ஸ்கோடா ஆக்டாவியா ஆம்பிஷன் பிளஸ் வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம்

Written By:

ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டாவியா மாடலில் ஆம்பிஷன் பிளஸ் என்ற வேரியன்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பண்டிகை காலங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தான். தற்போது, இந்தொயாவில் பண்டிகை காலங்கள் நெருங்கி வருகிறது. இதனையொட்டி, பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய மாடல்கள் அறிமுகம் செய்வதிலும், தற்போதைய மாடல்களை மேம்படுத்தி வழங்குவதிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டாவியாவின் ஆம்பிஷன் பிளஸ் வேரியன்ட் பற்றிய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

ஸ்கோடா ஆக்டாவியா ஆம்பிஷன் பிளஸ்...

ஸ்கோடா ஆக்டாவியா ஆம்பிஷன் பிளஸ்...

செக் குடியரசை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம், தங்களின் ஆக்டாவியா ரேஞ்ச்சில் ஆம்பிஷன் பிளஸ் என்ற வேரியன்ட்டை அறிமுகம் செய்துள்ளனர். இந்த ஸ்கோடா ஆக்டாவியா ஆம்பிஷன் பிளஸ், மிட் வேரியன்ட் எனப்படும் நடுத்தர வேரியன்ட்டாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஸ்கோடா இந்தியா நிறுவனம், ஆக்டாவியா மாடலில் வழங்கப்பட்டு வந்த ஆக்டிவ் மற்றும் எலகன்ஸ் வேரியன்ட்களை விளக்கி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

ஸ்கோடா ஆக்டாவியா ஆம்பிஷன் பிளஸ் வேரியன்ட், சில கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஃபால்லோ மீ ஹெட்லேம்ப்கள், குரூஸ் கண்ட்ரோல், எலக்ட்ரிக் ஓஆர்விஎம்-கள், பேட்டில் ஷிஃப்ட்கள், ஸ்மார்ட்லிங்க், இஎஸ்சி, டிஆர்எல்கள் உடைய பை-செனான் ஹெட்லைட்கள், ஃபிரன்ட் மற்றும் ரியர் பார்க்டிரானிக் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஸ்கோடா ஆக்டாவியா ஆம்பிஷன் பிளஸ், கொடுக்கும் பைசாவுக்கும் கூடுதலான மதிப்பு கொண்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஸ்கோடா ஆக்டாவியா ஆம்பிஷன் பிளஸ் வேரியன்ட், 1.4 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இஞ்ஜின், 1.8 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் இஞ்ஜின் ஆகிய இஞ்ஜின் தேர்வுகளில் வெளியாகிறது.

விலை ஒப்பீடு;

விலை ஒப்பீடு;

ஸ்கோடா ஆக்டாவியா ஆம்பிஷன் பிளஸ் வேரியன்ட், ஸ்கோடாவின் டாப் என்ட் வேரியன்ட்டை காட்டிலும் சுமார் 2 லட்சம் ரூபாய் குறைவான விலையில் விற்கப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல், ஸ்கோடா நிறுவனம், தங்களின் ஆக்டாவியா ரேஞ்ச்சில் உள்ள அனைத்து வேரியன்ட்களின் விலைகளையும் மாற்றி அமைத்துள்ளது.

விலை விவரம்;

விலை விவரம்;

ஸ்கோடா ஆக்டாவியா ஆம்பிஷன் பிளஸ் வேரியன்ட்டின் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஸ்கோடா ஆம்பிஷன் 1.4 டிஎஸ்ஐ எம்டி வேரியன்ட் - 16.76 லட்சம் ரூபாய்

ஸ்கோடா ஆம்பிஷன் பிளஸ் 1.8 டிஎஸ்ஐ ஏடி வேரியன்ட் - 19.06 லட்சம் ரூபாய்

ஸ்கோடா ஸ்டைல் பிளஸ் 1.8 டிஎஸ்ஐ ஏடி வேரியன்ட் - 21.22 லட்சம் ரூபாய்

ஸ்கோடா ஆம்பிஷன் 2.0 டிடிஐ எம்டி வேரியன்ட் - 18.66 லட்சம் ரூபாய்

ஸ்கோடா ஆம்பிஷன் பிளஸ் 2.0 டிடிஐ எம்டி வேரியன்ட் - 19.33 லட்சம் ரூபாய்

ஸ்கோடா ஆம்பிஷன் 2.0 டிடிஐ ஏடி வேரியன்ட் - 19.99 லட்சம் ரூபாய்

ஸ்கோடா ஸ்டைல் பிளஸ் 2.0 டிடிஐ ஏடி வேரியன்ட் - 22.65 லட்சம் ரூபாய்

ஸ்கோடா ஆம்பிஷன் பிளஸ் 2.0 டிடிஐ ஏடி வேரியன்ட் - 20.68 லட்சம் ரூபாய்

குறிப்பு; இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் ஆகும்.

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda has launched Octavia Ambition Plus Variant in India. Skoda is offering Ambition Plus variant as mid trim option. Ambition Plus Octavia variant receives a few additional features. Follow me headlamps, cruise control, electric ORVMs, leather upholstery, paddle shifts, SmartLink, ESC, Bi-Xenon headlights with DRLs, front, and rear parktronic. To know more Skoda Octavia Ambition Plus Variant, check here...
Story first published: Saturday, September 17, 2016, 13:30 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos