சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கின் டைகர் எடிஷன் அறிமுகம் - இந்தியாவிற்கு வருமா?

Written By:

சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக், புதிய ஸ்பெஷல் எடிஷன் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபலமாக விற்பனையாகும் ஆட்டோமொபைல் தயாரிப்புகளின் பெயரில் ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் விற்பனை செய்யபடுவது வழக்கம். அந்த வகையில், சுஸுகி நிறுவனமும், தங்களின் ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கில் ஒரு புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளனர்.

சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கின் புதிய ஸ்பெஷல் எடிஷன் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

லிமிட்டெட் எடிஷன்;

லிமிட்டெட் எடிஷன்;

ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனம், 'டைகர் எடிஷன்' என்ற ஸ்பெஷல் எடிஷன் சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கை அறிமுகம் செய்துள்ளனர். இது லிமிட்டெட் எடிஷன் முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் வெறும் 100 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கின் டைகர் எடிஷன் மாடலுக்கு, 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 92.49 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 118 என் எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கின் டைகர் எடிஷன் மாடலின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கின் டைகர் எடிஷன், அதிகப்படியாக மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

நிறம்;

நிறம்;

சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கின் டைகர் எடிஷன், ஆரஞ்ச் மற்றும் பிளாக் நிறங்களிலான டியூவல் டோன் பெயின்ட் வேலைப்பாடு கொண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கின் டைகர் எடிஷனின் சி பிள்ளர் பகுதியில், டோரா ('Tora') என்ற வார்த்தை ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டிருக்கும். டோரா என்ற வார்த்தைக்கு புலி என்ற பொருள் வருகிறது. சுஸுகி நிறுவனம், இந்த டைகர் எடிஷனை டூரின் ஸ்டைல் சென்டரில் வடிவமைத்து, உருவாக்கினர். இந்த சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கின் டைகர் எடிஷனின் அறியதன்மையை வெளிப்படுத்த ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜ்கள் மற்றும் மாடல் நம்பர் குறிப்பிடப்பட்டிருக்கும் என தகவல்கள் வெளியாகிறது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

சுஸுகி நிறுவனம், இந்த ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கின் டைகர் எடிஷனின் இன்டீரியர் குறித்து எந்த விதமான தகவல்களையும் வெளியிடவில்லை. சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கின் டைகர் எடிஷனின் இன்டீரியரும், எக்ஸ்டீரியர் போன்ற பெயின்ட் ஸ்கீமே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவிற்கு வருமா?

இந்தியாவிற்கு வருமா?

துரதிர்ஷ்டவசமாக, இந்த சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கின் டைகர் எடிஷன் இத்தாலியில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும், இது இந்தியாயில் விற்பனைக்கு கிடையாது என்றும் தகவல்கள் வெளியாகிறது.

விலை;

விலை;

சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கின் டைகர் எடிஷனை, வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், இதை ஸ்பெஷல் விலையில் புக்கிங் செய்து வாங்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த அக்டோபர் 31-ஆம் தேதிக்கு முன்னதாக புக்கிங் செய்தால், சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கின் டைகர் எடிஷனை 13,500 யூரோக்கள் (இந்திய மதிப்பில் 10.12 லட்சம் ரூபாய்) என்ற விலையில் வாங்கலாம். நவம்பர் மாதம் முதல், இந்த சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கின் டைகர் எடிஷனின் விலை 16,650 யூரோக்கள் (இந்திய மதிப்பில் 12.43 லட்சம் ரூபாய்) என்ற அளவில் இருக்கும்.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பதுங்கு குழிக்குள் தஞ்சமைடந்த மெர்சிடைஸ் எஸ்யூவி கார்... காரணம் என்ன?

போகிமான் விளையாடியபடி கார் ஓட்டியதால் நேர்ந்த விபரீதம்!

முன்னணி கார் நிறுவனங்களின் பெயர்களும், சுவாரஸ்யங்களும்!!

மேலும்... #சுஸுகி #suzuki
English summary
Suzuki has introduced its Swift hatchback in special avatar called 'Tiger Edition'. Only 100 units of this Tiger Edition Swift will be available for sale. Unfortunately, Swift Tiger Edition is on offer only in Italy and not for Sale for Indian customers. Swift Tiger Edition will be capable of attaining top speed of 165 km/h. There could also be special edition badges in it. To know more, check here...
Story first published: Thursday, October 6, 2016, 11:28 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark