டாடா மோட்டார்ஸ் வழங்கும் ஹெக்ஸா எம்பிவியின் அறிமுகம் எப்போது - முழு தகவல்கள்

By Ravichandran

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஹெக்ஸா எம்பிவியின் அறிமுகம் மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளது.

டாடா ஹெக்ஸா எம்பிவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டாடா மோட்டார்ஸின் திட்டங்கள்;

டாடா மோட்டார்ஸின் திட்டங்கள்;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். தற்போதைய நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு வருடத்திற்கு குறைந்தது 2 மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த 2016-க்கு, டாடா மோட்டார்ஸ், டாடா டியாகோ ஹேட்ச்பேக் மற்றும் ஹெக்ஸா எம்பிவியை அறிமுகம் செய்ய திட்டம் கொண்டிருந்தது.

அடுத்த அறிமுகம்;

அடுத்த அறிமுகம்;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், விரைவில் அறிமுகம் செய்ய உள்ள கார் மாடல்களை காட்சிபடுத்தியது.

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கையும் டாடா நிறுவனம், 2016-ஆம் ஆண்டு துவக்கத்திலேயே அறிமுகம் செய்ய ஆசைப்பட்டது. எனினும் இதன் அறிமுகம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு பிறகு தள்ளி போட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், டாடா ஹெக்ஸா எம்பிவி அடுத்து அறிமுகம் செய்யப்படலாம்.

போட்டி;

போட்டி;

டாடா ஹெக்ஸா எம்பிவி, இந்திய வாகன சந்தைகளில் டொயோட்டா இன்னோவா மற்றும் ரெனோ லாட்ஜி ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

தோற்றம்;

தோற்றம்;

டாடா ஹெக்ஸா எம்பிவி முன் தோற்றம் கட்டுமஸ்தாக உள்ளது.

இதன் தட்டையான முன் பானட், தடித்த மற்றும் பெரிய வீல் ஆர்ச்கள், பாடி கிளாட்டிங் மற்றும் ஸ்கிட் பிளேட்கள், டாடா ஹெக்ஸா எம்பிவிக்கு, எஸ்யூவி போன்ற தோற்றத்தை வழங்குகிறது.

பின் தோற்றம்;

பின் தோற்றம்;

டாடா ஹெக்ஸா எம்பிவி ஆங்குலார் மற்றும் கூர்மையான தோற்றம் கொண்டுள்ளது.

இதன் பின் பக்கத்தில் உள்ள ஹாரிஸாண்டல் டெயில்லேம்ப்கள், இதை கூடுதல் வலுவுள்ளதாக ஆக்குகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டாடா ஹெக்ஸா எம்பிவி, 2.2 லிட்டர் (2,179சிசி) வேரிகார் 400 டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 154 பிஹெச்பியையும், 330 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டாடா ஹெக்ஸா எம்பிவி, 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வெளியாகிறது.

பரிமாணங்கள்;

பரிமாணங்கள்;

டாடா ஹெக்ஸா எம்பிவி, 4764 மில்லிமீட்டர் நீளமும், 1895 மில்லிமீட்டர் அகலமும், 1780 மில்லிமீட்டர் உயரமும் கொண்டுள்ளது.

இஞ்ஜின் கொள்ளளவு பிரச்னை;

இஞ்ஜின் கொள்ளளவு பிரச்னை;

டாடா ஹெக்ஸா எம்பிவி, 2.2 லிட்டர் (2,179சிசி) வேரிகார் 400 டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இவ்வகை இஞ்ஜின்கள், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் உள்ள தடைகளின் கீழ் வருகிறது.

2,000 சிசி அல்லது அதற்கு கூடுதலான சிசி கொண்ட இஞ்ஜின் உடைய வாகனங்களின் விற்பனை டெல்லி மற்றும் என்சிஆர், கேரளா ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை மேலும் சில நகரங்களிலும், மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகிறது டாடா ஹெக்ஸா எஸ்யூவி!

புதிய டாடா எஸ்யூவி கான்செப்ட் மாடல் அறிமுகம்- படங்களுடன், விபரம்

ஜெயிக்கப் போகும் குதிரை எது? ஹெக்ஸா Vs இன்னோவா கிரிஸ்டா Vs லாட்ஜி Vs பிஆர்-வி

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Tata Motors has pushed the Launch of Hexa MPV further ahead in India. Tata Hexa has Tata Varicor 2,179cc diesel engine. Ban on diesel engines over 2,000cc exists in Kerala and is expected to be implemented in few more cities and states. Nation Green Tribunal will soon take decision on ban of diesel engines. Several factors like these delay launch of Hexa in India...
Story first published: Saturday, July 2, 2016, 19:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X