கியா மோட்டார்ஸ் கார் ஆலைக்கு 400 ஏக்கர் நிலம்: தமிழக அரசு அறிவிப்பு

By Saravana Rajan

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் ஆலைக்கு சென்னை அருகே 400 ஏக்கர் நிலத்தை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் கார் நிறுவனம் இந்தியாவில் கார் வர்த்தக்தை துவங்க முடிவு செய்துள்ளது.

கியா மோட்டார்ஸ்

இதற்காக, இந்தியாவில் புதிய கார் ஆலையை அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறது. வரும் 2019ம் ஆண்டிலிருந்து முழு வீச்சில் கார் விற்பனையை துவங்கவும், ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் இந்தியாவில் கால் பதிக்கிறது கியா மோட்டார்ஸ்.

தனது தாய் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் தமிழகத்தில் கார் ஆலையை அமைத்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், கியா மோட்டார்ஸ் நிறுவனமும் தமிழகத்தில் கார் ஆலையை அமைப்பது குறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், தமிழகத்தை தவிர்த்து ஆந்திரா, குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் தனது கார் ஆலையை துவங்குவதற்கான சாதக, பாதகங்களை கியா மோட்டார்ஸ் ஆராய்ந்து வருகிறது. இந்த நிலையில், கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கார் ஆலை அமைப்பதற்கான நிலத்தை வழங்க தயாராக இருப்பதாக தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார்.

கியா மோட்டார்ஸ் நிறுவனம் 400 ஏக்கர் நிலத்தை கார் ஆலைக்காக கேட்டனர். அதில், 390 ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அவர் கூறினார். மேலும், கியா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ஆலையை துவங்குவார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

தமிழகத்தை விட்டு கார் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்காக வேறு மாநிலங்களுக்கு செல்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா இதுபற்றி சட்டசபையில் நேற்றுமுன்தினம் கேள்வி எழுப்பியற்கு, முதல்வர் ஜெயலலிதாவே நேரடியாக மறுத்து பேசினார். "எந்தவொரு நிறுவனமும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை," என்றும் அடித்து கூறினார்.

இந்தநிலையில், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் தமிழகத்தில் தொழிற்சாலையை அமைத்தால் அது நிச்சயம் வரவேற்கத்தக்க அம்சமாக இருக்கும். இந்தியாவின் டெட்ராய்ட் என்று பெருமையுடன் பேசப்படும் சென்னையில் மற்றுமொரு கார் நிறுவனத்தின் ஆலை மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை பெறுவர்.

Most Read Articles
English summary
TamilNadu Govt offers 400 acre land for Kia Motors.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X