டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் கார் தயாரிப்பதில் முனைப்பு

By Ravichandran

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், எலக்ட்ரிக் கார் தயாரிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.

டாடா மோட்டார்ஸ், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்துடன் இணைந்து, இந்திய சந்தைகளுக்கு என பிரத்யேகமான எலக்ட்ரிக் காரை தயாரித்து வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த தகவலை, தலைமை தொழில்நுட்ப அதிகாரியான கோபிசந்த் கட்ரகட்டா உறுதி செய்தார்.

மற்றொரு உயர் அதிகாரியான முகுந்த் ராஜன், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஒரு எலக்ட்ரிக் காரின் மாடலை உருவாக்கியுள்ளது என்றும், பிற நிறுவனங்களுடன் இணைந்து இந்த எலக்ட்ரிக் காரின் தயாரிப்பு நிலை மாடலை உருவாக்க உள்ளோம் என தெரிவித்தார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 9.9% விற்பனை வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த ஏப்ரல் 2015-ஐ ஒப்பிடுகையில், தற்போது வர்த்தக பயன்பாடு வாகனங்கள் மற்றும் பயணியர் பயன்பாடு வாகனங்களின் விற்பனை 11% கூடியுள்ளது. டாடா மோட்டார்ஸ் இந்த எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தை வர்த்தக பயன்பாடு வாகனங்கள் மற்றும் பயணியர் பயன்பாடு வாகனங்களுக்கும் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

tata-motors-electric-car-project-for-indian-market

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கும் இந்த எலக்ட்ரிக் கார், அறிமுகம் செய்யபடும் நிலையில், மஹிந்திரா-வின் இ2ஓ (e2o) தான் முக்கிய போட்டி மாடலாக இருக்கும்.

இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனமும், 4-கதவுகள் கொண்ட எலக்ட்ரிக் காரை உருவாக்கி வருகிறது. இதுவும் விரைவில் அறிமுகம் செய்யபட்டு, விற்பனை கொண்டு வரப்படும் என தகவல்கள் வெளியாகிறது.

Most Read Articles
English summary
Tata Motors, along with Jaguar Land Rover is working on an electric vehicle for Indian market. The Chief Technology Officer, Gopichand Katragadda confirmed that an electric car project is ongoing. Tata Motors would have electric vehicle technology in both, passenger as well as commercial vehicles. To know more about new Electric Car from Tata, check here...
Story first published: Friday, May 6, 2016, 10:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X