டெல்லியில் டீசல் இஞ்ஜின் வாகனங்களுக்கு விதிக்கபட்ட தடையை அகற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

Written By:

டெல்லி மற்றும் அதை உள்ளடக்கிய என்சிஆர் பகுதிகளில் டீசல் இஞ்ஜின் கொண்ட வாகனங்களுக்கு விதிக்கபட்ட தடை அகற்ற உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில், 2000 சிசி மற்றும் அதற்கும் கூடுதலான திறன் உடைய டீசல் இஞ்ஜின் கொண்ட வாகனங்களை விற்பதற்கு தடை விதித்து, உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 16ந் தேதி ஆணை வழங்கியது.

இதை எதிர்த்து, மஹிந்திரா, டொயோட்டா மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட 3 ஆட்டோபொமைல் நிறுவனங்கள், 4-ஆம் தேதி ஜனவரி அன்று,

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

இந்த மேல்முறையீடு தொடர்பான விசாரணையை ஜனவரி 5-ஆம் தேதி நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டது.

மேல்முறையீடு தொடர்பான விசாரணையை அடுத்தும், உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 16ந் தேதி ஆணையை ரத்து செய்ய மறுத்துவிட்டது.

supreme-court-upholds-ban-against-diesel-engine-vehicles

பெட்ரோல் வாகனங்களை காட்டிலும், டீசல் இஞ்ஜின்கள் கொண்ட வாகனங்கள் அதிகமாக மாசு வெளிப்பாடு செய்கின்றனவா அல்லது குறைந்த அளவில் மாசு வெளிப்பாடு செய்கின்றனவா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், இது குறித்து அதிகாரப்பூர்வமான ஆதாரங்களை வழங்குமாறு, 3 ஆட்டோபொமைல் நிறுவனங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

கூடுதலாக, 5 ஆண்டுகள் அல்லது அதற்கு கூடுதலான காலத்திற்கு மேல், டீசல் இஞ்ஜின் மூலம் இயங்கும் அனைத்து மத்திய அரசு வாகனங்களையும் மாற்ற வேண்டும் என மத்திய அரசை, உச்சநீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது.

தொடர்பான செய்திகளுக்கு, கிளிக் செய்க;

டெல்லியில் டீசல் வாகனங்கள் மீதான தடை: உச்சநீதிமன்றத்தில் கார் நிறுவனங்கள் மேல்முறையீடு

English summary
Supreme Court has upheld the December ruling, in which it passed orders to ban the sale of vehicles with Diesel engines larger than 2,000cc capacity. This ban by Supreme Court was challenged by Mahindra, Toyota and Mercedes-Benz on January 4, 2016. After accepting the plea for investigation on January 5, Supreme court upheld December ruling.
Story first published: Wednesday, January 6, 2016, 10:10 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark