டாடா ஹெக்ஸா எம்பிவியின் புக்கிங் நவம்பர் மாதத்தில் துவங்கும்

By Ravichandran

டாடா ஹெக்ஸா எம்பிவியின் புக்கிங் வரும் நவம்பர் மாதத்தில் இருந்து துவங்கும் என செய்திகள் வெளியாகிறது. இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த ஹெக்ஸா எம்பிவியின் அறிமுகம், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதன் அறிமுகம் மீண்டும் தாமதாமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா ஹெக்ஸா எம்பிவி மற்றும் அதன் புக்கிங் கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஹெக்ஸா எம்பிவியின் அறிமுகம், 2017 ஜனவரிக்கு தள்ளி போடப்பட்டுள்ளது.

புக்கிங்;

புக்கிங்;

டாடா ஹெக்ஸா எம்பிவியின் புக்கிங், இந்தியா மூழ்குவதும் வரும் நவம்பர் மாதம் முதல் துவங்கும் என செய்திகள் வெளியாகிறது.

பிரச்சாரம்;

பிரச்சாரம்;

டாடா ஹெக்ஸா எம்பிவியின் மீடியா புரமோஷன் அக்டோபர் மாத இறுதி முதல் துவங்க உள்ளது. இந்த தகவலை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உயர்அதிகாரி மயான்க் பரீக் உறுதி செய்தார்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டாடா ஹெக்ஸா எம்பிவிக்கு 2.2 லிட்டர் வேரிகார் 400 டீசல் இஞ்ஜின் பொருத்தப்படும். இதன் இஞ்ஜின் 153.87 பிஹெச்பியையும், அதிகப்படியாக 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

டிரான்ஸ்மிஷன்;

டிரான்ஸ்மிஷன்;

டாடா ஹெக்ஸா எம்பிவியின் இஞ்ஜின், 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுடனும் வெளியாகும்.

போட்டி;

போட்டி;

டாடா ஹெக்ஸா எம்பிவி, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது, இது டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி5OO ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

டாடா ஹெக்ஸா எம்பிவி, தந்திரமான முறையில், டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டாவை விட குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும். இதன் விலை, 13 லட்சம் ரூபாய் - 14 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலை அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

போயிங் 727 விமானத்தை வீடாக மாற்றி வசிக்கும் அமெரிக்கர்... படங்களும், தகவல்களும்... !!

மாருதி ஸ்விஃப்ட் காரை நிசான் ஜிடிஆர் போல மாற்றி அசத்திய கேரள நிறுவனம்!

அதிகரித்து வரும் கார் திருட்டு சம்பவங்கள்... தூக்கத்தை தொலைத்த டீலர்கள்!

Most Read Articles
English summary
Tata Motors earlier planned on launching its all-new Hexa MPV in Indian market during November 2016. Surprisingly, Hexa launch has been delayed and pushed further back to January 2017. Bookings for all-new Tata Hexa will commence pan India from November onwards. Media promotions for Tata Hexa will commence from October-end. To know more, check here...
Story first published: Thursday, October 13, 2016, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X