டியாகோ காரைவிட டாடா கைட் 5 இன்னும் பெஸ்ட்டாக இருக்கும் என்பதற்கான காரணங்கள்!

Written By:

4 மீட்டர் நீளத்தில் செடான் காரை அறிமுகம் செய்து கார் நிறுவனங்களை திரும்பி பார்க்க செய்த, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்டிகோ, ஸெஸ்ட் கார்கள் வரிசையில் டாடா கைட் -5 என்ற புதிய காம்பேக்ட் ரக செடான் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஸெஸ்ட் காரைவிட விலை குறைவாக இருக்கும் என்பதால், இந்த கார் மீது வாடிக்கையாளர்கள் அதிக ஆவல் இருந்து வருகிறது. இந்தநிலையில், தற்போது விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு பெரும் உற்சாகத்தை தந்திருக்கும் டியாகோ காரை போன்றே டாடா கைட் 5 காரும் அதிக வரவேற்பை பெறும் வாய்ப்பு உள்ளது. அதாவது, டியாகோவைவிட அதிக வரவேற்பை பெறும் என்பதுதான் கணிப்பாக உள்ளது. அதற்கான சில காரணங்களை தொடர்ந்து காணலாம்.

முன்னணி மாடல்

முன்னணி மாடல்

டாடா டியாகோ காரின் வெற்றிக்கு அதன் அசத்தலான டிசைன் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. அதன் அடிப்படையில் உருவாகியிருக்கும் டாடா கைட் 5 கார் அதைவிட சிறப்பான டிசைன் தாத்பரியத்தில் வருகிறது.

அட்டகாசம்

அட்டகாசம்

பொதுவாக ஹேட்ச்பேக் கார்களில் டிக்கியை ஒட்டியது போன்று காம்பேக்ட் செடான் கார்கள் இருக்கும். ஆனால், இந்த கார் கூபே ரக மாடல் போன்று மிக நேர்த்தியாக டிக்கியிலிருந்து கூரை இணைக்கப்பட்டிருக்கிறது. எல்இடி டெயில் லைட் கிளஸ்ட்டரும் சிறப்பு. மொத்தத்தில் சிறப்பான டிசைன் கொண்ட காம்பேக்ட் செடான் காராக இருக்கும்.

வசதிகள்

வசதிகள்

டாடா டியாகோ காரை டெஸ்ட் டிரைவ் செய்தபோது அதன் ஹார்மன் ஆடியோ சிஸ்டத்தின் ஒலியின் தரம் நன்றாக இருந்தது. 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய அதே ஹார்மன் ஆடியோ சிஸ்டம்தான் இந்த காரிலும் இடம்பெறும். இது வாடிக்கையாளர்களை கவரும் மிக முக்கிய அம்சமாக இருக்கும்.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இந்த காரில் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல வசதிகளை ஒருங்கிணைத்து அளிக்கும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இருக்கும். ஒரே நேரத்தில் 10 ஸ்மார்ட்போன்களை இணைத்துக் கொண்டு அதிலிருந்து காரின் ஆடியோ சிஸ்டத்தில் பாடல்களை கேட்பதற்கான ஜூக் மொபைல் அப்ளிகேஷன் போன்றவை இந்த காரின் மதிப்பை வெகுவாக உயர்த்துகிறது.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

டாடா டியாகோ காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05சிசி டீசல் எஞ்சினும்தான் டாடா கைட் 5 செடான் காரிலும் இடம்பெறும். மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலிலும் அறிமுகம் செய்யப்படும். எரிபொருள் சிக்கனத்திலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை விஞ்சும்.

பூட்ரூம்

பூட்ரூம்

டாடா கைட் 5 செடான் காரில் 420 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் இருக்கிறது. அதாவது, காம்பேக்ட் செடான் கார்களிலேயே மிக அதிக பூட்ரூம் இடவசதி கொண்ட மாடலாக இருக்கும்.

விலை

விலை

டாடா டியாகோ கார் போன்றே, போட்டியாளர்களுக்கு சவால் தரும் விலையில் டாடா கைட் 5 செடான் கார் வர இருக்கிறது. இதுவே, இந்த காரின் வெற்றியை உறுதி செய்யும் காரணியாக அமையும். அத்துடன் அருமையான டிசைன், வசதிகள், பூட்ரூம் இடவசதி என எல்லாவற்றிலும் டாடா டியாகோ காரைவிட வாடிக்கையாளர்களுக்கு அதிக நிறைவை தரும்.

 
English summary
Tata Kite 5: Some Reasons Why It Could Be Bigger Than The Tiago.
Story first published: Tuesday, August 23, 2016, 17:28 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos