மாருதி இக்னிஸ் காரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியானது

By Saravana

குறைவான விலை க்ராஸ்ஓவர் மாடலாக வடிவமைக்கப்பட்டிருக்கும் சுஸுகி இக்னிஸ் கார் விரைவில் மாருதி பிராண்டில் இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இக்னிஸ் கார் அறிமுகத்தை டீசர் மூலமாக மாருதி உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், இக்னிஸ் காரின் சர்வதேச மாடலுக்கான தொழில்நுட்ப விபரங்கள் இணையதளங்களில் வெளியாகியிருக்கின்றன. எஞ்சின் மற்றும், வடிவம் குறித்தத் தகவல்கள் தற்போது வெளியாகி ஆர்வத்தை தூண்டியிருக்கின்றது. அவற்றை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

வடிவம்

வடிவம்

மாருதி இக்னிஸ் கார் 3,700 மிமீ நீளம், 1,660மிமீ அகலம், 1,595 உயரமும் கொண்டது. இந்த கார் 2,435மிமீ வீல் பேஸ் உடையது.

இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யலாம்

இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யலாம்

பின் இருக்கையை 165மிமீ வரை நகர்த்திக் கொண்டு லெக் ரூம் எனப்படும் கால் வைப்பதற்கான இடவசதியை அதிகரித்துக் கொள்ள முடியும்.

வசதிகள்

வசதிகள்

க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், புளூடூத் மற்றும் யுஎஸ்பி இணைப்பு வசதி கொண்ட ஆடியோ சிஸ்டம் போன்றவற்றை கொண்டிருக்கும்.

பூட் ரூம்

பூட் ரூம்

மாருதி இக்னிஸ் காரில் 258 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் உள்ளது. பின் இருக்கையை மடக்கினால், பூட் ரூமை 415 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக அதிகரித்துக் கொள்ள முடியும்.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த காரின் சர்வதேச புதிய 1.25 லிட்டர் டியூவல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுஸுகியின் SHVS ஹைபிரிட் சிஸ்டமும் கொண்டதாக வருகிறது. இதற்காக, 3 பிஎச்பி பவரை அளிக்க வல்ல மின் மோட்டார் உள்ளது. எனவே, மைலேஜிலும் சிறப்பாக இருக்கும்.

டிரைவ் சிஸ்டம்

டிரைவ் சிஸ்டம்

2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் சுஸுகியின் ஆல் க்ரிப் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவுக்கான மாடல்

இந்தியாவுக்கான மாடல்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி இக்னிஸ் கார் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது. அத்துடன், இந்தியாவுக்கான தொழில்நுட்ப விபரங்கள் அப்போது வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Suzuki Ignis Specifications surface Online.
Story first published: Saturday, January 23, 2016, 17:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X