ஜப்பானில், 1.6 மில்லியன் கார்களை திரும்ப அழைக்கிறது சுஸுகி!

By Ravichandran

சுஸுகி நிறுவனம் சார்பாக தயாரிக்கபட்ட 1.6 மில்லியனுக்கும் கூடுதலான கார்கள் திரும்ப பெறப்படுகிறது.

குளிர்சாதனத்தில் இருக்கும் பிரச்னைகளால் இஞ்ஜின் நின்றுவிடும் பிரச்னைகள் நிகழ வாய்ப்புகள் உள்ளது. இது தொடர்பாக, தங்கள் நிறுவனம் சார்பாக தயாரிக்கபட்ட 1,616,125 கார்களை ரீகால் செய்யபடுவதாக ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் சுஸுகி மோட்டார் கார்பரேஷன் தெரிவித்துள்ளது.

சுஸுகி மோட்டார் நிறுவனம், ஷிஸௌகா பிராந்தியத்தில் உள்ள ஹமாமட்ஸு என்ற இடத்தை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது.

ஏர் கண்டிஷனர் கம்ப்ரெஸர்களில், லூப்ரிகேஷனுக்கு தேவையான ஆயில் குறைப்பாடுகளால், கார்கள் அதிக அளவில் சூடாகி, இஞ்ஜின் கோளாறுகளுக்கு உள்ளாகி நின்றுவிடுகிறது.

இந்த 1.6 மில்லியனுக்கும் கூடுதலான கார்களில், 1.3 மில்லியன் கார்கள், சுஸுகியால் நேரடியாக தயாரிக்கபட்டவையாகும். இதர மாடல்கள் மஸ்தா மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கபட்டவையாகும்.

suzuki-recalls-1-6-million-cars-repair-faulty-ac-issues

சுஸுகியால் தயாரிக்கபடும் அந்நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற மாடலான டால் வேகன் அல்லது டால் பாய் என்று அழைக்கபடும் வேகன் ஆர், வெர்டிகல் ஹேட்ச்பேக் உள்ளிட்ட 5 மாடல்கள் ரீகால் செய்யபடுகின்றன.

ரீகால் செய்யபடும் கார்கள், ஜனவரி 2008 முதல் மே 2015-க்கும் இடைபட்ட காலத்தில் தயாரிக்கபட்டவையாகும். லூப்ரிகண்ட் குறைபாடுகளால், 2011-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, 240 புகார்கள் முறைப்படி பதிவு செய்யபட்டுள்ளதாக சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால், இந்த லூப்ரிகண்ட் குறைபாடு மற்றும் அதனால் எழுந்த கோளாறுகள் காரணமாக இது வரை எந்த விதமான உயிரிழப்புகளோ, அல்லது விபத்துகளோ, காயங்களோ எதுவும் நிகழவில்லை. இருந்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, ரீகால் செய்ய முடிவு செய்துள்ளது.

Most Read Articles
English summary
Suzuki Motor Corporation has said that, it would recall 1,616,125 Cars. This Recall is due to an air conditioning fault, which could lead to engines stalling. Lack of oil necessary for lubrication in some cars, leads the air conditioner compressors to overheating and stopping of engines and engines failing as they decelerate.
Story first published: Friday, March 4, 2016, 15:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X