிமையானதாகவும் உள்ளது. இது 4 ஏர் வென்ட்கள் மற்றும் சென்ட்ரல் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் தேர்வு முறையிலான ஆம்பியன்ட் லைட்டிங் இதன் இன்டீரியர் ஒரு தனித்துவமான சிறப்பை சேர்க்கிறது.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்;

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்;

ஸ்கோடா கோடியாக் 7-சீட்டர் எஸ்யூவியின் செண்டர் கன்சோல், 6.5 இஞ்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கும். வாடிக்கையாளர்கள் விருப்பபட்டால், இதற்கு பதிலாக தேர்வு முறையிலான ஸ்கோடாவின் 8.0 இஞ்ச் பொலிரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தி கொள்ளலாம்.

மேலும், இன்டக்டிவ் வயர்லெஸ் சார்ஜிங் மூலம் ஸ்மார்ட்ஃபோன்களை சார்ஜிங் செய்து கொள்ள முடியும்.

சீட்கள்;

சீட்கள்;

ஸ்கோடா கோடியாக் 7-சீட்டர் எஸ்யூவியின் ஸ்டாண்டர்ட் பேப்ரிக் சீட்களை, வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு லெதர் அல்லது அல்கான்ட்ரா கொண்ட சீட்களாக மேம்படுத்தி கொள்ளலாம்.

பூட் ஸ்பேஸ்;

பூட் ஸ்பேஸ்;

ஸ்கோடா கோடியாக் 5-ஸீட்டர் எஸ்யூவி, 2,065 லிட்டர் என்ற அளவில் இதன் செக்மென்ட்டிலேயே மிக அதிகமான பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது.

ஆனால், ஸ்கோடா கோடியாக் 7-சீட்டர் எஸ்யூவியின் 720 லிட்டர் என்ற அளவிலான பூட் ஸ்பேஸ் உடையதாக உள்ளது.

இஞ்ஜின்கள்;

இஞ்ஜின்கள்;

ஸ்கோடா கோடியாக் 7-சீட்டர் எஸ்யூவி, 5 வகையிலான இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில் 2 டிடிஐ பெட்ரோல் இஞ்ஜின்களும், 3 டிஎஸ்ஐ இஞ்ஜின்களும் அடங்கும். 1.4 லிட்டர் முதல் 2.0 லிட்டர் அளவிலான இஞ்ஜின்கள் 123 பிஹெச்பி முதல் 189 பிஹெச்பி வரையிலான பவரை வெளிப்படுத்தும்.

மிகவும் திறன்மிக்க 2.0 லிட்டர் டிஎஸ்ஐ இஞ்ஜின் 177 பிஹெச்பியையும், அதிக திறன்மிக்க 2.0 லிட்டர் டீசல் இஞ்ஜின் 189 பிஹெச்பி பவரை வெளிப்படுத்துகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஸ்கோடா கோடியாக் 7-சீட்டர் எஸ்யூவியின் இஞ்ஜின்களை பொருத்து, இவை 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6/7 ஸ்பீட் டீஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன்களுடன் வெளியாகும்.

ஸ்கோடா கோடியாக் 7-சீட்டர் எஸ்யூவியின் அனைத்து இஞ்ஜின்களும், ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டம் மற்றும் பிரேக் எனர்ஜி ரிக்கவரி வசதியுடன் வெளியாகிறது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

ஸ்கோடா கோடியாக் 7-சீட்டர் எஸ்யூவி, டிரைவிங் மோட் செலக்ட் (Driving Mode Select) மற்றும் டைனமிக் சேஸி கண்ட்ரோல் (Dynamic Chassis Control (DCC)) வசதிகள் கொண்டிருக்கும்.

டிரைவிங் மோட் செலக்ட் மற்றும் டைனமிக் சேஸி கண்ட்ரோல் மூலம் வாடிக்கையாளர்கள், ஸ்டீயரிங், ஆக்சிலரேட்டர், டீஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் மற்றும் சஸ்பென்ஷன் ஆகியவற்றை பல்வேறு மோட்களில் செட் (கான்ஃபிகியூர்-configure) செய்து கொள்ளலாம்.

விலை;

விலை;

ஸ்கோடா கோடியாக் 7-சீட்டர் எஸ்யூவி, 25 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய்க்கும் இடைப்பட்ட விலையில அறிமுகம் செய்யப்படலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஸ்கோடா ரேபிட் மான்டிகார்லோ எடிஷன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

புதிய ஸ்கோடா ஆக்டாவியா விஆர்எஸ் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

ஸ்கோடா ஆக்டாவியாவின் ஒரு மில்லியனாவது கார் உற்பத்தி செய்யபட்டு வெளியீடு

Most Read Articles
English summary
Czech automobile firm Skoda Auto has unveiled their first seven-seater SUV, the Kodiaq in Berlin few days ago. Skoda Kodiaq is named after Kodiak Island in Alaska, which is home of 680kg Kodiak bear. It will be launched in India during 2017. Skoda Kodiaq 7-seater SUV is based on Volkswagen Group's modular transverse matrix (MQB) Platform. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X