இந்தியாவிற்கான மாருதி சுஸுகி இக்னிஸ் 2016 பேரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம்

By Ravichandran

இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ள மாருதி சுஸுகி இக்னிஸ் 2016 பேரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனம் தயாரித்து வழங்கும் காம்பேக்ட் கிராஸ்ஓவர் மாடல் ஆகும். பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனம், வெவ்வேறு வகையில் புதிய புதிய வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் 2016 பேரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுஸுகி இக்னிஸ் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

டிசைன்;

டிசைன்;

மாருதி சுஸுகி இக்னிஸ், சுஸுகி நிறுவனம் தயாரித்து வழங்கும் காம்பேக்ட் கிராஸ்ஓவர் மாடல் ஆகும். இது, சுஸுகியின் கிராஸ்ஓவர் ஸ்டைல் அம்சங்களுடன், எளிதாக உபயோகிக்க கூடிய வகையிலான, தனித்துவம்மிக்க டிசைன் அம்சங்களை கொண்டுள்ளது.

கேபின் ஸ்பேஸ்;

கேபின் ஸ்பேஸ்;

மாருதி சுஸுகி இக்னிஸ், போதுமான அளவுக்கு இடவசதி கொண்டுள்ளது. மேலும், இதன் ஒட்டுமொத்த டிசைன், இதை இயக்குபவர்களை கரடுமுறடான பரப்பிலும், நம்பிக்கையுடன் இயக்க வைக்கும் வகையில் உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மாருதி சுஸுகி இக்னிஸ், 4-சிலிண்டர்கள் உடைய, 1.2 லிட்டர் டியூவல்ஜெட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் இரு வடிவங்களில் கிடைக்கிறது. சுஸுகியின் எஸ்ஹெச்விஎஸ் எனப்படும் ஸ்மார்ட் ஹைப்ரிட் வெஹிகிள் சிஸ்டம் (Smart Hybrid Vehicle by Suzuki (SHVS)) தொழில்நுட்பம் கொண்டுள்ளது ஒரு வடிவமாகவும், எஸ்ஹெச்விஎஸ் தொழில்நுட்பம் இல்லாதது மற்றொரு வடிவமாக உள்ளது.

செயல்திறன்;

செயல்திறன்;

மாருதி சுஸுகி இக்னிஸ் காம்பேக்ட் கிராஸ்ஓவர் மாடலின் இஞ்ஜின், அதிக்கபடியாக 88 பிஹெச்பியையும், 120 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மாருதி சுஸுகி இக்னிஸ் மாடலின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும். வேரியன்ட்டை பொருத்து, இதன் இஞ்ஜின் 2 சக்கரங்களுக்கோ அல்லது 4 சக்கரங்களுக்கோ பவரை கடத்துகிறது.

அம்சங்கள்;

அம்சங்கள்;

மாருதி சுஸுகி இக்னிஸ், ஆடியோ மற்றும் மற்றும் நேவிகேஷன் செயலபாடுகள், ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பில் கார் பிளே ஆகியவற்றின் ஸ்மார்ட்ஃபோன் கம்பேட்டிபிளிட்டி வசதி உடைய டிஸ்பிளே, ரியர் வியூ கேமரா, புதிதாக வடிவமைக்கப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்கள் ஆகிய பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

மாருதி சுஸுகி இக்னிஸ் மாடலில், சுஸுகியின் டோட்டல் எஃப்ஃபெக்டிவ் கண்ட்ரோல் டெக்னாலஜி கான்செபெட் (Total Effective Control Technology (TECT) concept) உள்ளது. இது மிக உயரிய அளவிலான கொள்ளிஷன் பாதுகாப்பு அளிக்கிறது. இதை தாண்டி, இதில் இஎஸ்பி, ஃபிரண்ட் ஏர்பேக்குகள், சைட் ஏர்பேக்குகள், கர்டெயின் ஏர்பேக்குகள், உள்ளது. மேலும், லேன் டிபார்ச்சர் வார்னிங், வீவிங் அலர்ட் மற்றும் மெதுவாக செல்லும் போது, பாதசாரிகள் மற்றும் வாகனங்களுக்கு இடையே வேறுபாடுகளை அறிந்து கொள்ளும் வசதி ஆகிய ஏராளமான அம்சங்கள் உள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

மாருதி சுஸுகி இக்னிஸ் மாடலின் விற்பனை ஐரோப்பாவில் 2017-ல் துவங்க உள்ளது. இதற்கு பிறகு தான், இது பிற சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

இந்தியா வரும் ரஃபேல் போர் விமானங்கள்... அண்டை நாடுகளின் இம்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

இந்திய நெடுஞ்சாலைகள் குறித்து இதுவரை கேள்விப்படாத சுவாரஸ்யத் தகவல்கள்!

ரூ.2 கோடியில் புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்கிய சச்சின் டெண்டுல்கர்!

Most Read Articles
English summary
'Soon To Be Launched In India' Maruti Suzuki Ignis Debuts in 2016 Paris Motor Show in Paris. Maruti Suzuki Ignis, is the compact crossover from Japanese carmaker. Powering Suzuki Ignis is the 1.2-litre four-cylinder DualJet engine, which is available in two forms - with or without Suzuki's Smart Hybrid Vehicle by Suzuki (SHVS) system. To know more, check here...
Story first published: Saturday, October 1, 2016, 13:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X