அதிரடி.... ஆடி ஏ-4.... அறிமுகமாவதற்கு முன்பே கேமராவில் சிக்கிய மாஸ் கார்...

By Meena

கார்களின் தல... என்றால் அது ஆடி நிறுவனத்தின் கார்கள்தான். அந்த பிராண்ட் மாடல்களில் சென்றால், காரை மட்டும் பார்க்காமல் உள்ளே யார் செல்கிறார்கள் என்பதையும் கவனிப்பார்கள்.

பிரெஸ்டீஜ் லுக், பிரம்மாண்ட டிசைன், கவர்ந்திழுக்கும் பிராண்ட் நேம், அட்ராக்டிவ் அம்சங்கள் என பல விஷயங்களில் ஆடி கார்களுக்கு நிகர் அவை மட்டுமே.

ஆடி ஏ4 கார்

இந்த ஆண்டு மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய மாடல்கள் என 10 கார்களை அறிமுகப்படுத்த ஆடி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதில் முக்கியமான மாடல் ஆடி ஏ-4 (ஐந்தாம் தலைமுறை). தற்போதுள்ள ஏ-4 மாடலில் இருந்து மெருகேற்றப்பட்டு வாடிக்கையாளர்களை வசியப்படுத்தும் வகையில் புதிய வடிவில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆடி ஏ4 கார் ரியர்

மேம்படுத்தப்பட்ட ஃபிப்த் ஜெனரேசன் ஆடி ஏ-4 மாடல் கார் வரும் ஆகஸ்ட் மாதம் களமிறங்கலாம் எனத் தெரிகிறது.

தற்போது மும்பை வீதியில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்ட அந்த மாடல், கேமராவில் சிக்கி வைரலாகியுள்ளது

2.0 லிட்டர் டிடிஐ எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ எஞ்சின் என இரு மாடல்களில் ஆடி ஏ-4 வரவுள்ளது. டர்போ சார்ஜ்டு 4 சிலிண்டர் கொண்ட டிடிஐ எஞ்சினானது 252 பிஎச்பி மற்றும் 370 என்எம் டார்க்கை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.

ஆடி கார்

4 சிலிண்டர்கள் கொண்ட டிஎஃப்எஸ்ஐ டீசல் எஞ்சினில், 190 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் உள்ளது. மொத்தம் 7 கியர்கள் இந்த மாடலில் உள்ளன. இதைத் தவிர மேட்ரிக்ஸ் எல்இடி விளக்குகள், எம்எம்ஐ இன்ஃபோயின்மென்ட் சிஸ்டம்,

3 டி சவுண்ட் சிஸ்டம் என பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

விரைவில் வெளியாகவுள்ள இந்த மேம்படுத்தப்பட்ட ஆடி ஏ-4 மாடலில் வேறு என்னென்ன புதிய அம்சங்கள் உள்ளன? என்பதுதான் கார் ஆர்வலர்களின் இப்போதைய பெரிய எதிர்பார்ப்பு.

Source

Most Read Articles
English summary
Spotted: Audi A4 Facelift Spotted Prior To Launch!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X