டெஸ்லா மாடல் 3 காரை முன்பதிவு செய்யும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை!

By Saravana

கடந்த மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆட்டோமொபைல் வரலாற்றில் இதுவரை வெளியான தயாரிப்புகளிலேயே அதிக முன்பதிவுகளை பெற்றிருக்கும் தயாரிப்பு என்ற பெருமையை இந்த கார் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், இந்த காருக்கு இந்தியாவிலிருந்தும் முன்பதிவு பெறப்படுகிறது. இந்த காரை வாங்குவதற்கு ஆவல் கொண்டிருப்போருக்காக சில முக்கியத் தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

தற்போது தயாரிப்பு நிலைக்கான மாடலாக டெஸ்லா மாடல் 3 மின்சார கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டாலும், உற்பத்தி துவங்கும்போது உட்புறத்தில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து டெஸ்லா கார் நிறுவன சிஇஓ எலான் மஸ்க் குறிப்பிட்டிருக்கும் செய்தி அனைவரின் ஆவலையும் மேலும் தூண்டியிருக்கிறது.

அது என்ன?

அது என்ன?

புதிய டெஸ்லா மாடல் 3 காரின் டேஷ்போர்டு அமைப்பு மிக எளிமையாக இருக்கும் என்றும், அதே நேரத்தில் இந்த காரின் ஸ்டீயரிங் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் கட்டுப்படுத்துவது, ஒரு விண்வெளி ஓடத்தை இயக்குவது போன்ற அனுபவத்தை டெஸ்லா மாடல் 3 கார் வழங்கும் என்று எலான் மஸ்க் குறிப்பிட்டிருப்பதுதான் தற்போது பலரின் ஆவலை மேலும் தூண்டியிருக்கிறது.

பெரிய திரை

பெரிய திரை

டேஷ்போர்டில் 15 இன்ச் திரை ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். இந்த திரையை சப்ளை செய்வதற்கு தென்கொரியாவை சேர்ந்த எல்ஜி நிறுவனம் ஆர்டரை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது ஏற்கனவே உங்களுக்கு தெரிந்த கதைதான். இந்த திரை மூலமாக காரின் இயக்கம், பொழுதுபோக்கு, நேவிகேஷன் உள்பட பல்வேறு வசதிகளை பெற முடியும். எனவே, டேஷ்போர்டில் பல கன்ட்ரோல் சுவிட்சுகள் இருப்பதற்கு பதிலாக, இந்த ஒரே திரை மூலமாக அனைத்து பணிகளும் செய்யப்படும்.

பூட் ரூம்

பூட் ரூம்

பின்புற விண்ட்ஷீல்டு சற்றே பின்னோக்கி வந்திருப்பதால், பூட் ரூமிற்கான மூடி சிறியதாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொருட்களை வசதியாக உள்ளே வைப்பதற்கு இது சிறப்பாக இருக்காது என்றும் பலர் விமர்சித்தனர்.

இது போதும்...

இது போதும்...

அப்படி இருந்தாலும், 7 அடி நீளமுடைய சைக்கிள், சர்ஃப்போர்டு போன்றவற்றை இந்த பூட் ரூமில் வைக்க முடியும். இதனால், மோசம் என்று கூற முடியாது. அதேநேரத்தில், பூட் ரூமில் சைக்கிள் போன்றவற்றை எளிதாக வைக்கும்படியாக வடிவமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்று எலான் மஸ்க்கும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

அமெரிக்காவில் கியா சோல் எலக்ட்ரிக் கார் 31,950 டாலர் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 7,500 டாலர் அமெரிக்க அரசால் சலுகை வழங்கப்படுகிறது. அதன் ரேஞ்ச் பார்த்தீர்களேயானால், வெறும் 150 கிமீ மட்டுமே. அதேபோன்று 42,400 டாலர் விலையில் விற்பனை செய்யப்படும் பிஎம்டபிள்யூ ஐ3 கார் வெறும் 130 கிமீ மட்டுமே ரேஞ்ச் தெரிவிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 241 கிமீ தூரம் வரை செல்வதற்கான பேட்டரி பேக் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது.

ஆனால்...

ஆனால்...

கியோ சோல், பிஎம்டபிள்யூ ஐ3 எலக்ட்ரிக் கார்களைவிட குறைவான விலை கொண்ட டெஸ்லா மாடல் 3 கார் குறைந்தபட்சமாக 346 கிமீ தூரம் ரேஞ்ச் செல்லும். கூடுதல் பேட்டரி பேக் மூலமாக 483 கிமீ தூரம் வரை சிங்கிள் சார்ஜுக்கு செல்லும் என்று தெரிவிக்கப்படுவதையும் வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டியிருக்கிறது.

விலை

விலை

டெஸ்லா மாடல் 3 கார் சிறந்த வரவேற்பை பெற்றிருப்பதற்கு காரணம் குறைவான விலைதான். ஆம், தற்போது விற்பனையில் இருக்கும் சொகுசு மின்சார கார்கள் மாடல்களில் குறைவான விலை கொண்ட கார் டெஸ்லா மாடல் 3 என்பதும் வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறது. மேலும், அந்தந்த நாட்டு அரசாங்கத்தின் மூலமாக, வரிச்சலுகைகள் பெறும் வாய்ப்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழல் நண்பன்

சுற்றுச்சூழல் நண்பன்

தற்போது பெட்ரோல், டீசல் கார்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் உலக அளவில் அமலுக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில், அதிக ரேஞ்ச், சரியான விலை, நவீன தொழில்நுட்ப வசதிகளை தரும் இந்த மின்சார கார் பெரிதும் கவர்ந்திருப்பதில் ஆச்சரியமில்லை.

 காத்திருப்பு காலம்

காத்திருப்பு காலம்

டெஸ்லா மாடல் 3 காருக்கு ஒரே வாரத்தில் 3.25 லட்சம் பேர் அடுத்து பிடித்து ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டனர். இத்தனைக்கும் அடுத்த ஆண்டில்தான் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. மேலும், தற்போதுள்ள ஆர்டர்களுக்கு மாடல் 3 கார்களை டெலிவிரி செய்வதற்கு குறைந்தது 3 ஆண்டுகள் பிடிக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, இப்போது முன்பதிவு செய்தால், ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கும். அல்லது இடையில் ஒரு காரை வாங்கி பயன்படுத்தி, மூன்று ஆண்டுகள் ஆன பின்னரே, இந்த புதிய காரை டெலிவிரி எடுக்க திட்டமிடுவது சாலச் சிறந்தது.

 உற்பத்தி அதிகரிப்பு

உற்பத்தி அதிகரிப்பு

டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனமே எதிர்பார்க்காத அளவு முன்பதிவு கிடைத்திருப்பதால், உற்பத்தியை அதிகரிப்பது குறஇத்து அந்நிறுவனம் தீவிரமாக பரீசிலித்து வருகிறது. ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்கள் வரை டெலிவிரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் டெஸ்லா இருக்கும் நிலையில், தொடர்ந்து முன்பதிவு குவித்து வருவதும் அந்த நிறுவனத்திற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் வரிச்சலுகை

இந்தியாவில் வரிச்சலுகை

இந்தியாவிலிருந்து காரை முன்பதிவு செய்து வருவோர், காரை பெறுவதற்கு குறைந்தது 2 ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.23 லட்சம் விலை மதிப்பு கொண்ட கார் இறக்குமதி வரி சேர்த்து ரூ.40 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. வரிச்சலுகை பெறுவது குறித்து அரசுடன் டெஸ்லா மோட்டார்ஸ் பேச்சு நடத்துவதாக தெரிகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், நிச்சயம் இந்த காரின் விலையில் சில லட்சங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் கட்டமைப்பு

இந்தியாவில் கட்டமைப்பு

இந்தியாவில் எலக்ட்ரிக் காருக்கான கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கும் டெஸ்லா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சாய்ஸாகவே டெஸ்லா மாடல் 3 அமையும். அத்துடன், ஒருமுறை முழமையாக சார்ஜ் செய்தால், 483 கிமீ தூரம் பயணிக்கும் என்பதால், நகரங்களுக்கு இடையில் பயணிப்போரும் இந்த காரை வாங்குவதற்கு இனி ஆர்வம் காட்டுவர்.

Most Read Articles
English summary
Some Things You Need to Know About the Tesla Model 3.
Story first published: Monday, April 11, 2016, 11:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X