டொயோட்டா கல்யா மினி எம்பிவி இந்தியா வரவேண்டும் என்பதற்கான காரணங்கள்!

Written By:

இந்தோனேஷியாவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் டொயோட்டா கல்யா என்ற புதிய எம்பிவி கார் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. டொயோட்டா நிறுவனத்தின் புத்தம் புதிய மாடலான இந்த கல்யா எம்பிவிக்கு இதுவரை 3,800க்கும் அதிகமான முன்பதிவுகள் கிடைத்திருக்கின்றன.

பார்ப்பதற்கு மினி இன்னோவா போன்று இருக்கும் இந்த புதிய எம்பிவி கார் இந்தியர்களின் ஆவலையும் தூண்டியிருக்கிறது. புதிய டொயோட்டா இன்னோவா பட்ஜெட்டை பார்த்து மிரண்டு போய் ஒதுங்கியவர்களுக்கு, இது மிகச்சிறப்பான சாய்ஸாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. டொயோட்டாவின் இந்த புதிய மினி எம்பிவி குறித்த தகவல்களை தொடர்ந்து காணலாம்.

மினி எம்பிவி

மினி எம்பிவி

டொயோட்டா அவன்ஸா எம்பிவி காரைவிட இது வடிவத்தில் சிறியது. இந் கார் 4,070மிமீ நீளமும், 1,655மிமீ அகலமும், 1,600மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல் பேஸ் 2,525மிமீ ஆக இருக்கிறது. இதன் நீளத்தை 70மிமீ அளவுக்கு குறைத்துவிட்டால், இந்தியாவில் 4 மீட்டர் எம்பிவி மாடலாக விற்பனை செய்ய முடியும்.

டிசைன்

டிசைன்

பொதுவான தோற்றத்தில் குட்டி இன்னோவா க்ரிஸ்ட்டா போலவே இருக்கிறது. அதேநேரத்தில், முன்புறத்தில் கிரில் அமைப்பிலும், ஹெட்லைடடிலும் வித்தியாசப்படுகிறது. பக்கவாட்டிலும், பின்புறத்திலும் அதிக ஒற்றுமைகள் உள்ளன. டெயில் லைட் டிசைன் கூட இன்னோவா க்ரிஸ்ட்டாவை போல இருக்கிறது.

7 சீட்டர்

7 சீட்டர்

டொயோட்டா கல்யா எம்பிவி காரில் 7 இருக்கை அமைப்பு வசதி கொண்டது. ஆனால், மூன்றாவது வரிசை சிறியவர்கள் பயணிப்பதற்கு ஏதுவானதாக இருக்கும்.

வரிச்சலுகை

வரிச்சலுகை

4 மீட்டர் காராக மாற்றப்பட்டால் வரிச்சலுகை கிடைக்கும். இதன்மூலமாக, மிக சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய முடியும். அதாவது, மாருதி எர்டிகா போன்ற மாடல்களுக்கு மாற்றான விலை குறைவான மாடலாக இதனை வாடிக்கையாளர்கள் பரிசீலிக்க வாய்ப்பு ஏற்படும்.

கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

டொயோட்டா கல்யா எம்பிவி கார் 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது பள்ளம் மேடான சாலைகளையும், வேகத்தடைகளையும் எளிதாக கடக்க உதவும்.

தயார் நிலையில் எஞ்சின்கள்

தயார் நிலையில் எஞ்சின்கள்

இந்தோனேஷியாவில் 88 பிஎஸ் பவரையும், 108என்எம் டார்க்கையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரையில், டொயோட்டா லிவா மற்றும் லிவா செடான் கார்களில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களை இதில் பயன்படுத்திக் கொள்ள வழி இருக்கிறது.

வசதிகள்

வசதிகள்

இது டட்சன் கோ ப்ளஸ் ரகத்தில் வந்தாலும், தரத்திலும், வசதிகளிலும் நிச்சயம் டொயோட்டாவின் பேர் சொல்லும் பிள்ளையாக இருக்கும். இந்த காரில் பவர் விண்டோஸ், கூரையில் அமைக்கப்பட்ட இரண்டாவது, மூன்றாவது வரிசைக்கான கூடுதல் ஏசி சிஸ்டம், 2 டின் மியூசிக் சிஸ்டம், மடக்கிக் கொள்ளும் இருக்கைகள் போன்ற பல சிறப்பம்சங்களை பெற்றிருக்கும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இந்த காரின் டாப் வேரியண்ட் மாடலில் முன்புறத்திற்கான டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை இடம்பெற்றிருக்கும்.

வரவேற்பு

வரவேற்பு

ரூ.10 லட்சம் பட்ஜெட் மார்க்கெட்டில் மாருதி எர்டிகாவை விட்டால் வேறு சிறந்த மாடல்கள் இல்லை என்ற நிலை இருக்கிறது. ஆனால், டொயோட்டா கல்யா வந்தால், அது எர்டிகாவை விட விலை குறைவாக இருக்கும் என்பதும், டொயோட்டாவின் மீதான நம்பகத்தன்மையும் வாடிக்கையாளர்களை கவரும்.

விலை

விலை

இந்தோனேஷியாவில்ரூ ரூ.6.6 லட்சம் என்ற இந்திய மதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ரூ.5 லட்சத்தையொட்டிய விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

வர்த்தக வாய்ப்பு

வர்த்தக வாய்ப்பு

இன்னோவா க்ரிஸ்ட்டா, டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற மாடல்கள்தான் டொயோட்டாவின் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எட்டியோஸ் செடான் கார் டாக்சி மார்க்கெட்டில்தான் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்தநிலையில், கல்யா எம்பிவி காரை களமிறக்கினால் ரூ.10 லட்சத்திற்குள்ளான மார்க்கெட்டிலும் டொயோட்டாவுக்கு நல்ல வர்த்தகத்தை பதிவு செய்ய முடியும்.

 
English summary
Some Important Things About Toyota Calya MPV Car.
Story first published: Thursday, August 11, 2016, 16:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark