ஸ்கோடா ஆக்டாவியாவின் ஒரு மில்லியனாவது கார் உற்பத்தி செய்யபட்டு வெளியீடு

Written By:

ஸ்கோடா நிறுவனம், தங்களின் ஒரு மில்லியனாவது மூன்றாம் தலைமுறை ஆக்டாவியா காரை உற்பத்தி செய்து வெளியிட்டுள்ளனர்.

ஸ்கோடா நிறுவனம் வழங்கும் மாடல்களிலேயே ஆக்டாவியா மாடல் தான் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மாடல் ஆகும். செக் குடியரசை மையமாக கொண்டு இயங்கும் இந்த ஸ்கோடா நிறுவனம், தாங்களின் மூன்றாம் தலைமுறை ஆக்டாவியா மாடலில் ஒரு மில்லியன் கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கிறது.

ஸ்கோடா நிறுவனம் வழங்கும் ஆக்டாவியா முதல் முறையாக 1996-ஆம் ஆண்டில் தயாரிக்கபட்டது. இது உருவாக்கபட்ட நாள் முதல் தற்போது வரை, சுமார் 5 மில்லியன்

ஆக்டாவியா மாடல் கார்கள் தயாரிக்கபட்டு விற்பனை செய்யபட்டுள்ளது. இந்த மூன்றாம் தலைமுறை ஆக்டாவியா காரின் உற்பத்தி 2013-ஆம் துவங்கபட்டது. சில வருடங்களிலேயே, மூன்றாம் தலைமுறை ஆக்டாவியா மாடலில் ஒரு மில்லியனாவது உற்பத்தி செய்யபட்டு வெளியாகியுள்ளது.

skoda-octavia-one-millionth-car-produced-and-released

தற்போது, இந்த மூன்றாம் தலைமுறை ஆக்டாவியா காரை தயாரிக்க, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் எம்க்யூபி பிளாட்ஃபார்மை உபயோகிக்கிறது. இதே எம்க்யூபி பிளாட்ஃபார்ம் தான் ஃபோக்ஸ்வேகன் கொல்ஃப், ஸ்கோடா ஆக்டாவியா மற்றும் ஆடி ஏ3 ஆகிய மாடல்களை தயாரிக்க பயன்படுத்தபடுகிறது. தற்போதைய ஸ்கோடா நிறுவனம் தங்களின் கார்களை, செக் குடியரசு, இந்தியா, கஜகஸ்தான், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் தயாரித்து வருகிறது.

இந்திய வாகன சந்தைகளில், ஸ்கோடா ஆக்டாவியா மாடல், ஸ்கோடா ரேபிட், ஸ்கோடா சூப்பர்ப், யெட்டி ஆகிய மாடல்களும் விற்பனை செய்யபடுகிறது. ஆக்டாவியா மாடலை, பெட்ரோல் மற்றிம் இஞ்ஜின் தேர்வுகளிலும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களின் தேர்வுகளில் கிடைக்கிறது.

ஸ்கோடா ஆக்டாவியாவின் அடிப்படை மாடல், 16.58 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கபடுகிறது.

English summary
Skoda Rolled out its One Millionth Octavia Model Worldwide. This Octavia sedan by Skoda is their most popular car. The Czech manufacturer confirmed that, they have manufactured over one million Octavia models. The milestone has been achieved with third generation model of Skoda's Octavia. To know more about this record, check here...
Story first published: Thursday, March 31, 2016, 16:11 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark