டாடா கைட் 5 காம்பேக்ட் செடானின் படங்கள் வெளியாகியது - முழு தகவல்கள்

Written By:

டாடா கைட் 5 காம்பேக்ட் செடானின் தயாரிப்பு நிலை மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகியது.

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டாடா கைட் 5...

டாடா கைட் 5...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், முன்னதாக 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

இதன் பின் பக்கத்து டிசைன் மூலம், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, இதன் தயாரிப்பு நிலை மாடலின் படங்கள் வெளியாகியுள்ளது.

Spy Pictures Credit - www.team-bhp.com

தோற்றம்;

தோற்றம்;

தயாரிப்பு நிலை கைட் 5 காம்பேக்ட் செடானின் தற்போது வெளியாகியுள்ள படங்கள் படி, இது ஏறக்குறைய 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்ட மாடல் போன்றே உள்ளது.

இதன் விவரகுறிப்புகள் அனைத்தும், டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், சப்-4 மீட்டர் காம்பேக்ட் செடான் காராக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளையே உருவாக்குகிறது.

Spy Pictures Credit - www.team-bhp.com

மாற்று;

மாற்று;

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள டாடா இண்டிகோ இசிஎஸ் மாடலுக்கு மாற்றாக அமைய உள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் அம்சங்களின் படி, டாடா கைட் 5, டாடா டியாகோ ஹேட்ச்பேக் வடிவமைக்கபட்ட அதே ப்ளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு, வடிவமைக்கபட்டுள்ளது.

டாடா கைட் 5 காம்பேக்ட் செடானின், முன் பக்க கிரில்லில் சில மாற்றங்களும், இதன் பூட் பகுதியில் சில அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

டாடா கைட் 5 காம்பேக்ட் செடானின் பூட் பகுதி பற்றி பேசுகையில், இதன் பூட் பகுதியானது, இந்தியாவில் உள்ள பிற சப்-4 காம்பேக்ட் செடான்களை காட்டிலும், மிகவும் வேறுபட்டுள்ளது.

ரியர்;

ரியர்;

சப்-4 காம்பேக்ட் செடான் பிரிவை சார்ந்ததாக இருந்தாலும், டாடா கைட் 5 அல்லது டியாகோ காம்பேக்ட் செடான் என்று அழைக்கபடும் இந்த மாடலின் ரியர் புரோஃபைல், ஜிடி பரம்பரையில் தோன்றிய மாடலை போன்றே உள்ளது.

இதன் சிறிய லிப் ஸ்பாய்ளர், டாடா கைட் 5 காம்பேக்ட் செடானை மேலும் ஸ்போர்ட்டியாக காட்சியளிக்க வைக்கிறது.

ஐரோப்பிய டிசைன்;

ஐரோப்பிய டிசைன்;

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், ஐரோப்பிய டிசைனிங் ஸ்டைலில் வடிவமைக்கபட்டுள்ளது. விவரகுறிப்புகளின் படி, இது நன்றாக காட்சி அளிக்கிறது.

கூடுதல் கவனம்;

கூடுதல் கவனம்;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தங்களுடைய கார்களின் உருவாக்கத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

சமீப காலங்களில், டாடா மோட்டார்ஸ் நிறுவன தயாரிப்புகளின் விற்பனையில் ஏற்பட்ட சரிவும், இதன் சந்தை மதிப்பு குறைந்ததும் மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.

இஞ்ஜின், பிற தகவல்கள்;

இஞ்ஜின், பிற தகவல்கள்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் மாடலுக்கு பொருத்தபட்ட ரெவோட்ரோன் மற்றும், டீசல் மாடலுக்கு பொருத்தபட்ட ரெவோடார்க் இஞ்ஜினும் தான், இந்த டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் மாடலிலும் பொருத்தபட உள்ளது.

ஆனால், இந்த டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் மாடல் மற்றும் அதன் சேஸிக்கு ஏற்றவாறு இதன் இஞ்ஜின்கள் ரி-ட்யூனிங் செய்யபடும்.

விலை;

விலை;

டாடா டியாகோ மாடலுக்கு சரியான முறையில் விலை நிர்ணயம் செய்தது போல், இந்த டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் மாடலையும் சரியான விலையில் அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் கார் அறிமுகம்

மாருதி செலிரியோவைவிட பெட்டராக இருக்குமா டாடா கைட்: எதில்?!

டாடா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Tata Kite 5 Compact Sedan Production Version was spotted recently and its Photos were leaked. It was showcased at 2014 Delhi Auto Expo. Kite 5 seems to be designed based on European designing style. Tata Kite 5 is expected to be a sub-four meter compact sedan. Tata Kite 5 will replace aging Indigo eCS. To know more about Tata Kite 5, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark