இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது போனவில்லே ஸ்பீட் வீக் ரேஸ்!

Posted By: Meena

சாகசப் பயணங்களும், மயிர் கூச்செரியும் அட்வெண்ட்சரஸ் பயணங்களும் யாருக்குத்தான் பிடிக்காது? குறைந்தது அதைப் பார்க்கவாவது வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் விருப்பம்.

அப்படியான ஒரு த்ரில் ரேஸ் அமெரிக்காவின் உடா மாகாணத்தில் அமைந்துள்ள போனவில்லேயில் நடைபெறுவது வழக்கம். போனவில்லே உப்புப் படுகை மோட்டார் ரேஸ் உலகப் பிரசித்தம் பெற்றது.

ஸ்பீடு வீக் ரேஸ்

அங்கு அமைந்துள்ள உப்பு படிந்த நிலப்பரப்பிலும், கரடு முரடான பாதையிலும் வாகனங்களை வேகமாக இயக்கிச் செல்வதுதான் போனவில்லே ஸ்பீட் வீக் எனப்படுகிறது. இதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக வாகனங்களைக் கொண்டு ரேஸ் நடத்தப்படுகிறது.

உலக அளவில் ஆட்டோ ரேஸ் ஆர்வலர்களை ஆவலோடு எதிர்பார்க்க வைக்கும் சர்வதேச பந்தயத் திருவிழா இது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக இந்தப் போட்டிகள் நடைபெறாதது பெரும்பாலான ரேஸ் பிரியர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

பந்தயம் நடைபெறும் நிலப்பரப்பின் மேல் படிந்துள்ள உப்பின் அளவு குறிப்பிட்ட வரம்பைக் காட்டிலும் அதிகரித்ததே அதற்கு காரணம். சராசரி அளவைக் காட்டிலும் அதிகமான அளவு உப்பு படித்திருந்தால் அந்தப் பகுதியில் பந்தயத்தை நடத்துவது ஆபத்தானதாக முடியும்.

எனவே, கடந்த இரு ஆண்டுகளாக போனவில்லே ஸ்பீட் வீக் போட்டிகள் நடைபெறாமல் இருந்தது. இப்போது ரேஸ் ஆர்வலர்களை மகிழ்விக்கும் செய்தியாக, இந்த ஆண்டு அந்தப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

தெற்கு கலிஃபோர்னியா டைமிங் அஸோசியேஷன் (எஸ்சிடிஏ) தலைவரும், பந்தய ஒருங்கிணைப்பாளருமான பில் லட்டீன் மற்றும் போனவில்லே நேஷனல் நிறுவன தலைவர் பாட் மெக்டவல் ஆகியோர் ரேஸ் நடத்தப்படவுள்ள இடங்களுக்குச் சென்று அங்குள்ள உப்பின் அளவை ஆய்வு செய்துள்ளனர்.

உப்புப் படிந்ததன் அளவு சரியாக இருப்பதால் இந்த ஆண்டு போட்டிகளை எந்த விதமான தடைகளும் இன்றி நடத்தலாம் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த 1983- ஆம் ஆண்டு நடந்த போட்டியில் ஒரு பெரிய ரெகார்ட் செய்யப்பட்டது. 1,020 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனம் செலுத்தப்பட்ட அந்த சாதனை இன்னமும் முறியடிக்கப்படவில்லை.இந்த முறையாவது அந்த சாதனை தகர்க்கப்படுமா? என்பதைப் பார்ப்போம்.

English summary
Speed Freaks Rejoice! Bonneville Speed Week To Return After 2-Year Hiatus.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark