டாடா கைட் 5 காருக்காக காத்திருக்கலாம்... ஏன் என்பதற்கான சில காரணங்கள்... !!

Written By:

காம்பேக்ட் செடான் கார்களுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து, அனைத்து நிறுவனங்களும் புதிய மாடல்களுடன் களமிறங்கிவிட்டன. ஆனால், இந்த செக்மென்ட்டையை கைகாட்டிய டாடா மோட்டார்ஸ் மூன்றாவது காம்பேக்ட் செடான் கார் மாடலை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.

இண்டிகோ சிஎஸ், ஸெஸ்ட் கார்களைத் தொடர்ந்து விரைவில் கைட் 5 என்ற பெயரில் அழைக்கப்படும் புதிய காம்பேக்ட் செடான் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் விற்பனைக்கு வந்து வெற்றிகரமான மாடலாக பெயர் பெற்றிருக்கும் டாடா டியாகோ காரின் அடிப்படையிலான செடான் மாடலாக வருவதோடு, ஸெஸ்ட் காரை விட குறைவான விலையில் வருவதும் இந்த கார் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமா, ஸ்லைடருக்கு வாருங்கள் உங்களுக்கு தேவையான கூடுதல் தகவல்களை காணலாம்.

டிசைனில் வித்தியாசம்

டிசைனில் வித்தியாசம்

டாடா டியாகோ காரை முகப்பு ஒத்திருந்தாலும், பக்கவாட்டிலும், பின்புறத்திலும் டிசைனில் முக்கிய வித்தியாசத்தை கண்டிருக்கிறது. அதாவது, பின்புறத்தில் கூரையுடன் இணைந்து பூட்ரூம் உயர்த்தப்பட்ட அமைப்புடன் கூடிய கூபே ரக மாடலாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.

 நேர்த்தியான அமைப்பு

நேர்த்தியான அமைப்பு

பெரும்பாலான காம்பேக்ட் செடான் கார்களின் பூட் ரூம் கத்தரி போட்டு வெட்டியது போன்று டிசைன் செய்யப்பட்டிருக்கும் நிலையில், டாடா கைட் 5 காரின் பூட் ரூம் மிக நேர்த்தியாக காருடன் இணைந்திருக்கிறது. இது போட்டியாளர்களைவிட மிக கவர்ச்சியாக இருக்கிறது. அத்துடன் மற்றொரு முக்கிய வசதியையும் வழங்குகிறது. அது என்ன?

பூட் ரூம் இடவசதி

பூட் ரூம் இடவசதி

இந்த காரின் கூரை அமைப்பு பூட் ரூமுடன் சேர்க்கப்பட்டு பிரம்மாண்டமாக காட்சி தரும் நிலையில், மற்றொரு மிகப்பெரிய பயன், பொருட்களை வைப்பதற்கான அதிக இடவசதி. ஆம். இந்த காரில் 421 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இடவசதி உள்ளது.

கவரும் அம்சம்

கவரும் அம்சம்

4 மீட்டருக்கும் குறைவான நீளமுடைய காம்பேக்ட் செடான் கார்களிலேயே அதிக பூட் ரூம் இடவசதி கொண்ட மாடல் இதுதான். தற்போது அதிகபட்சமாக ஹூண்டாய் எக்ஸென்ட் கார் 407 லிட்டர் பூட்ரூம் இடவசதி கொண்டது. ஆனால், அதைவிட அதிக பூட் ரூம் இடவசதி கொண்டதாக கைட் 5 கார் வருவது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்று கருதலாம்.

 விலை குறைவு

விலை குறைவு

வழக்கம்போல் மிக குறைவான விலை கொண்ட காம்பேக்ட் செடான் காராக டாடா மோட்டார்ஸ் நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, டாடா டியாகோ கார் போன்றே, இந்த காரும் நல்ல வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, தற்போது விற்பனையில் உள்ள மாடல்களைவிட விலை குறைவாக இருக்கும். ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சத்திற்குள் ஆரம்ப விலை நிர்ணயிக்கும் வாய்ப்புள்ளது.

 இன்டீரியர்

இன்டீரியர்

டாடா டியாகோ காரின் இன்டீரியர் அமைப்புதான் இந்த காரிலும் பயன்படுத்தப்படும். எனவே, இன்டீரியர் கவர்ச்சியாக இருப்பதுடன், பிற டாடா கார்களை போலவே இடவசதியும் சிறப்பாக இருக்கும். மேலும், ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும் என்பதும் கூடுதல் சிறப்பு.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

டாடா டியாகோ காரின் அதே பெட்ரோல், டீசல் எஞ்சின்கள்தான் இதிலும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 ரெவோடார்க் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

இரண்டு டிரைவிங் ஆப்ஷன்கள்

இரண்டு டிரைவிங் ஆப்ஷன்கள்

Eco மற்றும் City என இரண்டுவிதமாக எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும் வசதியும் இருக்கும். இதன்மூலமாக, ஓட்டுதல் நிலைக்கு ஏற்ப எஞ்சின் இயக்கத்தை மாற்றிக்கொள்ளவும், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கும் வழிவகுக்கும்.

 ஏஎம்டி மாடல்

ஏஎம்டி மாடல்

இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸும் எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டியாகோ காரின் பெட்ரோல் மாடல் மிகப்பெரிய ஹிட் அடித்திருக்கும் நிலையில், இந்த காரின் பெட்ரோல் மாடலுக்கும் அதிக வரவேற்பு இருக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

டாடா டியாகோ காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 23.84 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 27.28 கிமீ மைலேஜையும் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, டாடா கைட் 5 செடான் காரும் இதற்கு இணையான மைலேஜ் தரும் வகையில் இருக்கும் என்று நம்பலாம்.

 அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

இந்த ஆண்டு பண்டிகை காலத்தையொட்டி இந்த புதிய டாடா கைட் 5 கார் புதிய பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டியாகோ காரைவிட இந்த காருக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று டாடா மோட்டார்ஸ் மிகுந்த நம்பிக்கையுடன் கார் அறிமுகத்துக்கு தயாராகி வருகிறது.

 
English summary
Tata Kite 5 – Everything You Need to Know.
Story first published: Tuesday, June 28, 2016, 12:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark