டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்காத நிறுவனங்கள் எவை எவை?

Written By:

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தியாவின் மாபெரும் வாகன கண்காட்சி, நாளை டெல்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டாவில் துவங்க இருக்கிறது. முதல் இரண்டு நாட்கள் பத்திரிக்கையாளர்களுக்கான நாட்களாக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. வரும் 5ந் தேதி முதல் 9ந் தேதி வரை பொது பார்வையாளர்கள் வாகன கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

இந்தநிலையில், இந்த மாபெரும் கண்காட்சிக்காக பல வாகன நிறுவனங்கள் பல புதிய மாடல்களுடன் தயாராக உள்ளன. மொத்தம் 80 புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டோ எக்ஸ்போவை பயன்படுத்தி, தங்களது தயாரிப்புகளை எளிதாக பிரபலப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளன. ஆனால், இந்த ஆட்டோ எக்ஸ்போவை சில முன்னணி நிறுவனங்கள் தவிர்த்துள்ளன. எனவே, அந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை ஆட்டோ எக்ஸ்போவில் எதிர்பார்க்க முடியாது. அந்த நிறுவனங்களின் பட்டியலை ஸ்லைடரில் காணலாம்.

ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவை தவிர்த்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவையும் ராயல் என்ஃபீல்டு தவிர்த்தது நினைவிருக்கலாம். அதேநேரத்தில், இன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் புதிய ஹிிமாலயன் அட்வென்ச்சர் டூரர் பைக்கை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் எமது நிருபர் நேரடியாக வழங்கும் தகவல்களை உங்களுக்கு வழங்குகிறோம்.

பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இம்முறை பங்கேற்கவில்லை. ஆனால், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக நேற்று நடந்த விழாவில் புதிய 150 பைக் மாடலை நேற்று அறிமுகம் செய்தது. மேலும், ஆட்டோ எக்ஸ்போவிற்கு தயாராவதற்கு அதிக சிரத்தை எடுக்க வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.

 ஸ்கோடா ஆட்டோ

ஸ்கோடா ஆட்டோ

ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும் இந்த முறை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கவில்லை. எனவே, ஸ்கோடா தயாரிப்புகளை காண இயலாது. சிக்கன நடவடிக்கையாக இதனை அந்த நிறுவனம் மேற்கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.

 ஐசிஎம்எல்

ஐசிஎம்எல்

இன்டர்நேஷனல் கார்ஸ் அண்ட் மோட்டார்ஸ் லிமிடேட் நிறுவனமும் ஆட்டோ எக்ஸ்போவை தவிர்த்திருக்கிறது.

பாரத் பென்ஸ்

பாரத் பென்ஸ்

ஆட்டோ எக்ஸ்போவில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பதால், ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கவில்லை என்று பாரத் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 வால்வோ

வால்வோ

வால்வோ பஸ் மற்றும் டிரக் தயாரிப்பு நிறுவனமும் ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கவில்லை.

ஹார்லி டேவிட்சன்

ஹார்லி டேவிட்சன்

இந்தமுறை ஆட்டோ எக்ஸ்போவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் பங்கேற்கவில்லை. இது ஹார்லி பிரியர்களுக்கு ஏமாற்றத்தை தரும் விஷயமாகவே அமைந்துள்ளது.

புதிய யுக்தி

புதிய யுக்தி

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு தயாராவதற்கும், அரங்கை நிர்வகிப்பதற்கும் அதிக அளவில் மனித ஆற்றலும், பொருட் செலவும் தேவைப்படுகிறது. எனவே, பல முன்னணி நிறுவனங்கள் கூட டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை தவிர்க்கத் துவங்கியிருக்கின்றன. அதேநேரத்தில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாகவே, தமது புதிய தயாரிப்புகளை அவை வெளியிட்டு வருவது கவனித்தக்கது.

English summary
Some Leading Auto Brands to skip 2016 Indian Auto Expo.
Story first published: Tuesday, February 2, 2016, 11:39 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark