இன்னோவாவை தலையில் வைத்து கொண்டாட இன்னும் சில காரணங்கள்... !!

Written By:

கணிசமான முன்பதிவுகளுடன் செகண்ட் இன்னிங்சை வெற்றிகரமாக துவங்கியிருக்கிறது புதிய டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா கார். விலை சில லட்சங்கள் உயர்த்தப்பட்டாலும், தரம், சிறப்பம்சங்கள் கொண்ட காருக்கு இந்தியர்கள் வரவேற்பு கொடுக்க தயங்க மாட்டார்கள் என்பதற்கு புதிய இன்னோவாவும் உதாரணமாகியிருக்கிறது.

இந்த நிலையில், புதிய டொயோட்டா இன்னோவா காரை உயர்த்தி பேசுவதற்கான விஷயங்கள் ஏராளமாக உள்ளன. அதில், சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

கவுரவத்தை உயர்த்தும்...

கவுரவத்தை உயர்த்தும்...

பழைய இன்னோவா அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், இதன் டிசைன் மிக நேர்த்தியாகவும், கவனமாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. முகப்பும், பின்புறமும் மிகவும் சிறப்பாகவும், பிரிமியம் கார் போலவும் இருக்கிறது. எனவே, உங்கள் கவுரவத்தை வெகுவாக உயர்த்தும் மாடலாக இருக்கும்.

அதிவேக எம்பிவி

அதிவேக எம்பிவி

புதிய இன்னோவா காரின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் அதிகபட்சமாக மணிக்கு 175 கிமீ வேகம் வரை செல்லும். இதனுடன் ஒப்பிட்டு பேசப்படும் எம்பிவி ரக கார் மாடல்கள் இதனை வேகத்தில் விஞ்ச இயலாது. மேலும், இதற்கு இணையான சிறப்பம்சங்களை கொண்ட மஹிந்திரா எக்ஸ்யூவி500வைவிட இது அதிவேகமான மாடல் என்பதையும் கவனிக்க வேண்டும்.

உலகத் தரம்

உலகத் தரம்

டொயோட்டாவின் GD குடும்ப வரிசையிலான புதிய டீசல் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு GD வரிசை டீசல் எஞ்சின்கள் மேம்படுத்தப்பட்டன. உலகின் 90 நாடுகளில் GD வரிசை டீசல் எஞ்சின்களை டொயோட்டா பயன்படுத்துகிறது.

 புரொஜெக்டர் ஹெட்லைட்

புரொஜெக்டர் ஹெட்லைட்

ரூ.20 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட எம்பிவி கார் மார்க்கெட்டில் முதல்முறையாக புரொஜெக்டர் ஹெட்லைட்டுகளுடன் இன்னோவா வந்திருக்கிறது. இரவு நேர பயணத்தை இந்த புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.

 பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

பேஸ் மாடல்களில் கூட டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்றவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இருக்கின்றன. மேலும், டாப் வேரியண்ட்டில் 7 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, காரை நிலைத்தன்மையுடன் செலுத்தும் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், டொயோட்டாவின் GOA உடற்கூடு கட்டமைப்பு போன்றவை, பயணிப்பவர்களுக்கு மிகுந்த பாதுகாப்பை வழங்கும்.

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ்

புதிய இன்னோவா காரில் திரும்பிய பக்கமெல்லாம் பாட்டில் ஹோல்டர்கள் இருக்கின்றன. மொத்தம் 20 பாட்டில் ஹோல்டர்கள் உள்ளன. இதனால், நெடுந்தூர பயணங்களின்போது தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை எடுத்துச் செல்வதற்கு மிகுந்த வசதியாக இருக்கிறது. பல கார்களில் இது பெரிய பிரச்னையாக இருப்பதை நீங்கள் கண்டிருக்கிறலாம்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

ஸ்மார்ட் கீ, 7 இன்ச் டச்ஸ்கிரீனுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் என நவீன வசதிகளுக்கும் பஞ்சமில்லை.

இடவசதி

இடவசதி

எம்பிவி கார்களிலேயே நிறைவான இடவசதியை வழங்குகிறது இன்னோவா. மேலும், பொருட்களை வைப்பதற்கான இடவசதியும் மேம்பட்டிருக்கிறது.

 மதிப்பு

மதிப்பு

கார் வாங்குவது வாழ்க்கையில் பலருக்கு ஒருமுறை முதலீடாக இருக்கும் நிலையில், புதிய இன்னோவாவை வாங்கினால், நிச்சயம் மதிப்புமிக்கதாகவே இருக்கும். காரை வாங்கிய பின் குழப்பத்தையும், ஏமாற்றத்தையும் தவிர்க்கலாம். மேலும், அடிக்கடி காரை மாற்றும் எண்ணத்தையும் தவிர்க்கலாம்.

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல்

விரைவில் புதிய இன்னோவா காரின் பெட்ரோல் மாடலும் விற்பனைக்கு வர இருக்கிறது. டீசல் மாடலைவிட இந்த மாடல் நிச்சயம் குறிப்பிடத்தக்க அளவு விலை குறைவாக இருக்கும். இது இன்னோவா பிரியர்களுக்கு நிச்சயம் சிறந்த சாய்ஸாக இருக்கும் என நம்பலாம்.

 
English summary
Some Cool Things About New Toyota Innova Crysta.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark